காலா வில்லன் மீது தனுஸ்ரீயின் பாலியல் புகார்; நடிகைகள் ஆதரவு

காலா வில்லன் மீது தனுஸ்ரீயின் பாலியல் புகார்; நடிகைகள் ஆதரவு

nana patekarதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் விஷாலுடன் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா.

இவர் ஒரு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் காலா பட வில்லன் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் 2005 ஆம் ஆண்டு தான் அறிமுகமாகும் போதே இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

தனுஸ்ரீ பொய் புகார் கூறுவதாகவும் அவர் மீது தான் வழக்கு தொடுக்க போவதாகவும் நானா படேகர் கூறி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனுஸ்ரீயின் தைரியத்தை பாராட்ட வேண்டும். இந்த சினிமா துறையில் இருந்த மவுனத்தை உடைத்தற்கு தனுஸ்ரீக்கு நன்றி எனவும் நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நிஜ கலவரம்; உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த ஜிவி.பிரகாஷ் – அபர்ணதி

நிஜ கலவரம்; உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த ஜிவி.பிரகாஷ் – அபர்ணதி

gv prakash and abarnathiகண்ணகி நகர் என்றாலே அடிதடி, கேங்வார் அடிக்கடி நடக்கும். “ஜெயில்” படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கண்ணகி நகரில் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி, நந்தன்ராம், பாண்டி சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது, நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை தாக்க உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.

நிஜ பைட் இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வசந்தபாலன்.

அங்காடி தெரு, வெயில் இரு படங்களையும் யதார்த்தமாக படமாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்ற வசந்தபாலன் “ஜெயில்” படத்தில் குப்பத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமான முறையில் படம்பிடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி, சிற்பி மகன் நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை- ஜி.வி.பிரகாஷ், பாடல்கள்- கபிலன். சினேகன் வெயில் படத்திற்கு பிறகு “ஜெயில்” படத்தில் வசந்தபாலனுடன் மீண்டும் இணைகிறார்.

சண்டை-அன்பு அறிவு, நடனம்- சாண்டி, ராதிகா, வசனம்- பாக்யம்ஷங்கர், ராமகிருஷ்ணன். கலை-சுரேஷ்கல்லரி, கதை-திரைக்கதை-இயக்கம்-வசந்தபாலன்.

ஜி.வி.பிரகாஷ் மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கும் படம் “ஜெயில்”.

மிஷ்கின் இயக்கத்தில் சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை படங்களை வெளியிட்ட கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் இப்படத்தை தயாரிக்கிறார். எக்ஸ்கியூட்டிவ் புரொட்யூசர் பி.டி.செல்வகுமார்.

ரசிகர்கள் கொடுத்த அன்பு தொல்லையால் விஜய் எடுத்த புது முடிவு

ரசிகர்கள் கொடுத்த அன்பு தொல்லையால் விஜய் எடுத்த புது முடிவு

Vijay took new decision because of Pondicherry marriage crowd issueநடிகர் விஜய்க்கு தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் படங்கள் வந்தாலே இவர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

ஒருவேளை விஜய்யே நேரிடையாக வந்தால் சும்ம்மா இருப்பார்களா..? விஜய்யை கண்டதும் அந்த இடத்தையே ஒரு வழி செய்திருக்க மாட்டார்களா?

அப்படிதான் ஒரு சம்பவம் அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது.

தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஆனந்த் இல்ல திருமணத்திற்கு மனைவி சங்கீதாவுடன் சென்றிருந்தார் விஜய்.

அப்போது, அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியதால் விஜய்யும், சங்கீதாவும் கூட்ட நெரிசலில் சிக்கினர். பவுன்சர்கள் இருந்தும் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த திருமண மண்டபத்தில் உள்ள ஏராளமான சேர்களும் சேதமடைந்தன. இந்த வீடியோக்கள் இணையங்களில் வைரலானது.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இனிமேல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று விஜய் முடிவு செய்துள்ளாராம்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளின் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களை தனது இல்லத்துக்கே வரவழைத்து வாழ்த்தி பாராட்டுவது என முடிவு செய்துள்ளார் தளபதி.

Vijay took new decision because of Pondicherry marriage crowd issue

உடல் எடையை குறைக்க நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் செலவிடும் அனுஷ்கா

உடல் எடையை குறைக்க நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் செலவிடும் அனுஷ்கா

Actress Anushka spending Rs 1 Lakh per day to loss her weightயோகா டீச்சராக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் அனுஷ்கா.

நல்ல உயரம், அழகான ஸ்லிம் உடல், அருமையான நடிப்பு என தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் இவர்.

இதனிடையில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை குண்டாக மாற்றினார்.

அதன்பிறகு தன் பழைய உடல் அமைப்புக்கு கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறார்.

பாகுபலியின் தொடர்ச்சியாக ‘பாகுபலி 2’ படத்தில் பழைய உடல் அமைப்பில் நடிக்க முயற்சித்தார். ஆனால் அதுவும் முடியவில்லை. அப்படத்திற்காக சில கிராபிக்ஸ் செய்து ஸ்லிம்மாக காட்டினார்கள்.

தற்போதும் அவர் குண்டாகவே காணப்படுவதால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம்.

ஒரு யோகா டீச்சராக இருந்தும் தன்னால் பழைய நிலைக்கு வர முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறாராம்.

எனவே ஆஸ்திரியாவில் உள்ள ஒரு ஸ்பா கிளினிக்கு சென்று அங்கு உடல் எடையை குறைக்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அங்கு ஒரு நாள் சிகிச்சைக்கு கட்டணம் மட்டும் 1 லட்ச ரூபாயாம்.

ஆனது ஆகட்டும். எப்படியோ முடிச்சிட்டு ஸ்லிம்மாக வர அனுஷ்காவை வாழ்த்துவோம்.

Actress Anushka spending Rs 1 Lakh per day to loss her weight

செக்கச் சிவந்த வானம் கைவிட்டதால் சண்டக்கோழியை நம்பும் சரத்

செக்கச் சிவந்த வானம் கைவிட்டதால் சண்டக்கோழியை நம்பும் சரத்

Jimikki Kammal Appani Sarath bags role in Sandakozhi2மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்பாணி சரத்.

இவர்தான் ஓரிரு தினங்ளுக்கு முன் வெளியான மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் தாதா தியாகராஜனின் மருமகனாக நடித்திருந்தார்.

இது சரத்துக்கு தமிழில் முதல் படம் என்பதால் மிகவும் ஆவலுடன் இருந்தாராம்.

ஆனால் அவரின் காட்சிகள் சில நொடிக்களில் வந்து மறைந்துவிடும்.

இதனால் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம்.

எனவே விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சண்டக்கோழி-2 படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் சரத்.

Jimikki Kammal Appani Sarath bags role in Sandakozhi2

இசைப்புயல் ரஹ்மானுடன் இணைந்தார் அருண்ராஜா காமராஜ்

இசைப்புயல் ரஹ்மானுடன் இணைந்தார் அருண்ராஜா காமராஜ்

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayamநடிகர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்த அருண்ராஜா காமராஜா, அவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக கை கோர்த்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

ஜிவி. பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கி வரும் படம் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் இடம்பெறும் ‘பீட்டர் பீட் ஏத்து’ என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறாராம்.

இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘சர்வம் தாள மயம்’ பட பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayam

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayam

More Articles
Follows