விரும்பத்தக்க நபர்கள்: தனுஷ் & சிம்புவை முந்திய சிவகார்த்திகேயன் & அனிருத்

விரும்பத்தக்க நபர்கள்: தனுஷ் & சிம்புவை முந்திய சிவகார்த்திகேயன் & அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanவிஜய் டிவியில் மிமிக்கிரி & நிகழ்ச்சி தொகுப்பாளர் என தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.

2012 முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார்.

தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமடைந்த ஆண் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

இரண்டாவது இடம் இசையமைப்பாளர் அனிருத்.

கடந்த ஆண்டு அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் இதோ…

மூன்றாவது இடம் –தனுஷ்.

நான்காவது இடம்– அதர்வா

ஐந்தாவது இடம்– துருவ் விக்ரம்

ஆறாவது இடம்– கவின்

ஏழாவது இடம்– அர்ஜுன் தாஸ்

எட்டாவது இடம்– ஹரிஷ் கல்யாண்

ஒன்பதாவது இடம்–ஹிப்ஹாப் ஆதி

பத்தாவது இடம்–அர்ஜுன் தாஸ்

பதினோராவது இடம்–முகென் ராவ்

பன்னிரண்டாவது இடம்–சித் ஸ்ரீராம்

பதிமூன்றாவது இடம்–ஆதி

பதினான்காவது இடம்–ஆதித்யா பாஸ்கர்

பதினைந்தாவது இடம்–விஷ்ணு விஷால்.

பதினாறாவது இடம்– ஜீவா.

பதினேழாவது இடம்– சிம்பு.

பதினெட்டாவது இடம்– பிக் பாஸ் புகழ் தர்ஷன்.

துரோகம் செய்த விஷாலை சும்மா விட மாட்டேன்.. – மிஷ்கின்

துரோகம் செய்த விஷாலை சும்மா விட மாட்டேன்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal mysskinநடிகை பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் சென்னையில் நடைப்பெற்றது.

இதில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-

“விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினேன்.

அந்த படம் வெற்றி பெற்றதால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன்.

அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டி நானே படத்தை தயாரிக்கிறேன் என்றார்.

இந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா?

32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகும். ஆனால் ரூ.13 கோடி செலவு என சொல்கிறார்.

விஷால் சொல்வதில் உண்மை இல்லை.

அவரை சகோதரனாக பார்த்தேன். ஆனால் துரோகம் செய்தார்.

தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என கூறியுள்ளார்.

சினிமா இல்லாவிட்டாலும் என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன்.

ஆனால் விஷாலை சும்மா விடப்போவது இல்லை”

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் மக்கள்.. ; மீடியாக்களுக்கு ரஜினி நன்றி

அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் மக்கள்.. ; மீடியாக்களுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஓரிரு தினங்களுக்கு முன் மார்ச் 12ல் தனது அரசியல் பயணம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார நடிகர் ரஜினிகாந்த்.

அதில் 1996-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது.

அப்போதே முதலமைச்சர் பதவி வேண்டாம் என உறுதியாக இருந்தேன்.

மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன்.

முதல்வர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.

கட்சி வேற.. ஆட்சி வேற என்ற ஒரு விஷயம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என பேசினார்.

இந்த நிலையில் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

என நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ரூ 5 லட்சம் கொடுத்தா தான் ரஜினி பத்தி பேசுவாராம் சரத்குமார்.; இதான் காரணம்!

ரூ 5 லட்சம் கொடுத்தா தான் ரஜினி பத்தி பேசுவாராம் சரத்குமார்.; இதான் காரணம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini sarath kumarநடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று மார்ச் 14ல் ராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியின் மாற்று அரசியல் & மக்கள் புரட்சி பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

“ரஜினி பற்றி பேசினால் டிவி சேனல்களின் டிஆர்பி எகிறும் என்பதாலேயே நீங்கள் கேட்கிறீர்கள்.

அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் மக்கள்.. ; மீடியாக்களுக்கு ரஜினி நன்றி

ரஜினி குறித்து பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அப்புறம் பேசுறேன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல இன்னல்களைக் கடந்து எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்.

எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை…”

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் ஆரம்பமானது

சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் ஆரம்பமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanu and athulya new filmலிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம்

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்’ சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் ‘லாவெண்டர்’, தமிழில் ‘ஜாம்பவான்’ உள்ளிட்ட படங்களில் இணை – துணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீஜர் இப்படத்தை கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது.

இப்படத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க, பிராங்க் ராகுல், ராஜு, அதுல்யா, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில், ஜோமின் மேத்யூ படத்தொகுப்பை கவனிக்க, கலைக்கு நர்மதா வேணி பொறுப்பேற்று இருக்கிறார்.

தரண் இசையமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன அசைவுகளுக்கு பொறுப்பேற்க, அதிரடி காட்சி அமைப்புகளை நூர் கவனிக்கிறார்.

G அசோகன் இணை தயாரிப்பில், தயாரிப்பு மேற்பார்வை R K மனோகர் வசமும் நிர்வாக தயாரிப்பு K ஸ்ரீகாந்த் வசமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ‘நட்புன்னா என்ன தெரியுமா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்’ சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் ஒரு புதிய படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்

கே பாக்கியராஜ்
சாந்தனு
அதுல்யா
யோகி பாபு
ஆனந்த்ராஜ்
மனோபாலா
மயில்சாமி
மொட்ட ராஜேந்திரன்
பிராங்க் ராகுல்
ராஜு
ரேஷ்மா
மதுமிதா உள்ளிட்ட பலர்

தயாரிப்பு: லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகர் & ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்’ சிவசுப்பிரமணியன், சரவணபிரியன்

கதை, திரைகதை, வசனம், இயக்கம்: ஸ்ரீஜர்
ஒளிப்பதிவு: ரமேஷ் சக்கரவர்த்தி
படத்தொகுப்பு: ஜோமின் மேத்யூ
இசை: தரண்
கலை: நர்மதா வேணி
நடனம்: சதீஷ் கிருஷ்ணன்
உடைகள்: நிவேதா ஜோசப்
சண்டை பயிற்சி: நூர்
தயாரிப்பு மேற்பார்வை: R K மனோகர்
நிர்வாக தயாரிப்பு: K ஸ்ரீகாந்த்
இணை தயாரிப்பு: G அசோகன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: NRN நாராயணன்
ஷிஜு அலெக்ஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

பிக் பாஸ் கவின் – பிகில் அம்ரிதா நடிக்கும் லிப்ட்

பிக் பாஸ் கவின் – பிகில் அம்ரிதா நடிக்கும் லிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kavin in liftஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர்.

பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள்.

படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார். இறுதிச்சுற்று படம் உள்பட பல்வேறு படங்களில் சண்டைக்காட்சிகளை அமைத்த ஸ்டன்னர் சாம் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் ஜானர் திரில்லர் வகையைச் சார்ந்தது. படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்

படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது

More Articles
Follows