LUST STORIES 2 : திருமணத்துக்கு முன் டெஸ்ட் டிரைவ்.; ‘ஜெயிலர்’ நாயகி தமன்னாவின் அந்தரங்கம்

LUST STORIES 2 : திருமணத்துக்கு முன் டெஸ்ட் டிரைவ்.; ‘ஜெயிலர்’ நாயகி தமன்னாவின் அந்தரங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா என்றால் மக்களுக்கு பயப்பட்டோ அல்லது சென்சாருக்கு கட்டுப்பட்டோ ஆபாசக் காட்சிகளில் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

ஆனால் ஓடிடி தளங்கள் வந்த பிறகு ஆபாச காட்சிகள் எல்லை மீறி கொண்டிருப்பதை நாம் கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் வெப் சீரிஸுக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் வரம்பு மீறி போய்க்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் இன்று வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ பாகத்தை கூறலாம்.

அதன் விவரம் வருமாறு…

‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற ஹிந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் 2018ல் வெளியானது. இதில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர், கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கியிருந்தனர்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற பெயரில் ஆந்தாலஜி வெளியாக உள்ளது.

இன்று ஜூன் 6ஆம் தேதி இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த டீசரில்…

புதிதாக கார் வாங்க செல்வதற்கு முன் அந்தக் காரை நாம் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதில்லையா? அதுபோல கல்யாணத்திற்கு முன்பு ஒரு டெஸ்ட் டிரைவ் தேவை என்பதைப் போல வசனம் உள்ளது.

மேலும் தமன்னாவின் எல்லை மீறிய கவர்ச்சியும் உள்ளது.. படுக்கை அறை காட்சிகளும் ரசிகர்களை சூடேற்றும் வகையில் அமைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் LUST STORIES 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamannahs Lust Stories 2 teaser goes viral

‘பூல் புலையா-2’ படத்தின் தமிழ் ரீமேக் : தயாரிப்பாளர் டைரக்டர் ஹீரோ யார்.?

‘பூல் புலையா-2’ படத்தின் தமிழ் ரீமேக் : தயாரிப்பாளர் டைரக்டர் ஹீரோ யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் வருடம் ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘பூல் புலையா-2’.

அனீஸ் பாஸ்மி இயக்கியிருந்தார்.

இதில் நடிகர் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையும் செய்தது.

எனவே இந்த படத்தின் ரீமேக்க்கு நிறைய போட்டிகள் உருவானது.

இந்த நிலையில் ‘பூல் புலையா-2’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்றிருக்கிறார்.

விரைவில் இந்த படத்தின் இயக்குனர் யார்? நடிகர் நடிகைகள் யார்.? என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

காத்திருப்போம்…

Bhool Bhulaiyaa 2 Tamil remake rights updates

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கார்த்தி கூட்டணி

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கார்த்தி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் அழுக்கு பையனாக அறிமுகமானார் கார்த்தி.

இதன் பிறகு வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அவரை ஒரு அழுக்கு நாயகனாகவே காட்டியிருந்தார் செல்வராகவன்.

ஆனால் இந்த இரு படங்களுக்குப் பிறகு கார்த்திகை முற்றிலும் ஒரு மாடர்ன் லுக்கில் கல்லூரி பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக ‘பையா’ படத்தில் மாற்றி இருந்தார் லிங்குசாமி. 2010-ல் இந்த படம் வெளியானது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு ‘பையா’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு கார்த்தி்ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் ‘பையா 2’ பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

karthi join director lingusamy’s paiyaa 2

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘மாவீரன்’ படம் ஜூலை 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

மாவீரன்

sivakarthikeyan complete his maaveeran dubbing

‘இந்தியன் 2’ படத்தில் கமலை மிரட்டும் வில்லனாக பிரபல நடிகர்

‘இந்தியன் 2’ படத்தில் கமலை மிரட்டும் வில்லனாக பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் எஸ் ஜே சூர்யா.

ஆனால் அண்மைக்காலமாக இயக்கத்திற்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து நடிகராக முழு நேரமாக பிஸியாக இருந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.

வருகிற ஜூன் 16ஆம் தேதி எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘பொம்மை’ திரைப்படம் வெளியாகிறது.

இந்த படத்தை ராதா மோகன் இயக்க நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல் சாரை பற்றி பேச நிறைய இருக்கிறது. அதை இப்போதைக்கு பேச முடியாது என சூர்யா மேடையில் பேசி இருந்தார்.

அப்போதே இந்தியன் 2 பற்றிய யூகங்கள் கசிந்திருந்தன.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் எஸ் ஜே சூர்யா வின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ஷங்கர் இதற்கு முன்பு இயக்கிய விஜய்யின் ‘நண்பன்’ படத்திலும் தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

எஸ் ஜே சூர்யா

sj surya plays villain role in kamal’s indian 2

மறைந்த நடிகரின் இல்ல திருமணம்; மணமக்களை வாழ்த்திய நடிகர் ரஜினி

மறைந்த நடிகரின் இல்ல திருமணம்; மணமக்களை வாழ்த்திய நடிகர் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்.

இவர் பல கன்னட திரைப்படங்களிலும் ஒரு சில தமிழ், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் அம்பரீஷ் ‘ரிபல் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர்

இவர் ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா என்பதும் இந்த தம்பதிக்கு அபிஷேக் அம்பரீஷ் என்ற மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்

நடிகர் அம்பரீஷ் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில், அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக் அம்பரீஷ் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முன்னாள் குடியரசு துணை தலைவரான வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், இந்த திருமணத்திற்கு ‘கேஜிஎப்’ நடிகர் யாஷ் உள்பட பல கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ்

rajini attend rebel star Ambareesh son abhishek Ambareesh marriage

More Articles
Follows