காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!

காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamannah talks about comedy actor TSK in her interviewsசமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.

திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..

பெட்ரோமாக்ஸைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்,

சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் டிஎஸ்கே இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.. இருந்தாலும் எனது நடிப்பு பசிக்கு அதில் சரியான தீனி கிடைக்கவில்லையே என்கிற எண்ணம் இருந்தது..

அதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்து என் நண்பன் நடிகர் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தேன்.. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு சீசன்-7’-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது.

இதற்கு முன் தொலைக்காட்சியில் நடித்தது, சில படங்களில் நடித்தது என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக களம் இறங்கியது போல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று சிம்புவின் கையால் பரிசு பெற்றோம்.

இந்த சமயத்தில்தான் பெட்ரோமாக்ஸ் படத்தில் சினிமா ஆர்வமிக்க ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்க சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தார்கள் அப்போது அந்த வாய்ப்பு எனது நண்பன் அசாருக்கு தேடி வந்தது..

ஆனால் அந்த சமயத்தில் அவர், “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நான்கு காமெடி நடிகர்களில் ஒருவராக நடிக்க முடியாத சூழலில் அவர் இருந்தார்.

அதனால் இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக என்னை சிபாரிசு செய்தார்..

ஆனாலும் சில பல ஆடிசன்களுக்குப் பிறகே அந்த கேரக்டரில் என்னைத் தேர்வு செய்தார் ரோஹின் வெங்கடேசன்.

பல நகைச்சுவை நடிகர்கள் தங்களது மிமிக்கிரி திறமையால் பெரிய இடத்தை அடைந்துள்ளார்கள்.. எனக்கும் மிமிக்ரி திறமை இருந்தது என்பதால் அந்தவகையில் பெட்ரோமாக்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்..

காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது முதலில் நாங்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் கூட பெண்கள் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்து இறங்கினார்..

பெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகினார்.. படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், பாகுபலி காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிமிக்கிரி வசனங்களை பார்த்துவிட்டு இயக்குநரிடம் யார் இந்த பையன்? என்று விசாரித்துள்ளார் தமன்னா..

குறைந்த நாட்கள் தான் அவர் படப்பிடிப்பில் எங்களுடன் கலந்துகொண்டாலும் எந்த ஈகோவும் இல்லாமல் பழக ஆரம்பித்தவர் எனது வேண்டுகோளை ஏற்று, அவரது தீவிர ரசிகரான என் நண்பன் அசாரின் பிறந்தநாளுக்கு மொபைல் போனிலேயே வாழ்த்துச் சொல்லி கால் மணி நேரம் பேசினார்.

என் நண்பனுக்கு நான் கொடுத்ததிலேயே மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமல்ல பெட்ரோமாக்ஸ் பட ரிலீஸ் நேரத்தில் தமன்னா கலந்து கொண்ட ஒவ்வொரு பேட்டியிலும் படம் குறித்து கூறும்போது, தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியபோதுதான் என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியவந்தது.. இதைவிட பெரிய பாராட்டும் மகிழ்ச்சியும் ஒரு கலைஞனுக்கு என்ன இருக்க முடியும்?

படம் ரிலீசான சமயத்தில் என் தந்தைக்கு உடல் சரியில்லாமல் இருந்ததால், தியேட்டர்களில் ரசிகர்களிடம் எனக்கு கிடைத்த வரவேற்பை நேரில் ரசிக்க முடியவில்லை.

ஆனாலும் நண்பர்கள் அனைவருக்கும் எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டினார்கள். குறிப்பாக ஈகிள் ஐ நிறுவன தயாரிப்பாளர் சுதன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு தனது அடுத்தடுத்த படங்களில் கட்டாயம் எனக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு என வாக்குறுதியும் தந்துள்ளார்.

என்னுடைய மிமிக்கிரி காட்சிகளை விட எனக்குள் இருந்த நடிகன் எதார்த்தமாக வெளிப்பட்ட காட்சிகளை நிறைய பேர் பாராட்டியது சந்தோசத்தை கொடுத்தது.

மேலும் ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் என் நடிப்பைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நடிப்பில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

ஆனால் இந்தப் படத்தை பார்ப்பதற்கு, ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்கிற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது..

பெட்ரோமாக்ஸ் படம் பார்த்துவிட்டு இன்னும் சில பெரிய படங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. அவை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.. இதுதவிர ஹரிஷ் கல்யாணுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறேன்.

பெட்ரோமாக்ஸ் படத்தில் என்னுடைய கேரக்டருக்காக கிட்டத்தட்ட எட்டு கிலோ எடையை ஏற்றினேன்.. அதேசமயம் ஹீரோவாகவும் கதையின் நாயகனாகவும் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.. நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்பதுதான் தற்போது என்னுடைய எண்ணம்” என்கிற தெளிவான திட்டமிடுதலுடன் தான் இருக்கிறார் டிஎஸ்கே.

Tamannah talks about comedy actor TSK in her interviews

‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyan and priya bhavani shankarமிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண்.

விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர். ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. துவக்க விழா பூஜையில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக் கலைஞர்கள் கலந்து கொணடனர். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.

“வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்து போன்ற பரவசத்தையும், பரபரப்பையும் ஒரு சேரப் பெற்றது போலிருக்கிறது எனக்கு” என்று புன்னகையுடன் விவரிக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

” ‘பெல்லி சூப்லு’ படத்தை முதன் முதலாக பார்த்தபோது, எவ்வளவு எளிமையான மற்றும ஆழமான படம் இது என்று நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரீஸ் கல்யாணுக்கு உடனே பாேன் செய்து ‘பெல்லி சூப்லு’ படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான் என்று தெரிவித்தேன். இப்படி நான் சொன்னது உலகத்தின் காதுகளில் கேட்டுவிட்டதோ அல்லது வேறு என்ன வேடிக்கையோ தெரியவில்லை, இப்போது நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.

பிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். முழுக்க முழுக்க இது உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் படம் என்பதால் இயற்கை சாராம்சம் மிக்க படமாக இது இருக்கும். இயற்கை சாராம்சம் மிக்க படம் என்று குறிப்பிடுவதால், நம் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம். இயக்குநராக என் பயணத்தைத் தொடரக் காரணமாக இருந்த ஹரீஸ் கல்யாண் மற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் திரு.கொன்ரு சத்தியநாராயணாவுக்கும் தயாரிப்பில் உறுதுணையாக நிற்கும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்துக்கும் என்றென்றும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் இயக்குநர் கார்த்திக் சுந்தர் .

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தயாரி்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார் கோடலி முரளி கிருஷ்ணா. படத்தொகுப்பை கிருபா செய்ய, வசனங்களை தீபக் சுந்தர்ராஜன் எழுதுகிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.சதீஷ் ஏற்க, ஆடை அலங்கார வடிவமைப்புகளை அனுஷா மீனாட்சி செய்ய, புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார் சூர்யா. நடிகர் நாசர் கிளாப் அடித்து வைத்து படப்பிடிப்பை துவங்கி வைக்க , நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’!

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai in yenni thunigaஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையான படங்களாக அமைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. தற்போது அவர் நடித்து வரும் புதிய படமான ‘எண்ணித் துணிக’ அதிக கொந்தளிப்பு மிக்க திரில்லர் வகைப் படமாக தயாராக இருக்கிறது. ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் நிறுவனத்துக்காக சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர், ஏராளமான விளம்பரப் படங்களையும் எடுத்தவர். இன்று காலை (11-12-2019) ‘எண்ணித் துணிக’ படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாய பூஜையுடன் நடந்தது. இதில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையருடன் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

படம் குறி்த் து இயக்குநர் வெற்றி செல்வன் பகிர்ந்து கொணடதாவது….
“‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். “எண்ணித் துணிக கர்மம்… ” என்று துவங்கும் அற்புதமான குறள் இது, ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்து விட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள். இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெய் இந்த வேடத்தில் நடிக்கிறார். தகவல் தொழில் நுட்பக் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஜெய், அந்தக் கணத்துக்காக வாழ்கிறவர். அதற்காக அவர் ஜாலி மனோபாவம் கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை செலுத்தும் நல்லியல்பு கொண்ட நர்மதா என்ற வேடம்தான் அதல்யா ரவி ஏற்றிருக்கும் வேடம், சுண்ணாம்பு மற்றும் வெண்ணெய் போல் முரண்படும் இந்த இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் ஏற்படுவது இந்த முரண்பாட்டை வைத்து அல்ல. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஜெய்யின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில ஆட்களால். இதற்கு பதிலடி தரும் விதத்திலான நடவடிக்கைகளில் ஜெய் ஈடுபடத் தொடங்குகிறார். மொத்தத்தில் ‘எண்ணி்த் துணிக’ ரேஸ் வேகத்தில் செல்லும் திரில்லர் வகைப் படமாகும்” என்றார் இயக்குநர் வெற்றி செல்வன்.

படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைர்களைப் பற்றி பேசும்போது இயக்குநர் வெற்றி, “சிறப்பான நடிப்பைத் தருவதில் மட்டுமல்ல, நன்கு நடனமாடவும் தெரிந்தவர் ஜெய் என்புது அனைவருக்கும் தெரியும். எண்ணித் துணிக படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்து தன் முழுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவி நுட்பமான நடிப்பையும் திறம்பட வெளிப்படுத்தி நடிக்கக் கூடயவர். ஏற்கெனவே கேப்மாரி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் எண்ணித் துணிக படம் முழுக்க முழுக்க அதிலிருந்து இருவருக்கும் வேறுபட்டது. ‘சீதக்காதி’ படத்தில் அறிமுகமான நடிகர் வைபவின் அண்ணன் சுனில் ரெட்டி எதிர்மறை வேடத்தில் ‘எண்ணித் துணிக’ படத்தில் நடிக்கிறார். மற்றொரு எதிர்மறையான வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடப்பதால் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

அஞ்சலி நாயர் மற்றொரு பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்க. ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சபு ஜோஸப் படத்தொகுப்பையும், ஜி.என்.முருகன் சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர். என்.ஜே.சத்யா ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார், 96 படப்புகழ் கார்த்திக் நேத்தாபாடல்களை எழுத, விளம்பர டிசைனர் பொறுப்பை ராஜா ஏற்றிருக்கிறார்.

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj in walterநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர் உடையில் சிபிராஜின் சீற்றம் மிக்க தோற்றம், மிகப் பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தொடர்ந்து பெற்ற வண்ணம் இருக்கிறது. படம் பார்ப்பவர்களின் அட்ரிலின் சுரபி வேகமாக வேலை செய்யத்தக்க அளவிலான விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் படம் முழு்க்க விரவிக் கிடக்கின்றன. கோவில் நகரமென புகழப்படும் கும்பகோணத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில், யு.அன்பழகன் இயக்கத்தில் வளர்ந்த ‘வால்டர்’ துவக்க நிலையிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது பின் தயாரிப்புப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருக்கும் வால்டர் படத்தை, 11:11 நிறுவனம் சாப்பில் ஸ்ருதி திலக்
தயாரித்திருக்கிறார். படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியீடு மற்றும் உலகெங்கும் திரையரங்குளில் வெளியிடப்படும் தேதி குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படப்புகழ் ஷெரின் காஞ்ச்வாலா சிபிராஜின் ஜோடியாக நடிக்க, படத்தின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

மார்னிங் மேரேஜ்; ஈவினிங் ரஜினி பட சான்ஸ்.. சதீஷ் செம ஹாப்பி

மார்னிங் மேரேஜ்; ஈவினிங் ரஜினி பட சான்ஸ்.. சதீஷ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sathishஇன்று டிசம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சிந்து என்ற பெண்ணை நடிகர் சதீஷ் திருமணம் செய்துக் கொண்டார்.

இதே நாளில் தற்போது மாலை நேரத்தில் அவர் ரஜினியின் தலைவர் 168 படத்தில் சதீஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் புதுமாப்பிள்ளை சதீஷ்ம் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தலைவர் 168 பூஜை; ரஜினி குஷ்பூ மீனா பங்கேற்பு; கீர்த்தி-சூரி வரல

தலைவர் 168 பூஜை; ரஜினி குஷ்பூ மீனா பங்கேற்பு; கீர்த்தி-சூரி வரல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar 168 poojaரஜினி நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்பட படப்பிடிப்பு பூஜை உடன் இன்று(டிச.,11) சென்னையில் துவங்கியது.

ரஜினி, மீனா, குஷ்பு, சிவா, இமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால் பட பூஜையில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாளை ரஜினியின் பிறந்தநாள் அவர் ஊரில் இருக்கமாட்டார் என்பதை முன்பே அறிவித்திருந்தார்.

டிசம்பர் 2ஆம் வாரத்தில் இப்பட சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது-

More Articles
Follows