ஒரே நாளில் நாலு..; கோலிவுட்டை அசத்தும் யோகிபாபு

ஒரே நாளில் நாலு..; கோலிவுட்டை அசத்தும் யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 11th October 2019 Yogi Babus 4 movies were releasingதமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடிக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. ஆனால் காமெடி நடிகர்களுக்கு அவ்வப்போது பஞ்சம் வருவது உண்டு.

கவுண்மணி, செந்தில் இல்லாத குறையை விவேக், வடிவேலு தீர்த்தார்கள்.

வடிவேலு விவேக் இல்லாத குறையை சந்தானம், சூரி தீர்த்தார்கள்.

தற்போது சந்தானம் இடத்தை யோகி பாபு அடைந்துள்ளார் எனலாம்.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களிலும் பிரதான காமெடியனாகியிருக்கிறார்.

அண்மையில் கூட பிகில் பட இசை விழாவில் நிறைய காட்சிகளில் யோகி பாபு டூப் உடன் விஜய் நடித்திருந்தார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 11-ந்தேதி இவர் நடித்த 4 படங்கள் வெளியாகவுள்ளது.

பெட்ரோமாக்ஸ், இருட்டு, பப்பி, பட்லர் பாபு போன்ற படங்கள் திரைக்கு வருகிறதாம்.

On 11th October 2019 Yogi Babus 4 movies were releasing

பிறந்தாள் பராசக்தி-யில் இணையும் சரத்குமார்-ராதிகா-வரலட்சுமி

பிறந்தாள் பராசக்தி-யில் இணையும் சரத்குமார்-ராதிகா-வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar Radhika Varalaxmi team up for Peranthaal Parasakthiபிரபல நடிகை ராதிகா தனது ராடான் நிறுவனத்தின் மூலம் சீரியல்கள் மற்றும் படங்களை தயாரித்து வருகிறார்.

இவருக்கு அண்மையில் நடிகவேள் செல்வி என்ற பட்டத்தை திரையுலகினர் வழங்கினர்.

இந்த நிலையில் தற்போது இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளனர்.

அந்த குடும்ப படத்திற்கு பிறந்தாள் பராசக்தி என டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஓ.எம்.விஜய் என்பவர் இயக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

வைரமுத்து பாடல்களை எழுத வீரமணி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் தலைப்புடன் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

இது மதுரையை சுற்றியுள்ள கிராமத்தில் சண்டை ஆடுகளை வளர்க்கும் குடும்பத்தை பற்றிய படமாக இது உருவாகிறது. விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.

Sarathkumar Radhika Varalaxmi team up for Peranthaal Parasakthi

https://www.youtube.com/watch?v=xK6vyWTk8H8

பிக்பாஸ் பாப்பாங்களாம்; இவிங்களே RedLightVijayTV ன்னு திட்டுவாங்களாம்.!?

பிக்பாஸ் பாப்பாங்களாம்; இவிங்களே RedLightVijayTV ன்னு திட்டுவாங்களாம்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Tamil fans blaming Vijay TV Channelவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் சீசன் 2017 ஆண்டில் ஒளிப்பரப்பான போதே இதில் பங்கேற்ற ஓவியா படு பிரபலமானார்.

இவருக்கு கோடிக்கணக்கான ஓட்டுக்களை பார்வையாளர்கள் போட்டனர்.

இதில் மக்களின் ஆதரவு ஓவியாவுக்கு இருந்தாலும் நடிகர் ஆரவ் இதில் வின்னர் பட்டத்தை வென்றார்.

எனவே ஓவியா ஆர்மி முதல் பல சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கினர்.

மக்கள் போடும் ஓட்டுக்களுக்கு விஜய் டிவி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தன.

இருந்தபோதிலும் சில 2வது சீசனும் 2018ல் ஒளிப்பரப்பானது. இதில் நடிகை ரித்விகா வின்னர் ஆனார்.

தற்போது பிக்பாஸ் 3 ஒளிப்பரப்பாகி வருகிறது. இது முடிவடைய இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த நிலையில் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற கவின் அவராகவே வெளியேறினார். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

தற்போது நடிகர் தர்ஷனை விஜய் டிவியே வெளியேற்றியுள்ளனர். இதனால் ரசிகர்கள் கோபத்துடன் உள்ளனர்.

விஜய் டிவிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ரெட்லைட்விஜய்டிவி எனவும் தர்ஷன்ரியல்வின்னர் எனவும் டிரெண்ட் செய்து வருகின்றனர். #RedLightVijayTV #TharshanTheRealWinner

முதல் சீசன் ஒளிப்பரப்பாகும்போது விஜய் டிவி ரசிகர்களை மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இருந்தாலும் 100 நாட்கள் விடிய விடிய இதைப் பற்றியே பேசி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களாம்.

தற்போது அவர்களையே திட்டுகிறார்கள். ரசிகர்களே இது தேவையா?

உங்களின் பொன்னான நேரங்களை ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுத்தலாம். மேலும் நல்ல செய்திகளை டிரெண்டிங் செய்து மக்களின் கவனத்தை ஈர்க்கலாமே..

Bigg Boss Tamil fans blaming Vijay TV Channel

‘ராட்சசி’யை பார்த்து மாற்றத்தை கொண்டு வரும் மலேசிய அரசு

‘ராட்சசி’யை பார்த்து மாற்றத்தை கொண்டு வரும் மலேசிய அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raatchasi movie impresses Malaysian Educational Minister Maszlee Malik‘ராட்சசி’யைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்

அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இப்படத்தைப் பார்த்தாவது நமது அரசு பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா நமது அரசு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன்.

நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள்.
ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

மேலும், இப்படக்குழுவினருக்கும், நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஜோதிகாவும், இந்திய படத்தைப் பார்த்து அதில் கூறியதுபோல், தங்கள் நாட்டில் மாற்றம் கொண்டுவர விரும்பும் தங்களுக்கு நன்றி என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்துள்ளார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். கல்வித்துறை துணை அமைச்சர் ஒய்.பி. டியோ னி சிங், டி.ஜி.வி. தலைமை நிர்வாக அதிகாரி யோ ஓன் லாய் மற்றும் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் ஆகியோர் ‘ராட்சசி’ படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள டி.ஜி.வி. சேத்தியாவாக் என்ற மாலில் உள்ள ஆர்.ஜி.வி. திரையரங்கில் படம் பார்க்கவுள்ளனர்.

இதன்பிறகு கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கௌதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கரன் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி பங்குகொண்டுள்ளனர்.

Raatchasi movie impresses Malaysian Educational Minister Maszlee Malik

Official Breaking தளபதி 64 : விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதி

Official Breaking தளபதி 64 : விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi in Thalapathy 64‘பிகில்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’

அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ikk movie stillsதர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
யோகேஷ் (அறிமுகம்)
அனிகா விக்ரமன்
குரு சோமசுந்தரம்
ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு: தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன்
கதை-திரைகதை வசனம் இயக்கம்: பாபு தமிழ்
நிர்வாக தயாரிப்பு: பினு ராம்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராகுல்
இசை: அவினாஷ் கவாஸ்கர்
கலை: கல்லை தேவா
சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

More Articles
Follows