தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ சொல்லும் விஜய்யின் குட்டிக் கதை

தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ சொல்லும் விஜய்யின் குட்டிக் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petromax trailer‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா, யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட் பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரில் விஜய் ஒரு குட்டி கதை சொல்வது போல் காட்சிகள் உள்ளன.

ஐப்ரோ அழகி ப்ரியா வாரியரை கவர்ந்த துருவ் விக்ரம்

ஐப்ரோ அழகி ப்ரியா வாரியரை கவர்ந்த துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Prakash Varrierநடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து இதுவரை ஒரு படம் ரிலீசாகவில்லை. பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்தார். ஆனால் படம் திருப்தியில்லை எனவே படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

இதனையடுத்து துருவ் ஹீரோவாக நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இருந்தபோதிலும் துருவ்வுக்கு இளம் ரசிகைகள் நிறைய பேர் உள்ளனர். அவரும் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஒரு அடார் லவ் பட புகழ் கண்ணழகி பிரியா வாரியர் தன் இன்ஸ்டாகிராமில் துருவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரியா வாரியருடன் முதல் படத்தில் ஜோடியாக ரோஷனுடன் காதல் இருப்பதாகவும் மலையாள உலகில் பேசப்படுகிறது.

கமலுக்கு தேவர் மகன் 2; விஜய்சேதுபதிக்கு ஒரு படம்.. சேரன் ஓபன் டாக்

கமலுக்கு தேவர் மகன் 2; விஜய்சேதுபதிக்கு ஒரு படம்.. சேரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Cheranபாரதி கண்ணம்மா, தேசிய கீதம், ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், தவமாய் தவமிருந்து என தரமான படங்களை சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் சேரன்.

அண்மையில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் சென்னை வடபழனியில் ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் பங்கேற்றார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் விஜய்சேதுபதி தான்.

நீங்கள் ஒரு வெற்றி இயக்குநர் என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் இளைஞர்களிடம் சென்று சேரலாம்.

எனவே நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்றேன்.

கூடிய விரைவில் விஜய்சேதுபதியை இயக்குவேன்.

கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க ஆசை. கமல் சம்மதித்தால் எடுப்பேன். இதை கமலிடம் தெரிவித்து விட்டேன்” என்றார் சேரன்.

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் தனுஷ் மச்சான்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் தனுஷ் மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and saran sakthi விஜய்யின் ஜில்லா, தனுஷின் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சரண் ஷக்தி.

வடசென்னை படத்தில் தனுஷின் மச்சனாக நடித்திருந்தார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருந்தார்.

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‛நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறாராம்.

இந்த படத்தை அவள் பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

இப்படம் புகழ்பெற்ற கொரியன் படமான பிளைண்ட் பட ரீமேக் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் நாலு..; கோலிவுட்டை அசத்தும் யோகிபாபு

ஒரே நாளில் நாலு..; கோலிவுட்டை அசத்தும் யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On 11th October 2019 Yogi Babus 4 movies were releasingதமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடிக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. ஆனால் காமெடி நடிகர்களுக்கு அவ்வப்போது பஞ்சம் வருவது உண்டு.

கவுண்மணி, செந்தில் இல்லாத குறையை விவேக், வடிவேலு தீர்த்தார்கள்.

வடிவேலு விவேக் இல்லாத குறையை சந்தானம், சூரி தீர்த்தார்கள்.

தற்போது சந்தானம் இடத்தை யோகி பாபு அடைந்துள்ளார் எனலாம்.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களிலும் பிரதான காமெடியனாகியிருக்கிறார்.

அண்மையில் கூட பிகில் பட இசை விழாவில் நிறைய காட்சிகளில் யோகி பாபு டூப் உடன் விஜய் நடித்திருந்தார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 11-ந்தேதி இவர் நடித்த 4 படங்கள் வெளியாகவுள்ளது.

பெட்ரோமாக்ஸ், இருட்டு, பப்பி, பட்லர் பாபு போன்ற படங்கள் திரைக்கு வருகிறதாம்.

On 11th October 2019 Yogi Babus 4 movies were releasing

பிறந்தாள் பராசக்தி-யில் இணையும் சரத்குமார்-ராதிகா-வரலட்சுமி

பிறந்தாள் பராசக்தி-யில் இணையும் சரத்குமார்-ராதிகா-வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar Radhika Varalaxmi team up for Peranthaal Parasakthiபிரபல நடிகை ராதிகா தனது ராடான் நிறுவனத்தின் மூலம் சீரியல்கள் மற்றும் படங்களை தயாரித்து வருகிறார்.

இவருக்கு அண்மையில் நடிகவேள் செல்வி என்ற பட்டத்தை திரையுலகினர் வழங்கினர்.

இந்த நிலையில் தற்போது இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளனர்.

அந்த குடும்ப படத்திற்கு பிறந்தாள் பராசக்தி என டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஓ.எம்.விஜய் என்பவர் இயக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

வைரமுத்து பாடல்களை எழுத வீரமணி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் தலைப்புடன் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

இது மதுரையை சுற்றியுள்ள கிராமத்தில் சண்டை ஆடுகளை வளர்க்கும் குடும்பத்தை பற்றிய படமாக இது உருவாகிறது. விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.

Sarathkumar Radhika Varalaxmi team up for Peranthaal Parasakthi

https://www.youtube.com/watch?v=xK6vyWTk8H8

More Articles
Follows