அரசியல்.? சினிமா.? விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.!

Surprise announcement will be there from Actor Parthiban soonநானும் ரௌடிதான், கேணி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பார்த்திபன் நிறைய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் தன் அரசியல் பார்வை குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது…

குப்பத்து ராஜா என்ற படத்தில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம்.

இந்த மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள்.

இந்த படங்களை அனைத்துமே கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

நான் இப்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதால் இப்போதே அரசியலில்தான் இருக்கிறேன்.

காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல தொடர்ந்து செய்தாலே போதும்.

எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும்.” என்று கூறினார்.

ஆனால் அது அரசியலா? அல்லது சினிமா பற்றிய அறிவிப்பா? என்பதுதான் இப்போது குழப்பமாக உள்ளது.

Surprise announcement will be there from Actor Parthiban soon

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

கௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை…
...Read More
மலையாளத்தில் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான்…
...Read More

Latest Post