தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறவுள்ள ஒரு ரொமான்ஸ் பாடலின் காட்சியை அண்மையில் முடித்துவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Suriyas Thaana serndha Kootam first look and teaser release