அடர்ந்த காட்டுப் பகுதியில் சூர்யாவின் ‘கங்குவா’

அடர்ந்த காட்டுப் பகுதியில் சூர்யாவின் ‘கங்குவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, பிஜூ தீவுகளில் நடைபெற்றது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொடைக்கானலுக்கு அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

suriya’s Kanguva movie shooting Kodaikanal

பெண்களின் வாழ்க்கை சவால்கள்.; சமூக கருத்தை சொல்ல வரும் ‘சங்கர்ஷனா’

பெண்களின் வாழ்க்கை சவால்கள்.; சமூக கருத்தை சொல்ல வரும் ‘சங்கர்ஷனா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் “சங்கர்ஷனா’.

இந்த படத்தில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா நாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – ஆதித்யா ஸ்ரீராம்

கதை, திரைக்கதை, இயக்கம் – சின்னா வெங்கடேஷ்.

தயாரிப்பு – ஸ்ரீனிவாச ராவ்

படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது…

இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நியையில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.. சமூகத்தில் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை இருவாக்கி இருக்கிறோம்.

அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளோம்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

Sangarshana movie talks about Social message for Ladies

ராட்சசன் பட இயக்குனருடன் இணையும் அதிதி ஷங்கர். ஹீரோ இவரா ?

ராட்சசன் பட இயக்குனருடன் இணையும் அதிதி ஷங்கர். ஹீரோ இவரா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் மாறுபட்ட வகையைச் சேர்ந்த ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பரபரப்பான இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் அதிதி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவரது முதல் இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குனருடன் இது மூன்றாவது கூட்டணியாகும்.

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால், ராம்குமார் மூன்றாவது முறையாக இணைந்ததால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Aditi Shankar signs new movie with sensational director

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடலுக்கு குங்குமப்பூ அர்ச்சனை – ஒய்.ஜி.மகேந்திரன்

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடலுக்கு குங்குமப்பூ அர்ச்சனை – ஒய்.ஜி.மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது…

“இது புராண படம் இல்லை. சரித்திர படம். 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்து சாதனை புரிந்த மகானை பற்றிய படம். எல்லோரும் கடவுள் முன் சமம் என்று 1000 வருடங்களுக்கு முன்பே புரட்சி செய்தவர். இந்த கால இளைஞர்களுக்கு இந்தப்படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக அரசும் உதவி செய்யவேண்டும் என்று இந்த நேரத்தில் முதல்வர் அவர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.

இன்றைக்கும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் பூத உடல் இருக்கிறது. குங்கும பூ அர்ச்சனை நடக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளர் T.கிருஷ்ணன்.

இராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்தவர் . ஆனால் மதம் என்று அவரை கட்டுப்படுத்த முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக்கொடுத்தவர். அந்த மகானை பற்றிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 24ஆம் பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் சுவாமிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-

“இன்றைய தினம் நாம் எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும். நாம் இராமானுஜர் காலத்தில் இல்லையென்றாலும் இந்தப்படம் மூலம் நம்மை ராமானுஜர் காலத்துக்கு கொண்டு போயிருக்கார் தயாரிப்பாளர் கிருஷ்ணன். இராமானுஜர் 18 முறை நடந்து சென்று திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திரம் கற்றுக்கொண்டார். அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்க கூடாது. அப்படி சொல்லிக்கொடுத்தால் நீ நரகத்திற்கு போவாய் என்று நம்பி எச்சரித்தார்.

ஆனாலும் இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி அனைவரையும் அழைத்து அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படிப்பட்ட இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் தி.கிருஷ்ணன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

Even today, saffron is offered to Ramanuja’s body in Srirangam – YG Mahendran

ஸ்ரீ இராமானுஜர்

சிவாஜி இல்லையென்றாலும் கமல் இருக்கிறார் என்பது திருப்தியே.. – ராதாரவி

சிவாஜி இல்லையென்றாலும் கமல் இருக்கிறார் என்பது திருப்தியே.. – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ இராமானுஜர்’.

ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது…

“இராமானுஜர் 1027ஆம் ஆண்டு பிறந்தவர். இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது; நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது.

அந்த காலத்திலேயே சீர்த்திருத்த கருத்துக்களை பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். இந்தப்படத்தில் இராமனுஜராகவே வாழ்ந்திருக்கும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் விருது கிடைக்கும். இந்தப்படத்தை பார்த்தபோது கிருஷ்ணனை நான் இராமனுஜராகவே பார்த்தேன். நடிப்பு மட்டும் யார் சொல்லியும் வராது. கிருஷ்ணனுக்குள் இரமானுஜர் இருந்ததால்தான் அவரால் நடிக்க முடிந்தது. சீர்த்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது.

ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்க சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். “உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றவர், “நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி. வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக்கொள்ளனும் “என்றார்.

கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப் பட்டுக்கொள்ளலாம். இந்தப் படத்தை எல்லோரும் தியேட்டரில் போய் பார்க்கவேண்டும்”என்றார்.

Kamal is there even if Sivaji is not says Radharavi

ஸ்ரீ இராமானுஜர்

சென்னையில் வெண்பா கேலரி.; பெண்மையின் ‘வலிமை’-யை ஓவியமாய் சொல்லும் நடிகை ஷாம்லி

சென்னையில் வெண்பா கேலரி.; பெண்மையின் ‘வலிமை’-யை ஓவியமாய் சொல்லும் நடிகை ஷாம்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி.

இவர் குமரியான பிறகு கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்கும் காலகட்டத்தில்.., ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார்.

ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

ஷாம்லி

அவர் வரைந்த ஓவிய படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமான சட்டகத்தில் பொருத்தி காட்சிப் படுத்தியிருக்கிறார். ‌

இவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள்.. தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன. சில படைப்புகளில் பெண்கள் தங்களுடைய சமூக தளைகளிலிருந்து விடுபட்டு, இலட்சியத்தை நோக்கி நகரும் வகையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஓவியக் கலைஞர் ஷாம்லி தன்னுடைய படைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகத்தில் எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிப்பவர்களாக இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் பயன்படுத்தும் கோடுகள், வளைகோடுகள், வண்ணங்கள், வரையறைகள்… அனைத்தும் இவரது தனித்துவமான அடையாளத்தை உணர்த்துவதுடன், பெண்மையின் வலிமையையும், அவர்களிடம் மறைந்திருக்கும் புதிரான ஆற்றலையும் வலியுறுத்துவது போல் உருவாக்கியிருக்கிறார்.

ஷாம்லி

இவரது படைப்புகளை பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் 2019 ஆம் ஆண்டில் கண்காட்சியாக வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் தன்னுடைய படைப்புகளை கண்காட்சியாக இடம்பெற வைத்திருக்கிறார்.

மேலும் கடுமையாக உழைத்து உருவாக்கிய படைப்புகளை துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் அறுபது நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சர்வதேச பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடிய துபாய் உலக வர்த்தக மையத்தில் மார்ச் மாதம் 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நான்கு நாள் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற இவரது படைப்புகளை பார்வையிட்ட பார்வையாளர்கள், இவரின் திறமையை வியந்து பாராட்டியதுடன், தங்களுடைய எண்ணங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாம்லி.. வளர்ந்து திரைத்துறையில் மட்டுமல்லாமல் தன்னுடைய கவனத்தை ஓவியம், நாட்டியம் போன்ற கலை வடிவங்களிலும் செலுத்தி, இன்று சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞராக தனித்துவமான அடையாளத்தை பெற்றிருப்பது.. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என திரையுலகினர் ஷாம்லியை கொண்டாடி வருகிறார்கள்.

ஷாம்லி

Shamlee exhibits her artistic craftsmanship in painting

More Articles
Follows