‘கங்குவா’ பட ஷூட்டிங்கில் விபத்து.; நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

‘கங்குவா’ பட ஷூட்டிங்கில் விபத்து.; நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் சூர்யா என தெரியவந்துள்ளது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது.

ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைப்பு..

இதனையறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Big accident at Suriyas Kanguva Shooting spot

ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைக்க ‘மெகா 156’ ஷூட்டிங் தொடங்கியது

ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைக்க ‘மெகா 156’ ஷூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் #Mega156 திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது.

இந்த நிலையில் இன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

படப்பிடிப்பில் கிளாப் போர்டை டைரக்டர் மாருதி அவர்கள் அடித்து துவக்கி வைக்க, படக்குழுவினர் படத்தின் 9 வது காட்சியை படமாக்கினர்.

புகைப்படத்தின் பின்னணியில் அடர்ந்த காட்டை நாம் காணலாம். மேலும் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இணைந்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டரே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. பின்னர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட மற்ற இரண்டு போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை மேலும் அதிகரித்தன.

இப்படம் பார்வையாளர்களை பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும்.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர்.

ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Mega 156 Shooting started with Pooja

38 மொழிகளில் ‘கங்குவா’.. தமிழ் சினிமாவுக்கு புதிய கதவுகள் திறக்கும்.. – ஞானவேல் ராஜா

38 மொழிகளில் ‘கங்குவா’.. தமிழ் சினிமாவுக்கு புதிய கதவுகள் திறக்கும்.. – ஞானவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில், “கங்குவா உலகளவில் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஜமேக்ஸ், 3டி முறையிலும் இதை வெளியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியான பாதையில் போனால் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய கதவுகள் திறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

kanguva movie releasing in 38 languages

டங்கி : ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கின் ரொமான்டிக் சாங்

டங்கி : ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கின் ரொமான்டிக் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப் பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 – வை வெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர்.

ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.

மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது.

புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல்.

டங்கி

ஒரு தலைசிறந்த கதை சொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப் படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கத் தயாராக உள்ளார்.

இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 21 – 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

https://bit.ly/LuttPuttGaya-Dunki

Shahrukhs romantic song from Dunki released

ஆண்கள் மத்தியில் ஒரே பெண்.. ‘லாக்கர்’ ஓப்பனிங் கொடுக்கும்.; விக்னேஷ் & நிரஞ்சனா நம்பிக்கை

ஆண்கள் மத்தியில் ஒரே பெண்.. ‘லாக்கர்’ ஓப்பனிங் கொடுக்கும்.; விக்னேஷ் & நிரஞ்சனா நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் & யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர்’என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.

இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.

இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே ‘இறுதிப்பக்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.

நாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.

வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.

இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.

படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில்,இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது,

“இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ”தம்பிகளா நல்லா பண்ணுங்க” என்று ஊக்கப்படுத்துவார்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

இன்னொரு இயக்குநர் ராஜசேகர் பேசும்போது…

” நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .

இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை.

அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது…

” எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார்.இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .

ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி”என்றார்.

நாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,

“எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது.

உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன்.
அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது.

அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.

எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..

ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதை எடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைபிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும் சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.

இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன்.

இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி” என்றார்.

விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.

Vignesh and Niranjani speech at Locker Press Show

த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு.; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு.; போலீசார் சம்மன்

த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு.; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு.; போலீசார் சம்மன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கன்னியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (21.11.2023) *நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச IPC ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது.

நாளை நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன்.

Police filed 2 cases on Mansoor Alikhan on Trisha issue

More Articles
Follows