தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா மற்றும் வெங்கட் பிரபு இணைந்த மாசு என்கிற மாசிலாமணி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தனக்கு பேர் வாங்கி கொடுத்த ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்து சிக்ஸர் அடிக்க இருக்கிறார் வெங்கட் பிரபு.
முதல் பாகத்தில் நடித்த நிறைய நட்சத்திரங்கள் இதிலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சில தினங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
“சென்னை 28 படத்தில் எந்த கேரக்டரிலும் சூர்யா நடிக்கவில்லை. அது தொடர்பாக யாரும் அவரை அணுகவில்லை” என தெரிவித்துள்ளனர்.