மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹன்சிகா?

மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹன்சிகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya hanshikaஹரி இயக்கும் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் என்ற பெயரிடப்பட்ட இப்படத்தில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவருடன் மற்றொரு நாயகியும் நடிக்கிறாராம்.

சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சினிமா ஸ்டார்களுக்கு சவால் விடும் கிரிக்கெட் ஸ்டார் தோனி

சினிமா ஸ்டார்களுக்கு சவால் விடும் கிரிக்கெட் ஸ்டார் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ms dhoniசினிமா சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு சவால் விடும் வகையில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் தமிழிலும் வெளியானது.

என்னதான் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தாலும், இந்தி படங்கள் தமிழகத்தில் ஓடாது என சிலர் நினைத்திருந்தனர்.

ஆனால் அவர்களின் நினைப்பை தூள் தூளாக்கி சிக்ஸர் அடித்து வருகிறார் இந்த தோனி.

தமிழகத்தில் மட்டும் 205 அரங்குகளில் தமிழ் பதிப்பையும் 27 அரங்குகளில் இந்தி பதிப்பையும் திரையிட்டனர்.

இந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

மேலும் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.

விரைவில் இப்படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என கூறப்படுகிறது.

‘படையப்பா’வுடன் கனெக்ஷன் ஆகும் சிம்பு-தனுஷ் படங்கள்

‘படையப்பா’வுடன் கனெக்ஷன் ஆகும் சிம்பு-தனுஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushதமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படையப்பா.

ஒரு மிகப்பெரிய ஸ்டாரான ரஜினியே தனக்கு எதிராக ஒரு நீலாம்பரி என்ற பெண் கேரக்டரை எப்படி கொண்டு வந்தார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

ரம்யா கிருஷ்ணனும் அப்படியொரு பவர்புல் பெர்மான்ஸை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திரைக்கு வரத் தயாராகியுள்ள தனுஷின் கொடி படத்திலும் த்ரிஷா கேரக்டரும் அப்படியானதுதானாம்.

இக்கேரக்டருக்கு ருத்ரா என்று பெயரிட்டுள்ளனர்.

அதுபோல், சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் உள்ள அஸ்வின் தாத்தா கேரக்டர் படையப்பா ஸ்டைலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர்களை தேர்வு செய்வதில் அஜித்துக்கே குழப்பம் வரலாம்

டைரக்டர்களை தேர்வு செய்வதில் அஜித்துக்கே குழப்பம் வரலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதனையடுத்து, அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையில் சுந்தர் சியின் அரண்மணை படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் அஜித்தை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளதாம்.

இதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் அஜித்துக்காக ஒரு கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என அஜித்திற்கே நிச்சயம் குழப்பம் வரலாம்.

மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya venkat prabu premji amaranவெங்கட் பிரபு தன் சொந்த பேனரில் தயாரித்து இயக்கியுள்ள படம் சென்னை 28 பார்ட் 2.

முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, மிர்ச்சி சிவா உள்ளிட்ட கலைஞர்களுடன் இரண்டாம் பாகத்தில் நிறைய கலைஞர்களை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு மலேசியாவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதனை சூர்யா வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal keethy sureshசுராஜின் கத்தி சண்டை படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார் விஷால்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கவுள்ள சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷால்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீன் நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகியாக நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows