‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நடிகர் சூர்யா தன் 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன் ‘ என தலைப்பு வைத்து வீடியோ மற்றும் 3 லுக் போஸ்டர்கள் வெளியானது.

இன்று சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, நடித்து வரும் சூர்யா 39 படத்திற்கு ‘ஜெய் பீம்’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார்.

‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தலைப்பை இயக்குனர் ரஞ்சித் பதிவு செய்து இருந்தார் என்பதும் அவரே இந்த தலைப்பை கொடுத்துள்ளார்.

Suriya 39 title and first look announced

‘சுந்தரா டிராவல்ஸ் 2’ படத்தில் முரளி வடிவேலு கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்ஸ்

‘சுந்தரா டிராவல்ஸ் 2’ படத்தில் முரளி வடிவேலு கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசோகன் என்பவர் இயக்கத்தில் முரளி – வடிவேலு, ராதா, வினுசக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. (2001)

இது ‘ஈ பறக்கும் தாலிகா’ என்ற மலையாள படத்தின் ரீமேக்காகும்.

தற்போது நடிகர் முரளி உயிருடன் இல்லை. வடிவேலுவும் படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை.

இந்த நிலையில் இப்படத்தின் பார்ட் 2 படம் அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்படவுள்ளதாம்.

இதில் யோகிபாபு & கருணாகரன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் இயக்குனர் அசோகன் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

yogi babu karunakaran

Super hit film Sundara Travels sequel announced

‘ரௌத்திரம்’ பழக ரித்விகாவை அன்புக்கரசியாக மாற்றிய டைரக்டர் அரவிந்த்சாமி

‘ரௌத்திரம்’ பழக ரித்விகாவை அன்புக்கரசியாக மாற்றிய டைரக்டர் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாளருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.

நவரசங்களுல் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. “நவராசா” 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix இல் உலகளவில் திரையிடப்படவுள்ளது.

அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்த, தனது அனுபவத்தைப் பற்றி ரித்விகா கூறியதாவது..

அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம்.

ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார்.

சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து நிறுவிய Justickets நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, “நவராசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

RIYTHVIKA REMINISCES WORKING WITH ARVIND SWAMI ON NETFLIX’S UPCOMING TAMIL ANTHOLOGY ‘NAVARASA’

Riythvika recollects fond memories of working with debutant director Arvind Swami for Netflix’s Tamil anthology film ‘Navarasa’.

Attachments area

ஆந்தாலஜி நவரசா-வில் ‘இன்மை’ உங்களை ஆச்சர்யப்படுத்தும் – சித்தார்த்

ஆந்தாலஜி நவரசா-வில் ‘இன்மை’ உங்களை ஆச்சர்யப்படுத்தும் – சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்மை என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.

நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உருவாக்கியுள்ளார்.

Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள “இன்மை” படத்தில், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த், தனது நடிப்பால், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளார்.

தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து ‘நவரசா’ திரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இன்மை பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது…

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.

இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் என்றார்.

மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் “நவரசா” ஆந்தாலஜி படத்தினை Madras Talkies மற்றும் Qube Cinema Technologies இணைந்து தயாரித்துள்ளனர்.

“நவரசா” Netflix தளத்தில் பிரத்தியேகமாக வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

SIDDHARTH TALKS ABOUT THE MEANING OF INMAI

The word Inmai means – deprivation or lack of something.

Attachments

‘SURIYA-40’ படத்திற்கு வெறித்தனமான டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் & வீடியோ ரிலீசானது

‘SURIYA-40’ படத்திற்கு வெறித்தனமான டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் & வீடியோ ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 40’.

இதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படக்குழு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் சூர்யா ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.

இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இதன் படப்பிடிப்பு ஜுலை 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது..

இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது ET – ‘எதற்கும் துணிந்தவன்’ என டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக்குடன் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இதில் வெறித்தனமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சூர்யாவின் கையில் வாள் & துப்பாக்கியும் உள்ளது.

நாளை ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ்ட் லுக் வீடியோ இதோ…

Here is Suriya 40 official first look

திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லையே.; கமல் கேள்வி

திமுக ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லையே.; கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை.

இல்லத் தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்.

குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது.

தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலைமையில்தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள்.

‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எனும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.

வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குடும்பத் தலைவியின் உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பை விடக் குறைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டது.

‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டன.

தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை.

இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்தச் சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.

கமல்ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM founder Kamal Haasan requests TN Government

More Articles
Follows