சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

Maanaadu  (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன் பிறந்த நாளுக்கு தான் ஊரில் இருக்க மாட்டேன். ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என சிம்பு அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த டீசர் அறிவிப்பு உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம்.

Str’s Maanaadu teaser date and time is here

Overall Rating : Not available

Latest Post