சுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்

சுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yashs KGF Chapter 2 shooting location changed to Hyderabad கன்னட திரையுலகை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கே.ஜி.எப்.

இதில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தமிழ் பதிப்பை நடிகர் விஷால் வெளியிட்டு இருந்தார்.

தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.

கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றம் சூட்டிங்கை நிறுத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் கே.ஜி.எப். 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Yashs KGF Chapter 2 shooting location changed to Hyderabad

காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்

காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV fame Ramar pairs with Sanjay Kalrani சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார்.

‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து, விஜய்டிவி புகழ் ராமர் – சஞ்சய் கல்ராணி நடிக்கும் இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.

‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

மேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிட்நுட்ப தலைநகரான சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையிலகில் தடம் பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது.

இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் படைக்கிறது.

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்ப்பார்வை:ராஜா பக்கிரிசாமி

இப்படக்குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Vijay TV fame Ramar pairs with Sanjay Kalrani

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘தாதா 87’ படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் சினேகன் தயாரித்து – நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’

கவிஞர் சினேகன் தயாரித்து – நாயகனாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், பல்வேறு காரணங்களால் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது.

ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

மேலும் கே பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டிபி கஜேந்திரன், ‘தாரை தப்பட்டை’ ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.

தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

கலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து-நடித்திருக்கும் ‘பொம்மிவீரன்’, வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
சினேகன்
நாட்டியா
ஆனந்தி
கனிகா
தாரிணி
ஐகியா
பாக்கியஸ்ரீ
கே பாக்யராஜ்
ஊர்வசி
சிங்கம்புலி
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
சந்தான பாரதி
டி பி ராஜேந்திரன்
இ. ராமதாஸ்
முத்துகாளை
போண்டாமணி மற்றும் பலர்
தயாரிப்பு: உழவர் திரைக்களம்’ கவிஞர் சினேகன்
இயக்கம்: ரமேஷ் மகாராஜன்
ஒளிப்பதிவு: சாலை சகாதேவன்
இசை: தாஜ்நூர்
படத்தொகுப்பு: ராம் சுதர்சன்
சண்டைப்பயிற்சி: விஜய் ஜாக்குவார்
கலை: மார்டின் டைட்டஸ்
பாடல்கள்: கவிஞர் சினேகன்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

இயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!

இயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இயற்கையை பாதுகாப்பது தொடர்பான பாடத்தை 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து அழகப்பா பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக், அழகப்பா பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 1714 மாணவர்கள் கலந்துகொண்டு 40 நிமிடங்கள் இயற்கையை பாதுகாப்ப்து குறித்த பாடத்தை கவனித்து புதிய உலக சாதனையை படைத்தார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக்,

இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த உலக சாதனை முயற்சி அழகப்பா பள்ளியில் நடைபெற்று. இதில் 1714 மாணவர்கள் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து இயற்கை பாதுகாப்பு பாடத்தை கேட்டு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக 1479 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை கவனித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இவர்கள் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இம் மாபெரும்நிகழ்வைஅழகப்பா பள்ளிக்கு “நிரந்தரா கிரியேஷன்ஸ்” என்ற ஈவெண்ட்மேனேஜ்மென்ட் நிறுவனம் சிறப்பாக நடத்தி கொடுத்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் கூறியது,

இந்த உலக சாதனையை படைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சாதனையை படைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

இறுதியாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றுகளை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் பள்ளி தலைவர் சரத்குமாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை படைத்தது தங்களுக்கு பெருமையாக இருந்ததாகவும் இயற்கையை பாதுகாப்பது குறித்து நிறைய விஷ்யங்களை கற்றுக்கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான் பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.

விழாவில்,

“கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது,

“இந்தப்படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப்பட்டிருக்கேன். ஏன் நீ இந்த துறைக்கு வருகிறாய் என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறேன். படத்தை தம்பி அவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கிறார். அவருக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வாழ்த்துகள்” என்றார்

இசை அமைப்பாளர் கிருபாகரன் பேசியதாவது,

“நான் வேலை விட்டுட்டு சினிமாவிற்கு வந்தவன். இந்தப் பீல்டில் பத்து வருடமாக இருக்கிறேன். கன்னடத்தில் நான்கு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தமிழில் சரியான படம் வரலியே என்று ஏங்கினேன். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இரண்டு வாரம் உழைத்து உருவாக்கிய ஒரு பாடலை சரியில்லை என்பதற்காக தூக்கிப் போட்டோம். இதுவரை நான் பாடல் வரிகளை ட்யூன் போட்டதில்லை..முதன்முதலாக இந்தப்படத்தில் தான் வரிகளுக்கு இசை அமைத்தேன். தமிழ் வரிகளுக்குள் ஒரு இசை இருக்கும் என்பதை இப்போது தான் உணர்ந்தேன்” என்றார்

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,

“வள்ளல் தன்மைக்கு கடவுள் தந்த மனித உருவம் தான் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு மகன் போல இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு படத்தின் கதாநாயகனும் கூட. அவரை இந்த மேடையில் சந்தித்தது சந்தோஷம். இந்தப்படத்தின் ட்ரைலரில் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தது..அது படத்தின் தரத்தை கூட்டி இருக்கிறது. இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. ஒருமுறை தேனி கண்ணன் நான் ஒரு கதை சொல்றேன் படம் எடுக்கிறீங்களா என்று கேட்டார்..நான் அந்தக்கதையைப் பதிவு செய்துவிட்டு வா தம்பி என்றேன். ஏன் என்றால் கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். ஏன் என்றால் கதை என்பது அவ்வளவு முக்கியம். இந்த வாழ்வை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்பவன் தான் படைப்பாளி. இந்தப் படைப்பாளன் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,

“இந்த மேடையை நான் மிக நெகிழ்வாகப் பார்க்கிறேன். அண்ணன் திருநாவுக்கரசர் உடன் மேடையில் தஞ்சையில் அமர்ந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. அந்த வகையில் படைப்பாளன் படக்குழுவிற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் பற்றி ஒரு பாடல் கேட்டார்கள். இங்கு வியாபாரத் தனமான பாடல்களுக்குத் தான் வரவேற்பு கிடைக்கிறது. இங்கு மனதறிந்து பாராட்டும் குணம் யாருக்கும் இல்லை. உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வந்தபின் மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. அண்ணன் சீனுராமசாமி உதவி இயக்குநர்களின் வலிகளை சொல்லும் பாடலை இவ்வளவு சோகமாக சொல்ல வேண்டாம் என்றார். ஆனால் இங்கு கண்ணீரையும் சில சமயம் பதிவு செய்யவேண்டிய இருக்கிறது. உதவி இயக்குநர்களின் கண்ணீர் உண்மையானது. அதை இந்தப்படைப்பாளன் படம் செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்

நடிகர் மனோபாலா பேசியதாவது,

“சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார். நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் தான் கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. இந்த படைப்பாளன் வெற்றிபெறுவான் என்றார்”

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது,

“இங்கு டைட்டில் பிரச்சனைக்கே பெரிய பஞ்சாயத்து நடக்கிறது. இந்தப் படைப்பாளன் படத்தில் ஒருபாடல் மனதை ரொம்ப கனக்கச் செய்தது. பைப்பில் தண்ணீர் குடித்துவிட்டு வாழ்க்கையை ஓட்டிய உதவி இயக்குநர்கள் நிறைய உண்டு. நடிகர்கள் எல்லாம் இப்போ தினசரி சம்பளம் வாங்குகிறார்கள். இவங்கல்லாம் ஜனாதிபதியை விட அதிகமாக சம்பளம் வாங்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு எடுத்து நடிகர்கள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி நடிகர்கள் ஒத்து வராவிட்டால் வேறு நடிகரை வைத்து எடுங்கள். இங்கு என்ன எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா வந்தார்கள்?. இங்கு தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள். இந்தப்படத்தில் கேமரா, எடிட்டிங், இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்

இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது,.

“இந்தப்படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

எஸ்.திருநாவுக்கரசர் பேசியதாவது,

“ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கல்சட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி” என்றார்.

நடிகர்கள்

LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார் மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வேல்முருகன்

இசை : கிருபாகரன்

பாடல்கள் : கு.கார்த்திக்

கலை : ஸ்ரீமன் பாலாஜி

எடிட்டிங் : எஸ்.பி.அகமது

மக்கள் தொடர்பு : மணவை புவன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ளார் – L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

More Articles
Follows