‘கேஜிஎப்’ இயக்குனரின் 2 படங்களில் பிரபாஸ்.; மெகா கூட்டணியை இணைக்கும் தயாரிப்பாளர் யார்.?

‘கேஜிஎப்’ இயக்குனரின் 2 படங்களில் பிரபாஸ்.; மெகா கூட்டணியை இணைக்கும் தயாரிப்பாளர் யார்.?

பாகுபலி பட வெற்றி வரை நிதானமாக படங்களை ஒப்புக் கொண்ட பிரபாஸ் தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

‘ராதே ஷ்யாம்’ படத்தில் சமீபத்தில்நடித்து முடித்தார்.

தற்போது ‘ஆதி புருஷ்’ & ‘சலார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை அடுத்து ‘மகாநடி’ இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ‘சலார்’ படத்தை இயக்கி வரும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்தான் ‘கேஜிஎப்’ பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறாராம்.

ஷங்கர் & ராம் சரண் இணையும் படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.

KGF director joins Prabhas after Salaar

producer dil raju

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி நஷ்டம்.. மக்கள் சேவைக்காக கோவணம் கட்டி வருவேன்.. – கமல்

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி நஷ்டம்.. மக்கள் சேவைக்காக கோவணம் கட்டி வருவேன்.. – கமல்

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அப்போது கமல் பேசியதாவது:-

“50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.

அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.

ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு போனாலும் அங்கிருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன.

கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துகளா? என கேட்கிறார்கள். ஆம்… நீங்கள் கொடுத்ததுதான்.

நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது.

நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்வரை நஷ்டம். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போல எளிமையாக வாழனும்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிக்கொண்டு வருவேன்.

டாஸ்மாக் வருமானத்தை வைத்து இலவசங்கள் வழங்குகின்றனர்.

மக்கள் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் அஞ்சுவார்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

300 crore loss for me says Kamal Haasan

கோலிவுட் கழட்டி விட்ட நடிகையை மீண்டும் விஜய்க்காக தூக்கி வந்த நெல்சன்

கோலிவுட் கழட்டி விட்ட நடிகையை மீண்டும் விஜய்க்காக தூக்கி வந்த நெல்சன்

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், ‘தளபதி 65’ படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இவர், மிஷ்கின் இயக்கத்தில் ரிலீசான ‘முகமூடி’ 2012 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் தெலுங்கில் பிரபலமான இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வந்துள்ளார் நெல்சன்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுறமுலோ’ படத்தில் இடம் பெற்ற ‘புட்ட பொம்மா…..’ பாடல் 200 மில்லியனை தாண்டி யூடியூபில் சாதனை படைத்தது.

அந்த பாடலுக்கு அல்லுவுடன் ஆட்டம் போட்டவர்தான் பூஜா ஹெக்டே என்பவர் குறிப்பிடத்தக்கது.

Actress Pooja Hegde is on board for Thalapathy 65
Pooja Hegde

முதன்முறையாக படம் இயக்கும் மோகன்லால்.; மம்மூட்டி திலீப் நேரில் வாழ்த்து..; ஹீரோ யார் தெரியுமா?

முதன்முறையாக படம் இயக்கும் மோகன்லால்.; மம்மூட்டி திலீப் நேரில் வாழ்த்து..; ஹீரோ யார் தெரியுமா?

‘ஆராட்டு’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இது விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே மோகன்லால் நடித்த மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராடு மற்றும் வில்லன் ஆகிய 4 படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராக அவதாரமெடுக்கிறார் லாலேட்டன் (எ) மோகன்லால்.

3டி-யில் உருவாகும் இந்த படத்திற்கு BARROZ என்று பெயரிட்டுள்ளனர்.

இது அரசர் காலத்து கதை என கூறப்படுகிறது. இதில் மோகன்லாலே நாயகனாக நடிக்கிறார்.

பிரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega and Rafael Amargo உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே லூசிஃபர் என்ற படத்தில் மோகன்லாலை இயக்கியவர் பிருத்விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

BARROZ.. படத்தின் விழா மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது.

இப்பட விழாவில் மம்மூட்டி திலீப் பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

Actor Mohanlal’s directorial debut ‘Barroz’ starts rolling

Barroz (1)

எல்லா மொழியிலும் ரீமேக் செய்ய தகுதியான படம் ‘சுல்தான்’..; கார்த்தி பெருமிதம்

எல்லா மொழியிலும் ரீமேக் செய்ய தகுதியான படம் ‘சுல்தான்’..; கார்த்தி பெருமிதம்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.

ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்பட டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இன்று மாலை இப்பட டிரைலர் வெளியாகவுள்ளது.

இப்பபட பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இதில் ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் நடிகர் கார்த்தி பேசுகையில்…

” எந்தப் படமாக இருந்தாலும் முழு திரைக்கதையை இயக்குனரிடம் படிக்க கேட்பேன். சொல்ல சொல்வேன்.

நான் 20 நிமிடங்கள் கதை கேட்டு ஒப்புக்கொண்ட ஒரே படம் சுல்தான் தான்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பெரிய விஷயங்களாக யோசிக்கிறார். மிகவும் பொறுமைசாலியாக இருக்கிறார்.

இரண்டு வருடங்கள் இந்த படத்திற்க்காக வேலை செய்திருக்கிறார்.

இப்படம் வெற்றி பெற்றால் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்படக் கூடிய தகுதியான கதை” என பாராட்டி பேசினார் கார்த்தி.

இந்தப் படத்தை தமிழகத்தில் நேரடியாக வெளியிடுகிறது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறான் சுல்தான்.

Actor Karthi talks about his upcoming film Sulthan

நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று.; ஹீரோயினுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்

நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று.; ஹீரோயினுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்

kiara advaniநிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் கைரா அத்வானி இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென அமீர்கானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

எனவே அந்த பட நாயகி கைரா அத்வானிக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

கடந்தாண்டில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன் & ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் குணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Super Star Aamir Khan tests positive for corona

More Articles
Follows