தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் இனிய குரலால் மக்களை வசீகரித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் கடந்த மாதம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.
அவரது மறைவால் இந்திய இசை துறையே கலங்கி போனது. திரும்பிய திசை எங்கும் எஸ்பிபி பாடல்களே ஒலித்தன.
அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.
நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அரசு காவலர் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்றைய தினத்தில் வர முடியாத ரசிகர்கள் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அங்கு அவரின் கல்லறைக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக தனி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எஸ்பிபி மகன் எஸ்.பி.பி.சரண்.
SP Charan made new way for his dad SPBS cemetry