எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB and SPB charanபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனை கட்ட எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவியது.

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

இதற்கு விளக்கம் கொடுப்பது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்;

” மருத்துவமனை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது.

நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் உலவுகிறது.

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த ஒரு செய்தி அறிக்கையை தரப்போகிறோம்.

மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தமாக உள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

https://t.co/VVZTcF1mPx #MGMHospital #MGMHealthcare #mgm

SPB Charan on father SP Balasubrahmanyam’s health treatment cost

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்.; இனி குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பொருட்கள் வாங்க அனுமதி

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்.; இனி குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பொருட்கள் வாங்க அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

biometric in ration shop tamilnaduதமிழகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன.

இதில் அண்மைக்காலமாக ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே மக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை கடை ஊழியரிடம் காட்ட அது பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்பட்டது.

இதனால் ஸ்மார்ட் கார்டு காட்டி அவரது குடும்ப உறுப்பினர் / வீட்டு வேலைக்காரன், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாரென்றாலும் பொருட்களை வாங்க முடியும்.

இதில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

தற்போது இந்த முறைகேட்டை தடுக்க ரேசன் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையை பதிவு செய்து மட்டுமே, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே ரேசன் பொருட்களை பெற்று செல்லமுடியும்.

Biometric method Implemented in TN Ration Shops

கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

கொரோனா தொற்று சிகிச்சை..; எப்படி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanthநடிகரும் தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று லேசான அறிகுறியுடன் இருந்ததால் எவ்வித பிரச்னையும் இல்லையாம்.

தற்போது அவர் நலமாகவும், ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம்.

திட உணவுகளைவிட ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் அருந்தி வருகிறாராம்.

தொடர் சிகிச்சை பலன் அளித்துவருவதால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Latest update on DMDK leader Vijayakanth’s health

முதல்வர் வேட்பாளர் யார்.? அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

முதல்வர் வேட்பாளர் யார்.? அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eps opsஅதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று செப்டம்பர் 28 நடைபெற்றது.

இதில் 2021 சட்டமனற தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா.? எனத் தெரியவில்லை.

அதிமுக கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அவை…

*கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சரை பாராட்டி தீர்மானம்

*கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

*மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தமிழக அரசு தடுத்து நிறுத்தியதாக கூறி அதிமுக செயற்குழுவில் பாராட்டு

*நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.

*காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்த தமிழக அரசுக்கு அதிமுக செயற்குழுவில் பாராட்டு

*அதிமுக அரசு தொடர அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம்

*ரூ.14ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி

*ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி – அதிமுக செயற்குழு

* இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் கொள்கை… மொழி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்காது

* கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு.

*மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம்.

AIADMK passes 15 resolutions in party’s executive committee

புதுச்சேரியில் அக். 5 & 12 தேதிகளில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.; எந்தெந்த வகுப்புகள் முழு தகவல்கள்…

புதுச்சேரியில் அக். 5 & 12 தேதிகளில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.; எந்தெந்த வகுப்புகள் முழு தகவல்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry governmentபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில்… புதுச்சேரி, காரைக்காலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

மேலும், 9, 11 ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 12 முதல் பள்ளி செல்லலாம்.

மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம்.

ஆனால் கொரோனா கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியையும் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.

தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து பதிவிட வேண்டும்.

ஏதேனும், அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pudhuchery govt allows schools to reopen

வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

வேளாண் மசோதா.; விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசுகள்… கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில்..

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே பல திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது அரசு.

தற்போது விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

Kamal Haasan, attacks ruling AIADMK

More Articles
Follows