தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாபெரும் இசை கலைஞர் பாலகிருஷ்ணனின் பேரன் வழித்தோன்றலாய் வந்து இசையை முறையாக கற்றுக் கொண்டவர் ஆர் எஸ் ரவிப்பிரியன்.
இவரது பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் கனடா நாட்டில் வளர்ந்தார். சைக்காலஜி பயின்ற இவர் படிக்கும்போதே இசை ஆல்பங்களை வெளியிட்டவர்.
நாள்களும் வருடங்களும் செல்ல செல்ல இசை வெறியும் இவருக்குள் ஊறிக் கொண்டே ஆற்றாய் பெருக்கெடுத்துள்ளது.
எனவே மீண்டும் தன் இசைப்பணி தாகம் தீர்க்க தமிழகம் வந்துள்ளார்.
மெட்டுக்கு பாட்டு எழுதுவதை விட பாட்டுக்கு மெட்டு போடுவதே ஒரு இசைக்கலைஞனின் உயர்ந்த செயலாகும் என தெரிவிக்கிறார் இவர்.
சினிமா பாடகர்கள் பலரின் பாராட்டையும் பெற்ற இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் இவர்.
மேகம் , சாந்தன், உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரவிபிரியன்.
ஏ எல் ராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் சூரியனும் சூரியகாந்தியும், கரிமூட்டம், வடசேரி மற்றும் Hi5 உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் இவர் இசையமைத்து வெளிவந்த ”காற்று” என்ற ஆல்பம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
11 பாடல்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆல்பத்தில் சுமார் 22 முன்னணி பாடகர்களை பாட வைத்து சாதனை படைத்துள்ளார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிபிரியன்.
புகழ்பெற்ற எஷிதா மீடியா நிறுவனத்தால் ஆர் எஸ் ரவிபிரியனுக்கு லிட்டில் மாஸ்ட்ரோ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 2022ம் ஆண்டிற்கான ‘திரையிசை காவலன்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருக்குறள் பாட்டரங்கம் சார்பில் “திருக்குறள் இசைக்கவி விருது” என்ற விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பல ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இசைஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஆகியோர் தன் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர்கள் என்று தெரிவித்த இவர் மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் தன் காட்பாதர் எனவும் தெரிவித்தார்.
இசை குடும்பத்தில் தோன்றி ஒரு இமாலய வெற்றிக்காக காத்திருக்கும் ரவி பிரியனுக்கு இனி வாழ்நாளெல்லாம் புதுவசந்தம் மலர வாழ்த்துக்கள்.
‘புது வசந்தம்’ படத்தில் தன் ஆண் நண்பர்களுக்கு உதவி செய்ய வருபவராக சித்தாரா கேரக்டர் இருக்கும்.
தற்போது பல சித்தாராக்கள் உருவெடுத்து ஒன்றாகி செண்பவாக வந்து என் வாழ்வில் புது வசந்தம் கொடுக்க தோளோடு தோள் நிற்கும் தோழியாக இருக்கிறார் என ரவி பிரியன் தங்கள் நட்பை பற்றி தெரிவித்து இருக்கிறார்.
செண்பா ஒரு முழு நேர கவிஞர் என்றாலும் தன்னுடைய வெற்றிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை தோழியாக பெற்றது நான் செய்த பாக்கியம் எனவும் ரவி பிரியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Journey of Music Composer RS Ravi Priyan