தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நம் அரசு.
இதற்கு கோடிகணக்கில் பணம் தேவைப்படுவதால் மக்களும் நிவாரண நிதியை அளிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் கேட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியை திரட்டுவதற்கு புதிய பாடல் முயற்சியை துவக்கியுள்ளார் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்.
ரசிகர்கள் அவர்கள் விரும்பும் பாடல்களை கேட்க விரும்பினால் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் தர வேண்டும்.
அதை தன் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடி பேஸ்புக்கில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்கிறாராம்.
இதுவரை சுமார் 5 லட்சம் வரை அவர் நிதி திரட்டியுள்ளாராம்.
100 ரூபாய் மிகவும் குறைவான தொகை என்பதால் பலரும் கேட்பார்கள். இதனால் நிறைய நிதி திரளும் என்பதே எஸ்பி.பியின் திட்டமாகும்.
100 ரூபாய்க்கு அதிகமாக கொடுப்பவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் எனவும் எஸ்பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.