தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் , டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் .எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக “எஸ்பிபி ஸ்டூடியோ” என்று பெயரில் ஒரு டப்பிங் ஸ்டூடியோவினை, டப்பிங் யூனியன் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது , அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று டப்பிங் யூனியன் தலைவர் டத்தோ ராதாரவி தெரிவித்தார்
அதன்படி இன்று அந்த SPB ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மற்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டூடியோவினை தலைவர் திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.
Here comes a dubbing studio dedicated to late singer SPB