“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham menonகாதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது பற்றி கூறியாதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

விமல் நடிக்கும் “சோழநாட்டான்” திரைப்படம் சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு

விமல் நடிக்கும் “சோழநாட்டான்” திரைப்படம் சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sozha nattanவிமல் நடிக்கும் சோழநாட்டான் பட பூஜை போட்டு பிரமாண்ட தளம் அமைத்து கிராபிக்ஸ் படபிடிப்பு நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலம் காட்டில் உள்ள மலைப்பகுதியில் தமிழ் சினிமா இதுவரை காணாத காடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமி ட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக், போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த படம் சோழநாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு சோழநாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள். இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரக்த்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கின்றார்.
மேலும் விமலுடன் காருண்ய கேதரின்
, தென்னவன், நாகி நாயுடு,சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை, போஸ் வெங்கட்,சௌந்தரபாண்டியன் எம்.எஸ்.குமார், இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
நவீன் ஷங்கர்
இசையமைக்க கலைக்குமார் மற்றும் சபரீஷ் பாடல்கள் எழுதுகிறார்கள். பாரிவள்ளல் தயாரிக்க அவருக்கு இணை தயாரிப்பாளராக கை கொடுக்கிறார் ஐ.மனோகரன்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and GV Prakash Joins with Karthick Narenசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்த பட்டாஸ் படம் 2020 பொங்கலுக்கு வெளியானது.

தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

இந்த படத்தை துருவங்கள் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இவர் துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர். இதில் முதல் படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

தற்போது உருவாகவுள்ள படம் தனுஷின் 43 வது படமாகும்.

‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன மற்றும் அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இதன் மூலம் ஜி.வி. பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார்.

மற்ற கலைஞர்களை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும்.வரும் அக்டோபர் மாதம் படத்தை திரையிட உள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாபியா விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and GV Prakash Joins with Karthick Naren

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu attends Mahat and Prachis weddingஅஜித்தின் மங்காத்தா, விஜய்யின ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத்.

இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அதன்பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

இதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் சென்னையருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

நடிகர் சிம்பு திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்.

Simbu attends Mahat and Prachis wedding

மிஷ்கின் கிட்ட லாஜிக் தேடாதீங்க; அவரது உலகம் வேற… – பாவா செல்லத்துரை

மிஷ்கின் கிட்ட லாஜிக் தேடாதீங்க; அவரது உலகம் வேற… – பாவா செல்லத்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont expect Logic in Mysskin movies says Pava ChellathuraiDouble Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதிருந்தனர்.

கடந்த வாரம் வெளியான இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி, ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.

படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதனையடுத்து “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…

பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாவா செல்லத்துரை பேசியது…

எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார்.

பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

நடிகர் சிங்கம் புலி பேசியது….

எல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும். அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை எப்படி அணுகுவது எனும் தயக்கம் இருந்தது.

ஆனால் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும் படத்தை தந்திருக்கிறார்.

சைக்கோவை வைத்து “கருப்பு கண்ணாடி” என படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப்படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது. அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் நடித்தது எனக்கு பெருமை. இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஷாஜி பேசியது….

மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் நடிக்க கூப்பிட்டார். எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என் படத்தில் யாரும் நடிப்பதில்லை வாருங்கள் எனக் கூட்டிப்போனார். இந்தப்படம் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பாதாக நினைக்கிறார்கள் ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை.

இந்தப்படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால் தான் இத்தனை விமர்சனம் வருகிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் கபிலன் பேசியது…

“உன்ன நினைச்சு, நீங்க முடியுமா” பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின் படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும் கூட, அவர் கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும்.

இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன். படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை ரேணுகா பேசியது…

இந்தப்படத்த பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம நடிக்க ஆசைப்படுகிற இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனா அவர் பேட்டிகள் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து பயந்திருந்தேன்.

ஆனால் சந்தித்ததும் நான் கண்டிப்பான ஆள் இல்லை என்றார். ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே நடிப்பேன் ஆனால் அதை கட்டுப்படுத்தி இயல்பாக நடித்தால் போதும் என்றார். இந்தப்படம் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி.

வில்லன் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசியது….

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப்புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப்பெரிய மனது கொண்டவர் இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.

நடிகை நித்யா மேனன் பேசியது.

இந்தப்படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தை பேசும் கேரக்டர் ஆனால் நிஜத்தில் நான் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். இந்தப்படம் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…

வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான்.

இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும் நன்றி. நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி.

இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள் போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் நரேன் பேசியது….

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. எல்லோரும் “இந்தப்படம் நல்லாருக்கு”, “பயங்கரமாக பயமுறுத்தியுள்ளார்” என்று சொன்னார்கள். அவர் படத்தில் நடிக்க போகும்போதே பயமாகத்தான் இருக்கும். இந்தபடம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம்.

அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை.

ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை.

சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார்.

இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன்.
கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.

அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான்.

பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் என் வாழ்நாள் கனவு. அவரால் முழுதாக வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன்.

ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி.

Dont expect Logic in Mysskin movies says Pava Chellathurai
Dont expect Logic in Mysskin movies says Pava Chellathurai

என் படங்கள் 100 நாட்கள் ஓடுவது கூட சந்தோஷமில்லை.. – இமான்

என் படங்கள் 100 நாட்கள் ஓடுவது கூட சந்தோஷமில்லை.. – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meetதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை, ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் பேசியது…

கடந்த வருடம் எங்கள் நிறுவனம் சார்பில் “எல்.கே.ஜி” படத்தை பிப்ரவரியில் தான் ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் “சீறு”படத்துடன் ஆரம்பித்துள்ளோம். தரமான ஆக்‌ஷன் கலந்த, கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தின் பெரும் பலம் ஜீவா தான் அருமையாக நடித்துள்ளார்.

இயக்குநர் கலக்கலான கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார். இந்த வருடமும் தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம். இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகை சாந்தினி பேசியது…

நான் படம் நடிக்கும் ஐடியாவிலேயே இல்லை. இயக்குநர் ரத்னா சிவா தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் இந்தக் கேரக்டருக்காக நிறைய உழைத்திருந்தார். அதை நியாயம் செய்ய நினைத்தேன். அதற்கு படக்குழு மிகவும் உதவினார்கள். நடிகர் ஜீவாவை எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில் எல்லோருடனும் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வருண் பேசியது…

இந்தப்படத்தில் மல்லி எனும் கதாப்பாத்திரம் செய்துள்ளேன். இயக்குநர் சொன்ன மாதிரி வெயிட் போட்டு உடலை மாற்றி நடித்துள்ளேன். ஜீவாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பார்த்தால் மல்லி பாத்திரம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் பாத்திரமாக இருக்கும். படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ரியா சுமன் பேசியது ….

முதன் முதலாக தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இயக்குநருக்கு நடிக்கும் திறமை இருக்கிறது. அவர் ஸ்பாட்டில் நடித்து காட்டி அவ்வளவு எளிதாக சொல்லித்தருவார். ஜீவா படப்பிடிப்பில் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இந்தப்படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் பக்கா கமர்ஷியலாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் D. இமான் பேசியது….

வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் வேலை செய்வது என் வீட்டில் வேலை செய்வது போன்று இருக்கும். வருண் இந்தப்படத்தில் வேறு மாதிரி ஆளாக மாறியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள். ஜீவா கச்சிதமாக நடிப்பவர். மிகவும் துல்லியமாக தேவையானதை திரையில் நடிக்கக்கூடியவர் அவர்.

அவர் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. இயக்குநர் ரத்னா சிவாவுடன் முந்தைய படத்தில் வேலை செய்த பாடல்கள் இப்போதும் பலரது விருப்ப பாடல்களாக உள்ளது. நிறைய சுதந்திரம் தருபவர்.

திரைக்கதையில் பாடலுக்கான இடம் தருபவர். இந்தப்படத்தின் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். மிக சுதந்திரமாக இந்தப்படத்தில் வேலை பார்த்தேன் அதற்காக அனைவருக்கும் நன்றி.

நொச்சிபட்டி திருமூர்த்தியை இந்தப்படத்தில் பாடவைத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ராஜகணபதி என்பவர் அருமையாக பாடியுள்ளார்.

நான் இசையமைத்த படங்கள் 100 நாட்கள் ஓடுவதை விட இந்த மாதிரி பாடகர்களை அறிமுகப்படுத்துவது தான் மனதிற்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் ரத்ன சிவா பேசியது….

இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார்.

எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். நான் ஜீவா சாரின் ரசிகன். 24 மணி நேரமும் சிரித்துகொண்டே, அருகில் இருக்கிறவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். சீரியஸ் காட்சி வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார்.

அவர் ஒரு அருமையான நடிகர். அவருக்கு நன்றி. வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு வெறியாக உழைக்க தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார். சாந்தினி முதலில் நடிக்க மறுத்தார் ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார்.

இந்தப்படத்தில் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக நிற்பார்.

இமான் சார் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் யாருடன் படம் செய்தாலும் கண்டிப்பாக வெற்றிப்பாடலாகத் தான் இருக்கும். என் தொழில்நுட்ப கலைஞர்கள் என் நண்பர்கள் போன்றவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அருமையாக நடித்துள்ளார். வா வாசுகி பாடல் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தப்படம் வரும் 7ந்தேதி வருகிறது. இந்தப்படம் நல்ல கருத்துள்ள படம். உங்கள் ஆதரவு தேவை நன்றி.

தயாரிப்பாளர் Dr. ஐசரி K கணேஷ் பேசியது….

“சீறு” எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். கடந்த வருடம் மூன்று படங்கள் ஹிட்டாக அமைந்தது. இந்தப்படமும் ஹிட்டாக அமையும். என் பள்ளியில் ஜீவாவின் மகன் படிக்கிறார். அவருடன் படம் செய்யலாம் என்று அங்கு சந்திக்கும்போது சொன்னேன்.

அவர் இயக்குநர் ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். எங்கள் நிறுவனத்தில் கதை இலாக இருக்கிறது. அவர்கள் கதை கேட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் கதை பிடித்து இருந்தது. அவர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்து தந்துள்ளார்.

என் படமாகவே இருந்தாலும் நல்லா இல்லை என்றால் சொல்லிவிடுவேன். ஆனால் இந்தப்படம் என்னை பாதித்தது. அருமையாக எடுத்திருக்கிறார். ஜீவா கடுமையாக உழைத்து நடித்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன்னை மாற்றி நடித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள். நல்ல தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். நாங்களே இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். இந்தப்படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இந்தபடம் உள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஜீவா பேசியது ….

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன் படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார்.

அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். 83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார்.

இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும்.

வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார்.

ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ரத்ன சிவா

இசை – D.இமான்

ஒளிப்பதிவு – பிரசன்னா S குமார்

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

கலை இயக்கம் – சம்பத் திலக்

சண்டைப்பயிற்சி – கணேஷ் குமார்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D One

தயாரிப்பு – Dr. ஐசரி K கணேஷ்.

தயாரிப்பு நிறுவனம் – Vels Films International

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meet

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meet

More Articles
Follows