காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajini shree dayaa foundationகுழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது.

சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீதயா பவுண்டேஷன் எதற்காக? அதன் நோக்கம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் லதா ரஜினி எடுத்துரைத்தார்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் Smt.லதா ரஜினிகாந்த் அவர்களுடன் Mr.பவுல் (Karunalaya), Mr.நிர்மல் Ms. மிர்னாலினி (Banyan), Ms. காதாம்பரி (Deepam Foundation), Ms. ராஜ மீனாக்ஷி (Child Welfare Officer), Mr. ஐசக் (ஆச்சி மசாலா), Ms. வசந்தி பாபு (Psyologist), Dr. யாமினி (Kaveri Hospital), Mr. அரவிந்த் (Environmentalist), Mr. நெடுஞ்செழியன் (Career Guidance). ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மதுவந்தி அருண் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த் அவர்கள்,

“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம்.

தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம்.

இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.

சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.

போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.

“குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும்.

பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார்.

“தற்போது ஸ்ரீதயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது.

ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.” என்றார் லதா ரஜினி.

Smt Latha Rajinikanths Care for Childrens

latha rajini welcome

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

itly posterஅப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திட்டமிட்டப்படி 29 நாட்களில் இத்ன் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன்.

வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை.

படத்தில் பாடல்கள், அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் இட்லி படத்தின் ஸ்பெஷல்.

இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது நாங்கள் துப்பாக்கி தூக்கி ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா ?? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?? என்று சந்தேகத்தோடு கேட்டார்.

நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போது அனைவருக்கும் மனநிறைவாக இருப்பதாக கூறினார்கள்.

அப்பு மூவீஸ் Abbas தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதன் டீசரை சற்றுமுன் நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

Karthi revealed Itly movie teaser

Itly team karthi

மெர்சல் விளம்பரத்திற்கு தடை நீடிப்பு; தீர்ப்பை ஒத்திவைத்தது கோர்ட்

மெர்சல் விளம்பரத்திற்கு தடை நீடிப்பு; தீர்ப்பை ஒத்திவைத்தது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal posterவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் மெர்சல்.

இப்படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவ்வுள்ளது.

த்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதனிடையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார்.

இந்த தலைப்பை விஜய் படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இத்தலைப்புக்கு டிரெட் மார்க் பெற்றுள்ளதால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது ஐகோர்ட்.

மேலும் ‘மெர்சல்’ பட பெயரை பயன்படுத்த, விளம்பரப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Mersal title issue court will give Judgment on 6th Oct 2017

தன்னை விட சிறந்த நடிகர் மோடி; பிரகாஷ்ராஜ் பேச்சால் பாய்ந்தது வழக்கு

தன்னை விட சிறந்த நடிகர் மோடி; பிரகாஷ்ராஜ் பேச்சால் பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Exhibition at National Archives of Indiaநடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

அதிலும் நரேந்திர மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என தெரிவித்தார்.

மேலும், தான் பெற்ற தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பேன் என பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தேசியவிருதை  திரும்ப அளிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை. அது என் திறமைக்கு கிடைத்த விருது. திருப்பியளிப்பேன் என கூறவில்லை என மற்றொரு பேட்டியில் தெரிவித்தார்.

நான் எந்தவொரு கட்சியிலும் இல்லை. நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் கேள்வி கேட்டேன் என்றார்.

இந்தக் கருத்துகள் மூலம் பிரதமருக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Case filed against PrakashRaj over his criticism of PM Modi

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக விஜய்.?

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mahesh babu‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவை இயக்கினார் ஏஆர். முருகதாஸ்.

இதனையடுத்து விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு ஸ்பைடர் இந்தி ரீமேக்கை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் முருகதாஸ்.

இந்நிலையில் விஜய் படத்தை முடித்துவிட்டு விஜய்-மகேஷ்பாபு இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும், தெலுங்கில் விஜய் வில்லனாகவும், தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்களாம்.

மகேஷ்பாபு அப்படி நடித்தால் அவருடன் மட்டும் நடிக்கத் தயார் என விஜய் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

AR Murugadoss plans for a multi starrer with Vijay and Mahesh Babu

விவேகம் மாஸ் / லாஸ்.? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

விவேகம் மாஸ் / லாஸ்.? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam posterசிவா இயக்கத்தில் அஜித் நடித்து மிகப்பிரம்மாண்டமான உருவான படம் விவேகம்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

முதல் வாரம் முழுவதும் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வந்ததால் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்தும் வசூல் வேட்டை நடத்தியது.

அதற்குள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டியது 150 கோடியை தாண்டியது என பல்வேறு தகவல்கள் பறந்தன.

இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது

இதன் தமிழக விநியோக உரிமை மட்டும் 55 கோடி வரை விற்கப்பட்டது. முதல் வார வசூல் நன்றாக இருந்தது.

வேதாளம் படத்திற்கு பெண்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் இது முழுக்க ஆக்சன் படம் என்பதால் அதை இதில் எதிர்பார்க்கமுடியவில்லை.

விவேகத்திற்கு கிடைத்த விமர்சனங்களைப் பார்த்தால் இது தோல்விப் படமாக இருந்திருக்கனும்.

ஆனால் பெரும் தோல்வியை சந்திக்கவில்லை. தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்திருக்கும்.

பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்களுக்கு 30% வரை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.” என தெரிவித்தனர்.

Vivegam Mass or Loss movie Here is updates

More Articles
Follows