மும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

6531512011531493927மும்பைக்கு பயணம் மேற்கொண்ட லதா ரஜினிகாந்த், சிவாஜி பார்க் பகுதியிலுள்ள ராஜ் தாக்ரேவின் இல்லத்துக்கு இன்று சென்றார்.

அங்கு ராஜ் தாக்ரே மற்றும் அவரது மனைவி ஷர்மிலாவை லதா ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

அரசியல் வழக்கம்போல இது நட்பு ரீதியிலான சந்திப்பு என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த் பால் தாக்ரே தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும் மறைந்த பால் தாக்ரேவின் மருமகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post