தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார்.
இப்பள்ளி, ஒரு வாடகை கட்டிடத்தில்தான இயங்கி வருகிறது.
இதற்கான வாடகையை சில வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர் அதன் உரிமையாளர்கள்.
எனவே அங்கு படித்த மாணவர்கள் ஆஸ்ரம் பள்ளியின் மற்றொரு கிளையில் படித்து வருதவாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லதா ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் பள்ளியை பூட்டி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவ-மாணவிகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு முதலில் சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோர்ட் உத்தரவுப்படி அந்த சீல் அகற்றப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Court orders landowners to unseal Latha Rajinis Ashram school