தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகரும் ரஜினியின் உறவினருமான ஒய் ஜி மகேந்திரன் நாடகத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர்.
இவர் ஏராளமான நாடகம் மேடை நாடகங்களை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் சாருகேசி என்ற ஒரு புதிய படத்தை தொடங்குகிறார்.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது தன் மனைவி லதா பற்றி பேசினார்.
அப்போது…
“மதுப்பழக்கம் புகைப்பழக்கம் அசைவ உணவு ஆகிய பழக்கங்கள் உள்ளவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்வது கடினம்.
இந்த பழக்கங்களில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் என் மனைவி லதா தான்.
நான் இன்று ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பதற்கு என் மனைவி லதா தான் காரணம்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
லதாவின் உறவினர்தான் ஒய் ஜி மகேந்திரன் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான்.
Rajinikanth praises his wife Latha