திரு(மறு)மண அழைப்பிதழுக்கு பூஜை செய்த சௌந்தர்யா ரஜினி

soundarya rajiniaknthநடிகர் ரஜினிகாந்த்தின் 2வது மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை முதலில் திருமணம் செய்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இவர்களுக்கு பிறந்த ஒரு வேத் என்ற 4 வயது மகன் தற்போது சவுந்தர்யாவுடன் இருக்கிறார்.

இதனையடுத்து கோவையைச் சேர்ந்த தொழில்அதிபர் வணங்காமுடி என்பவரின் மகனும் நடிகருமான விசாகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார்.

எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது.

திருமணம் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சவுந்தர்யா தன் அம்மா லதா ரஜினியுடன் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

அப்போது திரு(மறு)மண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post