10 கோடி வாடகை பாக்கி; லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு.?

Latha Rajinis Ashram School Closed due to rent balanceரஜினிகாந்தின் மனைவி லதா அவர்கள் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

இந்த பள்ளி உள்ள கட்டிடத்திற்கு 2009 முதல் தற்போது வரை ரூ. 10 கோடி தரவேண்டும் என்று அக்கட்டட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு தெரிவித்துள்ளார்.

ரூ. 10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது ரூ.2 கோடி தருவதாக லதா தரப்பு கூறியிருந்ததாகவும், 14 மாதங்களாகியும் லதா ரஜினி பணத்தை தரவில்லை என்று உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே வாடகை பணம் கொடுக்காத காரணத்தினால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

எனவே, இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள ஆஸ்ரம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Latha Rajinis Ashram School Closed due to rent balance

 

Overall Rating : Not available

Latest Post