பைரவா நண்பர்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

பைரவா நண்பர்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and sivakarthikeyanபரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது.

இதை தொடர்ந்து ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட திரையுலகினரும் விஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். அதில்….

விஜய் சாருக்கு வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு, தன் நண்பர்களான கீர்த்தி சுரேஷ், சதீஷ், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..?

ராஜ்கிரணை இயக்கும் நடிகர் தனுஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajkiran dhanushநடிகராக அறிமுகமான போது பல இன்னல்களை சந்தித்தவர் தனுஷ்.

அவற்றையெல்லாம் முறியடித்து தேசியளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ஹாலிவுட் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உயர்ந்து தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வருகிறார்.

மேலும் பாடல் ஆசிரியர், பாடகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இதற்கு மகுடம் சூடும் விதமாக தற்போது இயக்குனராகவும் மாறவிருக்கிறாராம்.

இவர் இயக்கவுள்ள படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர், நடிகையர் தேர்வானபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஹரி இயக்கிய வேங்கை படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘கொக்கி’ குமாருடன் மோதும் ‘கடவுள் இருக்கான் குமாரு’

‘கொக்கி’ குமாருடன் மோதும் ‘கடவுள் இருக்கான் குமாரு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakashராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, சூர்யாவின் சிங்கம் 3 மற்றும் கார்த்தியின் காஷ்மோரா படங்கள் களத்தில் உள்ளன.

மேலும் தனுஷின் கொடி படமும் தீபாவளி வெளியீடு என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷும் இந்த தீபாவளி ரேஸில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-அனிருத் கூட்டணி; இயக்குனர் யார் தெரியுமா?

சூர்யா-அனிருத் கூட்டணி; இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya anirudh vignesh shivanஹரி இயக்கும் எஸ் 3 (சிங்கம் 3) படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, கபாலி இயக்குனர் ரஞ்சித் அல்லது முத்தையா இயக்கத்தில் நடிப்பார் சூர்யா என சொல்லப்பட்டது.

ஆனால் எவரும் எதிர்பாராத வண்ணம் தற்போது புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறாராம்.

இத்தகவலை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

24, ஜோக்கர், சந்திரமுகி… களைகட்டிய ஸ்டார் திருமணங்கள்

24, ஜோக்கர், சந்திரமுகி… களைகட்டிய ஸ்டார் திருமணங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director rajumurugan hema married and director vikram kumar srinidhi marriedயாவரும் நலம், 24, மனம் (தெலுங்கு) ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

இவர் ’24’ படத்தில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றிய ஸ்ரீநிதியை நேற்று செப்டம்பர் 4ஆம் தேதி மணந்தார்.

இவர்களின் திருமண விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இவர்களைத் தொடர்ந்து மற்றொரு இயக்குனரின் திருமணம் நேற்று நடைபெற்றது.

ஜோக்கர் படம் மூலம் பிரபல இயக்குனராக மாறியுள்ள ராஜூமுருகன், டிவி தொகுப்பாளினியாக இருந்த ஹேமா சின்ஹாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்றது. பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

‘சந்திரமுகி’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா.

இவர் ரவிக்குமார் என்ற இயக்குனரை ஏற்கனவே திருமணம் செய்துள்ளார் என்ற புகார் இருக்கும் நிலையில், இன்று காலை திடீரென ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை மணந்து கொண்டார்.

சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார்.

ரஜினியை சந்தித்த அப்துல்கலாம் உதவியாளர்; என்னமோ திட்டம் இருக்கு?

ரஜினியை சந்தித்த அப்துல்கலாம் உதவியாளர்; என்னமோ திட்டம் இருக்கு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abdul kalam assistant ponraj met rajinikanthமறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் பொன்ராஜ்.

இவர் அண்மையில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். எனவே இது தொடர்பாக பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துள்ளார்.

அப்போது காலம் கனிந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் நடிக்கவுள்ள ரஞ்சித்தின் படம் அரசியல் சார்ந்த கதைதான்.

எனவேதான் ரஜினி ஓகே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ஹ்ம்… என்னமோ திட்டமிருக்கு….

More Articles
Follows