சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘வாழ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் தயாரித்து வருகிறது. இந்த படம், அருவி படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாவதால் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறது. இயற்கையாகவே, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், அதன் கதையை பற்றிய ஏராளமான யூகங்களை ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவில் படத்தை கொண்டு சேர்த்திருக்கிறது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் இந்த படத்துக்கு ஒரு சரியான துவக்கம் கிடைத்ததை மொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறது. மேலும், குழுவினர், படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, காலில் சக்கரங்களை கட்டிக் கொண்டு இடைவிடாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷெல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பிரதீப் குமாரின் இசை கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் பன்முகப்படுத்தப்பட்ட பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அவரிடம் எதிர்பார்க்கலாம். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் குட்டி ரேவதி ஆகியோருடன் இணைந்து அவரும் பாடலை எழுதுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா (படத்தொகுப்பு), ஸ்ரீராமன் (கலை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), ஜெய்கர் பி.எச் (ஒலி வடிவமைப்பாளர்), தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பாளர்), அக்கு ஸ்டுடியோஸ் ஸ்ரீ ராமன் & குழு (அனிமேட்ரோனிக்ஸ்), எஸ் மாதேஸ்வரன் (கலரிஸ்ட்), பிரவீன் டி (சிஜிஐ), கபிலன் (போஸ்டர் டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறுகிறது என்றால், அதற்கு காரணம் முதல் உதவி இயக்குநர்கள் பாக்கியராஜ் கோதை, யஸ்வந்த் இன்மொழி, இரண்டாம் உதவி இயக்குனர்கள் ராகுல் ராஜா, எம்.எஸ். கிருஷ்ணா, மிருதுளா ஸ்ரீதரன் மற்றும் பயிற்சி உதவி இயக்குநர்கள் – சந்தோஷ் நந்தீஸ்வரன், நிர்மலா ஆகியோரை உள்ளடக்கிய உதவி இயக்குனர்கள் குழு தான். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’

20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. சிம்பாவின் தீங்கு விளைவிக்கும் மாமா கதாபாத்திரமான ஸ்கார், மிகவும் அச்சுறுத்தும் வில்லனாக காலம் கடந்தும் நம் நினைவுகளில் சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளது!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, 90களின் கனவுக்கண்ணனும் மற்றும் தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த் சாமி, தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார் என்பதை அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். உண்மையில் அவரது வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது!

இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது” என்றார்.

‘அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.

டிஸ்னியின் “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருக்கும் ‘தி லயன் கிங்’ கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான ஸ்கார் வேறு சில திட்டங்களைக் கொண்டுள்ளார். பிரைட் ராக் (Pride rock) போரானது துரோகம், சோகம் மற்றும் ட்ராமாவை கொண்டிருக்கிறது, இதன் விளைவாக சிம்பா நாடுகடத்தப்படுகிறது. புதிதாக வந்த நண்பர்களின் உதவியுடன், சிம்பா வளர்ந்து எவ்வாறு தனது உரிமையை கைப்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது.

சிம்பாவாக டொனால்ட் குளோவர், நாலாவாக பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர், முஃபாசாவாக ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ஸ்காராக சிவெட்டல் எஜியோஃபர், பம்பாவாக சேத் ரோஜென் மற்றும் டிமோனாக பில்லி ஐச்னர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது நட்சத்திர குழு. பொக்கிஷமான கதாபாத்திரங்களை ஒரு புதிய வழியில், முன்னோடி திரைப்பட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்பித்திருக்கிறது.

தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர்.

இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர்.
இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன்.

இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இப்பாடலைப் பற்றி அமீன் கூறும்பொழுது,”நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்ப்பை பெறுவேன் என்று நம்புகிறேன்.”

இப்பாடலைப் பற்றி இசை மேதை ஏ.ஆர் ரஹ்மான் கூறும்போது,” ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும்,நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. A R அமீன்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன்.”

அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை உண்டாக்கும்.

ஸ்ரீதர் சுப்பிரமணியன், (தலைவர்: இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், சோனி மியூசிக்) பேசும்போது,”இது ஒரு விசேசமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் எங்களுக்கு. இந்தக் குடும்பத்துடன் எங்களது உறவு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது – திரைப்படப் பாடல் இல்லாத ஏ ஆர் ரஹ்மானின் முதல் பாடலான வந்தே மாத்திரம் தொடங்கி, எண்ணிலடங்கா பாடல்கள் உட்பட இப்போது வெளிவந்திருக்கும் இந்த பாடல் வரைக்கும் நாங்கள் இணைந்து இருப்பது மகிழ்ச்சி.

அமீன் ஒரு திறமை வாய்ந்த கலைஞர் ஆவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. உலகிலேயே மிகச் சிறந்த இசைக் கலைஞரால் பயிற்சி அளிக்கப்பட்ட அமீன், பிறந்ததில் இருந்தே இசையால் சூழப்பட்டு இருந்தவர்.அமீனின் இன்னிசை அவரது மனதில் இருந்து புறப்படுகிறது” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “சகோவை நாங்கள் வெவ்வேறு தளங்களில் மார்க்கெட்டிங் செய்ய ஒரு பெரிய பரவலான மார்க்கெட்டிங் பிளான் வைத்துள்ளோம். அவரது இசை லட்சோப லட்சம் மக்களை உலகம் முழுவதும் சென்றடையும். அவருக்கு எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.”என்றார்.

தனித்தன்மை வாய்ந்த இந்தப்பாடல் 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 வின் (7UP Madras Gig Season 2) கடைசிப் பாடலாக வெளியாகியுள்ளது.
7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 சோனி மியூசிக்கால் உருவாக்கப்பட்ட ஒரு இசை தொடர்.

ஹவுஸ் ஓனர் பற்றி ‘பசங்க’ கிஷோர்

ஹவுஸ் ஓனர் பற்றி ‘பசங்க’ கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project‘பசங்க’ படத்தில் அழகான, தனது தீங்கற்ற இயல்புடைய கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே இரவில் உறுப்பினராகி, அதைத் தொடர்ந்து ‘கோலி சோடா’ படத்தில் டீனேஜ் பையனாக அவதாரம் எடுத்தவர் கிஷோர். இந்த படங்களின் மூலம் புகழ்பெற்ற கிஷோர், தற்போது லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஒரு நடிகராக படங்களை தேர்ந்தெடுப்பதில் ஒருபோதும் அவசரப்படாத கிஷோர், இந்த படம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் கூறும்போது, “பசங்க, கோலி சோடா மற்றும் சகா போன்ற திரைப்படங்களின் மூலம் சில அங்கீகாரங்களை பெற்றதால், எனது திரைப்படங்களை நான் கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை போலத் தோன்றலாம், ஆனால் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே, ஒரு நடிகராக என் பயணத்தை மேலும் அடுத்த கட்டத்துக்கு தள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில், “ஹவுஸ் ஓனர்” எனக்கு ஒரு ஆசீர்வாதமாக வந்தது, என்னை தேர்ந்தெடுத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மேடத்திற்கு நன்றி. நான் உண்மையில் வியப்பது அவரின் பார்வை. படத்தை தொடங்குவதற்கு முன்பே, ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி வரும் என்பது பற்றி அவருக்கு முழுமையாக தெரியும். அவரின் இத்தகைய உறுதி தான், எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய வைத்தது. படத்தில் நடிப்பதற்கு சில கடினமான காட்சிகளும் இருந்தன, ஆனால் லக்‌ஷ்மி மேடம் மிக நுணுக்கமாக நடித்து காட்டி, எங்கள் வேலையை மேலும் எளிதாக்கினார். “ஹவுஸ் ஓனர்” படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எதிர்காலத்தில் அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன், அதன் மூலம் அவரிடமிருந்து அதிக நடிப்பு திறன்களை பெற முடியும்” என்றார்.

தனக்கு ஜோடியாக நடித்த நடிகை லவ்லின் சந்திரசேகரை பற்றி அவர் கூறும்போது, “அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் சினிமாவின் கவர்ச்சிகரமான ஈர்ப்பாக இருக்கப் போகிறார். அவரின் கதாபாத்திரத்தில் அவர் நுழைந்த விதம் நம்பமுடியாதது” என்றார்.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த “ஹவுஸ் ஓனர்” திரைப்படம், சென்னையின் பேரழிவு வெள்ளத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இப்படத்திற்கு கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தபஸ் நாயக் சித்திர உணர்வை மிக துல்லியமான ‘ஒலி’ மூலம் அலங்கரிக்கிறார். கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளனர், சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 28 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

நாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்? வித்தியாசப் பயணத்தில் ’சென்னை பழனி மார்ஸ்’

நாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்? வித்தியாசப் பயணத்தில் ’சென்னை பழனி மார்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (13)விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ.

இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக்குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.

நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.

நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான்.

அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்? என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும்? அதில் உள்ள காமெடியும்தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பது கிளைமாக்ஸ்.

ஒளியின் பயண வேகம் மணிக்கு பல லட்சம் கிலோ மீட்டர் என்று சொல்லுவார்கள்.. அந்த வேகத்தில் பயணித்தால் கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு உள்ளார்கள்.. அதுமட்டுமன்றி ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோதும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது.. அதன் விளைவாக உருவானது தான் இந்தக் கதை.

மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா..? சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள்..

ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன் முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்த படத்தின் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறோம்.. முனிவர்கள் சித்தர்கள் காலத்திலேயே இப்படி எண்ணங்கள் மூலமாக பயணம் செய்திருக்கும் நிறைய செய்திகள் உண்டு.. ராவணன் நினைத்ததும் புஷ்பக விமானம் வந்து நின்றதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.. இங்கே புஷ்பக விமானம் என்பது கூட அவரது சிந்தனை தான்..

பத்திருபது வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா..? ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப் படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை..ஒரு பாடகர் இருப்பதால் ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும்.

பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.. நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.. படத்தின் மூன்று பாடல்களை நாயகர்களில் ஒருவரான ராஜேஷ் கிரி பிரசாத்தே பாடியுள்ளார். இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதால் நடிப்பு பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஒர்கஷாப் நடத்தினோம்..

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.. இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதிக்கு நன்கு தெரியும்..

இந்தபடம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டு பணிகளில் மிகுந்த உதவியாக இருந்து வருகிறார். ஒரு சீனில் கூட விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை

ஆடியோ வெளியாகி உள்ளது.. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது” எனக் கூறினார் இயக்குநர் பிஜூ .

நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். இசை : நிரஞ்சன் பாபு (அறிமுகம்)
பாடல்கள் : விக்னேஷ் ஜெயபால்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (12)ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. “8 தோட்டாக்கள்” படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார்.

அவர் கூறும்போது, “முதல் மற்றும் முக்கியமான விஷயம், இந்த ஸ்கிரிப்ட், நாம் ஒருபோதும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. என்னை பொருத்தவரை, “ஜீவி” படத்தை நான் ஒரு ‘பேண்டஸி-த்ரில்லர்’ என்று கூறுவேன். ஆனால் சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்தவர்களால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் படம் கொண்டிருந்த புதிய மற்றும் தனித்துவமான கூறுகளால் மிகவும் உற்சாகமடைந்தனர். அடுத்து என்னை கவர்ந்த விஷயம் எனது கதாபாத்திரம், இது “8 தோட்டாக்கள்” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உண்மையில், நான் பல்வேறு கதைகளை கேட்டேன், ஆனால் அவை எல்லாமே ஒரே மாதிரியாக, என் அறிமுக படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை ஒரு ஆச்சரியமான அவதாரத்தில் அவரது அறிமுகப் படம் 8 தோட்டாக்கள் காட்டியிருந்தது. அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் ஏதும் ஜீவியில் இருக்குமா? எனக் கேட்டதற்கு, வெற்றி கூறியதாவது, “உண்மையில், அதுபோன்ற ஒப்பீடுகளை என்னால் இங்கு கொண்டு வர முடியவில்லை. உண்மையில், ரோகிணி மேடம் போன்ற மூத்த கலைஞர்களின் மிகச்சிறந்த நடிப்பை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. ஜீவி படப்பிடிப்பில் இருந்த எல்லோரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரோகிணி மேடம், கிளிசரின் பயன்படுத்தாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார். அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மயிற்க்கூச்செரியும் தருணமாக அமைந்தது. ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, இயக்குனர் வி.ஜே.கோபிநாத், ஒரு தயாரிப்பாளராக ‘மணி’ கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரத்துக்கும் கலைஞர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம் என வெளிப்படையாக சொன்னார். ஏனெனில் கதாசிரியர் பாபு தமிழ் முன்னரே நடிகர் கருணாகரன் மட்டுமே இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியும் என தீர்மானித்திருந்தார். எனவே, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவான மற்றும் கணிசமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

More Articles
Follows