‘நேற்று டிஆர்; இன்று சிம்பு..’ டபுள் குஷியில் விஜய்சேதுபதி

‘நேற்று டிஆர்; இன்று சிம்பு..’ டபுள் குஷியில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu vijay sethupathiஎவரும் எதிர்பாராத வகையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் டி.ராஜேந்தருடன் இணைந்து நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் புரியாத புதிர்.

இப்படத்திற்கு முதலில் மெல்லிசை என பெயரிட்டு இருந்தனர்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் காயத்ரி, ராம்திலக், சோனியா தீப்தி, அர்ஜீனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ட்ரைலரை நாளை (அக். 30) காலை 10 மணிக்கு சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.

‘தம்பி டேய் கலக்கீட்ட…’ கார்த்தியை பாராட்டிய சூர்யா

‘தம்பி டேய் கலக்கீட்ட…’ கார்த்தியை பாராட்டிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya karthiதீபாவளி விருந்தாக நேற்று கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வெளியானது.

கோகுல் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே இப்படத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த கார்த்தியின் அண்ணன் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“பருத்திவீரன் பார்த்து, கார்த்தியை கட்டிபிடித்து பாராட்டினேன்.

ஆனால் இன்று காஷ்மோராவை பார்த்ததும், சில அடிகள் தள்ளி நிற்கிறேன்.

தம்பி டேய் கலக்கீட்ட. இப்படி நான் எதிர்பார்க்கலை.

நீ என்னை முழுவதும் ஆச்சர்யமடைய வைத்துவிட்டாய்.

கோகுல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள்.” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்-தனுஷ் படங்களுடன் கனெக்ஷன் ஆன சந்தானம்

எம்ஜிஆர்-தனுஷ் படங்களுடன் கனெக்ஷன் ஆன சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam police‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படத்தில் முதன்முறையாக போலீஸாக நடிக்கிறாராம் சந்தானம்.

இப்படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என பெயரிட்டுள்ளனர்.

இது எம்ஜி.ஆரின் நல்ல நேரம் படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதில் நாயகியாக தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அமைரா நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தை வாசன் பிரதர்ஸ், சிவஸ்ரீ பிக்சர்ஸ் மற்றும் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.

தீபாவளியை கொண்டாடும் ‘தலைவர்-தல-தளபதி’

தீபாவளியை கொண்டாடும் ‘தலைவர்-தல-தளபதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajith vijayநாளை தீபஒளி திருநாள். இந்த நன்நாளை தற்போதே குழந்தைகள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா ரசிகர்களும் புதுப்படங்கள் இன்று வெளியானதை தொடர்ந்து செம குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர்களும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் மெடிக்கல் செக்-அப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் அவர் கொண்டாடுவார் எனத் தெரிகிறது.

சிவா இயக்கும் தல-57 சூட்டிங்கில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தாலும், தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.

பைரவா படப்பிடிப்புக்காக கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட குழுவினருடன் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார் விஜய்.

அங்கு அவர் கொண்டாடுவார் எனத் தெரிகிறது.

‘தளபதி’ விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

‘தளபதி’ விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sivakarthikeyanபரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைரவா.

இப்படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியானது.

இந்த டீசர் வெளியான 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த டீசரை பார்த்த சிவகார்த்திகேயன், ‘பைரவா டீசர் மாஸ்.’ என பதிவிட்டு விஜய் சார் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

கமலுடன் கனெக்ஷன் ஆகும் சூர்யாவின் ‘சிங்கம்’

கமலுடன் கனெக்ஷன் ஆகும் சூர்யாவின் ‘சிங்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan suriyaஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், நாசர், ராதாரவி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டரை இன்று நள்ளிரவில் வெளியிட்டனர்.

சூர்யா சிங்கமாக கர்ஜிக்கும் இந்த மோசன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதில் அறிவித்துள்ளனர்.

நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows