தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
இப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சிபிராஜ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர்.
இப்படத்திற்கு, கமலின் சூப்பர் ஹிட் படத்தலைப்பை வைக்க உள்ளதாக வந்த அறிவிப்பை நாம் முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்திற்கு சத்யா என்று பெயரிட்டு, தற்போது பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் வரலட்சுமி மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கமல், அமலா நடித்த சத்யா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் 1988ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sibiraj Varalakshmi next movie titled Sathya