‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக் வித் கோமாளி’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரில் ஒருவர் அஸ்வின் குமார்.

இதனையடுத்து இவருக்கும் சினிமா வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் சில படங்களில் ஹீரோவாகிவிட்டார்.

புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருடன் அந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழும் நடிக்கிறார்.

இவர்கள் இணையும் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் “அஸ்வின் குமார் கைது என பிரேக்கிங் நியூஸ் கொடுத்து அஸ்வினையே ஒரு ரசிகர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

அதில்… இளம் பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என ஒரு போஸ்டரை டிசைன் செய்து கலாய்த்துள்ளார்.

அந்த போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் (இன்ஸ்டா ஸ்டோரியில்) வெளியிட்டிருக்கிறார் நடிகர் அஸ்வின்.

Shocking : Cooku with comali Ashwin arrested

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க கமல் போடும் மெகா ப்ளான்

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க கமல் போடும் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 4 வரை கமல் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி தமிழில் இப்படியொரு வரவேற்பை நிச்சயம் பெற்றிருக்காது.

கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் 4 தொடங்கியது. அக்டோபர் 4ல் தொடங்கி 2021 ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது.

இந்தாண்டும் கொரோனா தொற்று அச்சத்தால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதில் தாமதம் ஆகிறது.

தற்போது லோகேஷ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

கமலே தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி பகத்பாசில் நரேன் காளிதாஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

தற்போது விக்ரம் படத்தின் அவுட்டோர் காட்சிகளை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இதன் பின்னர் செட் போட்டு காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

விக்ரம் சூட்டிங் நடக்கும் இதே தளத்தில் பிக்பாஸ் 5 படப்பிடிப்பும் நடக்கவுள்ளதாம். இவை இரண்டும் இவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்க உள்ளனர்.

எனவே ஒரே தளத்திற்கு சென்று பிக்பாஸ் & விக்ரம் இரண்டு சூட்டிங்கையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறாராம் உலகநாயகன்.

இப்போ சொல்லுங்க.. ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க கமல் திட்டம் போடுகிறார் தானே..

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்பது கூடுதல் தகவல்.

Kamal Haasan’s super plan for 2 of his projects

யுவனின் பர்த் டே பார்ட்டியில் பாட்டு பாடி அசத்திய சிம்பு – தனுஷ்

யுவனின் பர்த் டே பார்ட்டியில் பாட்டு பாடி அசத்திய சிம்பு – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா.

இவர் இளையராஜாவின் இளைய இசை வாரிசு என்றாலும் தனக்கான ஒரு இசை பாதையை வகுத்து அதில் வலம் வருகிறார்.

இன்றைய இளைஞர்களின் இதயம் அறிந்து பின்னணி இசையை கொடுப்பதிலும் கை தேர்ந்தவர் இவர்.

இந்த நிலையில் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.

இதனை முன்னிட்டு நேற்று பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் சிம்பு தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

யுவன் இசையமைத்த ‘லூசுப் பெண்ணே…’ என்ற பாடலை சிம்பு மேடையில் பாடினார்.

அதுபோல் யுவன் இசையமைத்த ‘ரவுடி பேபி..’ பாடலை பாடகி தீ உடன் இணைந்து தனுஷ் பாடினார்.

இந்த பாடல் வீடியோக்கள் நேற்று நள்ளிரவு முதலே வைரலாகி வருகிறது.

இந்த பார்ட்டியின் போது ‘என்ஜாயீ எஞ்சாமி’ பாடகர்களான அறிவு & தீ உடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதை தன் டிவிட்டர் தளத்தில் “எஞ்சாமிக்களுடன், ஒரு பில்லியனில் பாதி போட்டோ,” என பதிவிட்டுள்ளார் தனுஷ்.

அந்த போட்டோவை எடுத்தது நான்தான் என சந்தோஷ் நாராயணன் ரீட்வீட் செய்துள்ளார்.

Simbu and Dhanush sung a song in Yuvan’s birthday party

மை பொண்டாட்டி – சூர்யா..; வாடீ ராசாத்தீ – ரசிகர்கள்..; ஜோதிகாவை வரவேற்கும் நெட்டிசன்கள்

மை பொண்டாட்டி – சூர்யா..; வாடீ ராசாத்தீ – ரசிகர்கள்..; ஜோதிகாவை வரவேற்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை ஜோதிகா.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த பின்னர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரீ கொடுத்து ’36 வயதினிலே’ படத்தின் நாயகியானார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘வாடீ ராசாத்தி…’ பாட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அது ஜோதிகாவை வரவேற்கும் விதமாக இருப்பதாக கருதப்பட்டது.

இதனையடுத்து ஜாக்பாட், தம்பி, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதுநாள் வரை எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இணையாத ஜோதிகா தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

அதை அவரது கணவர் சூர்யா வரவேற்றுள்ளார்.

Vaadi Raasathi.. #Jo enters #Insta

#Jyotika is on Instagram officially now – her very first social media account

https://t.co/k5ck4WwfcJ

#Suriya – “my pondatti strongest, thrilled to see you on insta” ?

Actress Jyotika makes her social media debut on Instagram

Suriya Jyothika
Suriya Jyothika
விஜய் பட நாயகியின் அந்த இடத்தில் வைத்து கேக் வெட்டி சாப்பிட்ட கணவர்

விஜய் பட நாயகியின் அந்த இடத்தில் வைத்து கேக் வெட்டி சாப்பிட்ட கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா.

இவர் ‘தமிழன்’ படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவை விட வயதில் இவர் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.

இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெர்சனல் பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

. ஒரு புகைப்படத்தில் அவர் மட்டும் வானத்தைப் பார்த்து படுத்துக் கொண்டிருக்கிறார்.

அதில் பிரியங்கா கவிழ்ந்து படுத்திருக்க, அவரது பின் புறத்தில் ஒரு கேக் போன்ற உணவுப் பண்டத்தை கத்தியால் வெட்டுகிறார் கணவர் நிக்.

அதற்கு ஸ்நாக்ஸ் எனப் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

இதற்கு 26 லட்சத்திற்கும் அதிகமாக லைக் கிடைத்துள்ளது.

ஆனாலும் பலரும் கிண்டல் செய்து… கேக் வெட்ட வேற இடமே கிடைக்கலியா? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Vijay film heroine’s recent insta post goes viral

Priyanka Chopra
Priyanka Chopra
30 நாட்களில் 4.. என்ன மனுசன்யா மக்கள் செல்வன்..; வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

30 நாட்களில் 4.. என்ன மனுசன்யா மக்கள் செல்வன்..; வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி. ஜனநாதன். இவர் அண்மையில் காலமானார். எனவே மற்ற படக்குழுவினர் இணைந்து படத்தின் மீத பணிகளையும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்தனர்.

லாபம் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ஆறுமுகக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

தற்போது தியேட்டர்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் முடங்கியிருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்ற நிலையில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியை (செப்டம்பர் 10) முன்னிட்டு லாபம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 10ம் தேதியில் ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக சன் டிவியில் ரிலீசாகி ஒளிப்பரப்பாகவுள்ளது.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள படம் ‘துக்ளக் தர்பார்’.

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர்,

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் “அரசியல் கேடி, திராவிட கோனே, காமி காமி, அண்ணாத்த சேதி” என மொத்தம் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடல்களை பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, கார்க்கி எழுதியுள்ளனர்.

இந்த துக்ளக் தர்பார் படத்தின் சேட்லைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ள நிலையில் செப்டம்பர் 10ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக சன் டிவியில் ரிலீசாகி ஒளிப்பரப்பாகவுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படமான ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ’அனபெல் சுப்ரமணியம்’. (படத்தின் பழைய தலைப்பு இது)

இப்படத்தை தீபக் சுந்தரராஜன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.

இதில் விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சனையை ஆத்மார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் படம் இது.

இதனை சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் ‘கடைசி விவசாயி’ படமும் செப்டம்பர் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என கூறப்படுகின்றது.

ஆக அடுத்த செப்டம்பர் மாதம் மட்டும் விஜய்சேதுபதி நடித்த 4 படங்கள் ரிலீசாகவிருப்பது கோலிவுட்டையே வியக்க வைத்துள்ளது எனலாம்.

Makkal Selvan Vijay Sethupathi’s 4 films to release in this month

More Articles
Follows