தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவுக்கு பல பிரபல நட்சத்திரங்களை தந்த டிவி விஜய் டிவி என்று சொன்னால் அது மிகையல்ல.
அண்மையில் குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் அஸ்வின், புகழ், சிவாங்கி உள்ளிட்ட பிரபலங்களையும் தற்போது சினிமாவுக்கு தந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினுக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
எனவே தான் இவர் தன் சமூக வலைத்தளப்பக்கங்களில் அடிக்கடி PEOPLES LOVE என்பார்.
சில டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் வெளியான
‘ஓ மணப் பெண்ணே’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இவர் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.
இந்த விழாவில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும்போதே அஸ்வின் தூங்கி விட்டதாகவும் அவர் பேசினார்.
நான் நடிச்ச படம் நல்லா வரேலன்னா நானே அந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு நானே ஏதாச்சும் செய்வேன்” எனவும் பேசினார்.
மேலும் இப்பட இயக்குனர் பேசும்போது… நான் ஒரு புதுமுக நடிகரை இயக்குவது போல இல்லை. ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவது போல உணர்ந்தேன்” என ஹீரோவுக்கு ஐஸ் வைத்த மாதிரி பேசினார்.
இதனால் அஸ்வினை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் நடிகரும் ‘திட்டம் இரண்டு’ பட இயக்குருமான விக்னேஷ் கார்த்திக் என்பவரும் அஸ்வினின் பேச்சை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
‘ஒரு ஹீரோ தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டேன். நான் இயக்குனர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன் படம் நல்லா வரலன்னா நான் எப்படியாவது ரிலீஸ் பண்ண விடமாட்டேன்னு பேசியுள்ளார்.
இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ளயா ? அப்போ
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடைய அவல நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக மாறி விட்டால் என்ன நடக்கும்.
இவர் கதை கேட்கும்போது லைட்டா கண் சிமிட்டினாள் கூட ஒருவேளை சார் தூங்குறாருன்னுல்ல தோணும்.’ என்று பதிவிட்டுள்ளார்.
Ashwin speech at Enna Solla Pogirai audio launch creates controversy