அசிங்கமா பதிவிட்ட அஸ்வின்..; மீண்டும் கிளம்பியது சர்ச்சை

அசிங்கமா பதிவிட்ட அஸ்வின்..; மீண்டும் கிளம்பியது சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அஸ்வின்.

இதனையடுத்து பல ஆல்பங்களில் அவருக்கு சான்ஸ் வந்தன. அனைத்தும் ஹிட்டாகியது.

எனவே சினிமா வாய்ப்புகளும் அஸ்வினுக்கு வரத்தொடங்கியது.

இவர் நாயகனாக நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் அண்மையில் வெளியாகியது. ‘

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் ஓவராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் உறங்கிவிடுவேன். நான் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டேன். அவை பிடிக்கவில்லை எனவே தூங்கி விட்டேன்.

நான் அழகாக இருப்பதாக நினைத்தால் என் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள் என் ஏதோ உளறிவிட்டார்.

அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்தான் படத்தின ரிலீசும் நீண்ட நாட்கள் தாமதம் ஆனது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்… ’பழிவாங்குவதா? நான் மிகவும் சோம்பேறி, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன், கர்மா உன்னை…. F…. ’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆங்கில வார்த்தையின் அந்த முதல் எழுத்தை பார்க்கும்போதே அது ஏதோ கெட்ட வார்த்தையை குறிப்பதாக உள்ளது.

அந்த வார்த்தை முழுதாக தெரியாதபடி அழித்து இருக்கிறார்..

இந்த மோசமான வார்த்தையை அஸ்வின் ஏன் பயன்படுத்தினார்? இவருக்கு இது தேவையா என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Ashwin recent insta post creates controversy

நிதிஅகர்வால் உடன் காதல்..: தன் பிறந்தநாளில் அறிவிப்பாரா சிம்பு.?

நிதிஅகர்வால் உடன் காதல்..: தன் பிறந்தநாளில் அறிவிப்பாரா சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு தன் பிறந்தநாளை நாளை மறுநாள் பிப்ரவரி 3ல் கொண்டாடவுள்ளார்.

எனவே சிம்பு ரசிகர்களுக்கு விருந்தளிக்க அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட் வர ரெடியாகவுள்ளது.

’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய சிம்பு படங்களின் அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் சிம்பு நடிக்கவுள்ள புதிய படங்களின் அறிவிப்பும் வெளியாகலாம்.

இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.

‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தபோது நிதி அகர்வாலுடன் சிம்பு நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.

மேலும் அடிக்கடி சிம்பு வீட்டில் நிதி அகர்வால் வந்து செல்வதாகவும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

எனவே பிப்ரவரி 3ஆம் தேதி இவர்களின் காதல் அல்லது திருமணம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நிதி அகர்வால் தன் அண்மை பேட்டியில் கூறியதாவது…

’ஓரிரு வதந்திகள் உண்மையாக இருக்கலாம். சில வதந்திகள் பொய்யாகவும் இருக்கலாம். வதந்திகளை பற்றி கவலைப்பட தேவையில்லை. அது உண்மையாக இருந்தால் பெற்றோருக்கு தெரிந்தால் போதும்’ என விளக்கம் அளித்துள்ளார்.

இவரின் பதிலால் கூடுதல் சந்தேகத்துடன் ரசிகர்கள் இவர்களின் காதலை எதிர்பார்க்கின்றனர்.

இன்னும் ஒருநாள் தானே.. காத்திருப்போம்.. காதலர்களே….

Simbu and Niddhi Agarwal to get married soon ?

‘சீயான்’ விக்ரம் – ‘தல’ தோனி திடீர் சந்திப்பு.. காரணம் இதுதானா..?

‘சீயான்’ விக்ரம் – ‘தல’ தோனி திடீர் சந்திப்பு.. காரணம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி பல ஜாம்பவான்களை கண்டுள்ளது. அதில் சில கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

அதில் முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. இந்த நட்சத்திர வீரரை அன்பாக தல என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடி வருவதால் தமிழக ரசிகர்களுக்கு இவர் மீது பாசம் அதிகம்.

எனவே இவரும் அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிப்பது உண்டு.

சில மாதங்களுக்கு முன் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துக் கொண்டிருக்கும்போது அந்த தளம் அருகே பீஸ்ட் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார் விஜய்

அப்போது இவர்கள் சந்தித்து எடுத்த படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பாக சென்னை வந்த தோனியை நடிகர் சீயான் விக்ரம் சந்தித்துள்ளார்.

இவர்கள் சந்தித்துக் கொண்டதற்கான காரணம் சரியாக சொல்லப்படவில்லை.

வருகிற பிப்ரவரி 10ல் விக்ரம் அவரது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

எனவே தங்கள் பணிகளை குறித்து அவர்கள் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Reason behind Thala Dhoni and Chiyaan Vikram recent meet

தனுஷின் ‘நானே’ வருவேன்…; நானே தருவேன் அப்டேட் – செல்வராகவன்

தனுஷின் ‘நானே’ வருவேன்…; நானே தருவேன் அப்டேட் – செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தம்பி நடிகர் தனுஷ்… அண்ணன் இயக்குனர் செல்வராகவன்.. இவர்கள் இணைந்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம்தான்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இந்த கூட்டணியில் யுவன் இணைந்தால் அது பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.. எனவே இவர்களின் கூட்டணிக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றி வருகின்ற படம் தான் ‘நானே வருவேன்’.

தற்போது நானே தருவேன் அப்டேட் வழங்கியுள்ளார் செல்வராகவன்.

“யுவனுடன் ‘நானே’ வருவேன் பாடல்களை தற்போதுதான் முடித்தேன். இதை உங்களுடன் ஷேர் செய்யாமல் இருக்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என பதிவிட்டுள்ளார்.

இத்துடன் செல்வராகவன் யுவனுடன் எடுத்த ஒரு செஃல்பி போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

Selva Raghavan gives Dhanush starrer Naane Varuven film update

இளையராஜா இல்லாத மிஷ்கின் படம்..; விஜய்சேதுபதியுடன் கூட்டணி

இளையராஜா இல்லாத மிஷ்கின் படம்..; விஜய்சேதுபதியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான நடிகர்களின் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை போல் தங்கள் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின்.

சித்திரம் பேசுதடி… அஞ்சாதே.. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. நந்தலாலா முதல் துப்பறிவாளன், சைக்கோ வரை அனைத்து படங்களையும் வித்தியாசமாக இயக்கியிருந்தார்.

இவரது படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையே உயிரூட்டியது.

இவை அனைத்தும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

துப்பறிவாளன் 2 இயக்கி கொண்டிருந்தபோது அப்பட நாயகன் விஷாலிடம் ஏற்பட்ட பிரச்சினையால் அது இருந்து விலகி தற்போது பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம் மிஷ்கின்.

இந்த படத்திற்கு இளையராஜா குடும்பத்தினர் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக மிஷ்கின் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Mysskin and Vijay Sethupathi joins for a new film

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமௌலி

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள மிகப்பிரம்மாண்ட படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.

இதனை சுருக்கமாக ஆர்ஆர்ஆர் என அழைக்கின்றோம்.

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இப்படம் வரும் கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து பின்னர் ஒத்தி வைத்தது.

இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலாகி வருகிறது.

எனவே தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என அப்போது தெரிவித்து இருந்தனர்.

அதன்பின்னர் ஜனவரி 21ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில்..

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றால் மார்ச் 18ஆம் தேதி படத்தை வெளியிடுவோம். அல்லது மற்றொரு தேதியாக ஏப்ரல் 28ல் படத்தை வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று ஜனவரி 31ஆம் தேதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்.. மார்ச் 25ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

New release date announced for RRR movie

More Articles
Follows