கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்…

கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார்.

இதில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் சணல் ஆமன்.

ஜப்பான் படத்தில் கார்த்தி உடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக, மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘மாலிக்’ படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்த சணல் ஆமன்.

மேலும், சணல் ஆமன் கார்த்தியுடன் இணைந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sanal Aman Joined Karthi’s ‘Japan’

‘மௌனராகம்’ – ‘ஈரமான ரோஜாவே’ இயக்குனர் தாய் செல்வம் காலமானார்

‘மௌனராகம்’ – ‘ஈரமான ரோஜாவே’ இயக்குனர் தாய் செல்வம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களும் உருவெடுத்து வருகின்றன. சினிமா நடிகர் நடிகைகளுக்கு உள்ளது போல் சின்னத்திரை நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ரசிகர் வட்டம் பெருகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல டிவி சீரியல் இயக்குனர் தாய் செல்வம் என்பவர் இன்று காலமானார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல டிவி சீரியல்களை இயக்கியுள்ளார்.

காத்து கருப்பு, தாயுமானவன், மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

இவரது மரணம் குறித்து விஜய் டிவி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

TV Serial Director Thai Selvam passed away

———

உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..

#RIPDirectorThaiSelvam
#KaathuKaruppu #Thaayumaanavan
#KalyanamMudhalKaadhalVarai
#MounaRaagam Season 1
#NaamIruvarNamakkuIruvar
#PaavamGanesan
#EeramaanaRojaave Season 2

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘வாரிசு’.

இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 அன்று சென்னையில் நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

vijay’s varisu audio launch date announcement

ஆர்.ஜே பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ தலைப்பு..

ஆர்.ஜே பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ தலைப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக உயர்ந்தவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Aishwarya Rajesh with RJ Balaji’s titled ‘Run Baby Run’.

இயக்குநர் இல்லை என்றால் எந்த நடிகரும் தெரிய மாட்டார்கள்.. – அப்புக்குட்டி

இயக்குநர் இல்லை என்றால் எந்த நடிகரும் தெரிய மாட்டார்கள்.. – அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐயப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கட்சிக்காரன்’ படத்தில் விஜித் சரவணன், அப்புக்குட்டி, ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அப்பு குட்டி பேசும்போது…

“விஜித் சரவணன் நல்ல மனிதர். படத்திற்காக ஒத்திகை பார்க்கும் போதெல்லாம் எப்படி நடித்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்பார். நானே பயந்து கொண்டுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர் அவ்வளவு ஆர்வமாகக் கேட்பார். அவர் இப்படி நடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஒரு படத்திற்கு இயக்குநர்தான் முக்கியம். இயக்குநர் இல்லை என்றால் எந்த நடிகர்களும் வெளியே தெரிய மாட்டார்கள். குறுகிய காலத்தில் 20 நாளில் இந்தப் படத்தை முடித்துள்ளார்கள் .நான் கெஸ்ட் ரோலில் இப்படத்தில் வருகிறேன். ஆனாலும் எனக்குத் திருப்தியான வாய்ப்பு இது “என்று கூறினார்.

கட்சிக்காரன்

Appukutty speech at katchikaaran audio launch

தொண்டனுக்கும் தலைவனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்.; ‘கட்சிக்காரன்’ இயக்குநர் ஐயப்பன் பேச்சு

தொண்டனுக்கும் தலைவனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்.; ‘கட்சிக்காரன்’ இயக்குநர் ஐயப்பன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐயப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கட்சிக்காரன்’ படத்தில் விஜித் சரவணன், அப்புக்குட்டி, ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஐயப்பன் பேசும்போது…

” முதலில் எனது குருநாதர் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் பட வாய்ப்பு கொடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எப்படிப்பட்டது இதன் கதை என்னவென்றால்.

தொண்டனுக்கும் தலைவனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இந்தப்படத்தின் கதை. இது தவறு செய்யும் தலைவனைத் தட்டிக் கேட்கும் ஒரு தொண்டனின் கதை.

இன்றைய அரசியலில் பல விஷயங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலைச் சீரழித்துக் கொண்டிருக்கும் சாதிக் கட்சிகள் ஒழிய வேண்டும். சாதிக் கட்சிகள் தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன.

சாதிக் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது.

காமராஜர், கக்கன் போன்ற நல்ல மனிதர்கள் தலைவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றவர்,
படத்தில் பணியாற்றிய அனைவரது பெயர்களையும் ஒன்று விடாமல் பட்டியலிட்டு வாசித்து நன்றி கூறினார்.

கட்சிக்காரன்

director iyyappan speech at katchikaaran audio launch

More Articles
Follows