கணவரின் காதலி சாய் பல்லவிக்கு மட்டும் சமந்தா வாழ்த்து..; டைவர்ஸ் கன்பார்ம்..?

கணவரின் காதலி சாய் பல்லவிக்கு மட்டும் சமந்தா வாழ்த்து..; டைவர்ஸ் கன்பார்ம்..?

நடிகை சமந்தாவின் காதல் கணவர் நாக சைதன்யா நடித்து வரும் படம் ‘லவ் ஸ்டோரி’.

இந்த லவ் ஸ்டோரி -யில் நாக சைதன்யாவின் காதலியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

அண்மையில் இப்பட ட்ரைலர் வெளியானது. இதனைப் பார்த்த சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் சமந்தா.

இதனையடுத்து சில ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?? என கேள்வி எழுப்பினர். ஆனாலும் அதற்கு சமந்தா பதிலளிக்கவில்லை.

ஆனால் சமந்தாவுக்கு நாக சைதன்யா நன்றி தெரிவித்துள்ளார்.

விரைவில் நாக சைதன்யா சமந்தா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக பேசப்படும் நிலையில் இந்த லவ் ஸ்டோரி விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Samantha wishes to Sai Pallavi creates controversy

SPB நினைவு நாளில் ரஜினிகாந்த் படக்குழுவினர் கொடுக்கும் கௌரவம்

SPB நினைவு நாளில் ரஜினிகாந்த் படக்குழுவினர் கொடுக்கும் கௌரவம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 25 மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி. இறந்தநாளை முன்னிட்டு அவர் மறைவுக்கு முன் பாடிய கடைசி பாடலை சிங்கிள் ட்ராக் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலாக அமைந்துள்ளதாம்.

Annaatthe First single track is planned to be out on September 25th.

Rajinikanth’s peppy intro track sung by legendary singer late SPB coming on his first year death anniversary

மீண்டும் தனுஷ் – அமீர் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குனர்

மீண்டும் தனுஷ் – அமீர் கூட்டணியை இணைக்கும் பிரபல இயக்குனர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

‘மாறன்’ படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இதில் தனுஷுடன் மாளவிகா மோகனன், மகேந்திரன் உள்ளிட்டோர் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘மாறன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் அமீர் நடிக்கவுள்ளாராம்.

விரைவில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் அதில் அமீரின் காட்சிகளை படமாக்கப்படவுள்ளனர்.

ஏற்கெனவே வெற்றிமாற்றின் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் – அமீர் இணைந்து பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Ameer joins for a new film

சூர்யா படத்தலைப்பானது ரஜினி பாடல்.; ரம்யா & வாணி இணையும் பட ரிலீஸ் அப்டேட் இதோ

சூர்யா படத்தலைப்பானது ரஜினி பாடல்.; ரம்யா & வாணி இணையும் பட ரிலீஸ் அப்டேட் இதோ

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’… என்ற இந்த பாடலை கேட்டால் ரஜினி முகம்தான் நினைவுக்கு வரும்.

2019ல் ரிலீசான ‘பேட்ட’ பட க்ளைமாக்ஸ் சீனிலும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார் ரஜினி.

தற்போது இந்த பாடல் வரியை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக்கியுள்ளார் சூர்யா.

இந்த படத்தை இம்மாதம் ஓடிடி தளமான அமேசானில் ரிலீஸ் செய்கிறார்.

அதன் விவரம் வருமாறு…

“அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது.

இத கொஞ்சம் பாருங்க : சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி-முத்தையா கூட்டணி.; டைட்டில் லுக் ரிலீஸ்

இப்படத்தின் முன்னோட்டத்தை (டிரைலர்) இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம்.

மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இத கொஞ்சம் பாருங்க : ‘தலைவி’க்கு தலைவர் ரஜினி பாராட்டு..; விஜய்யிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள்.

இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

இதுதொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில்…

,’ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் இதய பூர்வமான மனிதர்களின் உணர்வுகளை சொல்லும் கதை.

சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில்,…

‘ இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர்.

படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன்.

இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும்.

இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்.’ என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,…

‘ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

Amazon Prime Video Drops Heartwarming Trailer Of The Much-Anticipated Tamil film (RARA) Raame Aandalum Raavane Aandalum

Just in ‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என ரஜினி தரப்பில் அறிக்கை

Just in ‘அண்ணாத்த’ பேனருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்..; அருவருப்பான செயல் என ரஜினி தரப்பில் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.்

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இந்த நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Rajinikanth fan club condemns the “goat sacrifice” incident for Annaatthe First Look celebrations

Rajini statement

தீபாவளி ரேஸ் : ‘அண்ணாத்த’ & ‘மாநாடு’ படங்களுடன் மோதும் ‘பகவான்’

தீபாவளி ரேஸ் : ‘அண்ணாத்த’ & ‘மாநாடு’ படங்களுடன் மோதும் ‘பகவான்’

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்” மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மக்களின் நாயகன் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார்.

இத கொஞ்சம் பாருங்க : ‘பிக்பாஸ்’ ஆரிக்கு வில்லனாகும் ‘ஜிமிக்கி கம்மல்’ நடிகர்

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப்பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துகொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆரி அர்ஜீனன்.

ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்க, படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

(ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் கோப்ரா படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்னாக நடிக்கிறார்.

தொழில் நுட்ப குழுவினர் விபரம்

இயக்கம் – காளிங்கன்

ஒளிப்பதிவு – முருகன் சரவணன்

இசை – பிரசன் பாலா

படத்தொகுப்பு – அதுல் விஜய்

நடன அமைப்பு – கலா மாஸ்டர்

ஸ்டண்ட் – ஹரி தினேஷ்

பாடல்கள் – சம்பத் G

உடை வடிவமைப்பு – வினயா தேவ்

ஸ்டில்ஸ் – மணிகண்டன்

லைன் புரடியூசர் – முருகன் சரவணன்

இணை தயாரிப்பு – V. ஶ்ரீனிவாசா

தயாரிப்பு – C.V. மஞ்சுநாதா

Aari Arjunan’s Bhagavan to clash with Rajini and Simbu films

More Articles
Follows