விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் டைரக்டர்

விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salim fame Nirmal kumar directes Vikram Prabuவிஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றாலும் இப்படத்திற்குப் பிறகு நிர்மல் குமார் எந்தப் படத்தை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது, ‘அசுரகுரு’, ‘துப்பாக்கி முனை’ படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

இப்படங்களை முடித்துவிட்டுதான் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிப்பார்.

Salim fame Nirmal kumar directes Vikram Prabu

தொடர் தோல்வி படங்களால் ஷாம்லி கவலை; அஜித் காப்பாற்றுவாரா..?

தொடர் தோல்வி படங்களால் ஷாம்லி கவலை; அஜித் காப்பாற்றுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Shamili and her movie updatesகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஷாம்லி.

இவரின் அக்கா ஷாலினி நடிகர் அஜித்தின் மனைவி என்பது தங்களுக்கு தெரியும்தானே..

குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிய ஷாம்லி தற்போது நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

அண்மையில் நாகசவுரியாவுடன் ஷாம்லி நடித்த அம்மம்மாகரிலு என்ற தெலுங்கு படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இது ஷாம்லிக்கு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளதாம்.

இனி தல அஜித் அவரது படத்தில் கைகொடுத்தால்தான் உண்டு என நலம் விரும்பிகள் கூறி வருகின்றனர்.

தல என்ன செய்வார் என்பதை பார்ப்போம்.

Actress Shamili and her movie updates

சந்தானத்திற்கு உள்ள தைரியம் எனக்கில்லை.. – சதீஷ் ஓபன் டாக்

சந்தானத்திற்கு உள்ள தைரியம் எனக்கில்லை.. – சதீஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedian Sathish going to as Villain in Tamilpadam 2point0காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சூரி, சதீஷ் ஆகியோரும் விரைவில் நாயகர்களாக நடிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் காமெடியன் சதீஷ் தமிழ்படம் 2.0 படத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறாராம்.

இதுபற்றி சதீஷ் கூறியதாவது…

’நான் அறிமுகம் ஆனதே சிஎஸ். அமுதன் இயக்கிய தமிழ் படம் பாகம் 1 இல் தான்.

இப்போது இதன் 2ஆம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறேன்.

இதில் எனக்கு 15 கெட்டப்கள் இருக்குது. இந்த படம் எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கித் தரும்.

ஆனால் நான் ஹீரோவாக நடித்து மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை.

சந்தானத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார்.

உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை.” என்றார்.

Comedian Sathish going to as Villain in Tamilpadam 2point0

தமன்னாவை மணந்தார் நடிகர் சௌந்தரராஜா

தமன்னாவை மணந்தார் நடிகர் சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Soundarraja and Thamannah got married‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா.

அதனை அடுத்து `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ஜிகர்தண்டா’, `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, `தர்மதுரை’, `ஒரு கனவு போல’, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `ஈடிலி’, `கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் இன்னும் ரிலீஸாகவில்லை.

மேலும் கருவேல மரங்கள் அழித்தல் உள்ளிட்ட பல சமூக சேவைகளில் ஈடுபட்டும் வருகிறார்.

இந்நிலையில் இவர் க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவை நேற்று திருமணம் செய்தார்.

இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளராம் இந்த புது மாப்பிள்ளை.

Actor Soundarraja and Thamannah got married

அடுக்கடுக்கான புகார்களை கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்

அடுக்கடுக்கான புகார்களை கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer PL Thenappan resigned his post from Producer Councilதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விஷாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன்.

இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை.

இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்துள்ளேன்.

முதலில் தி.நகர் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன் பாடில்லை.

சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.

செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடத்தப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.

வேலை நிறுத்தத்தினால் கியூப் கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 முறையில் வசூலிக்கப்படுகிறது.

4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும் பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தை விடவும் அதிகம்.

நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தயாரிப்பாளர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதால் எனக்கு ஓட்டளித்த தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிர்வாகத்தின் அங்கமாக நான் தொடர விரும்பவில்லை.

எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Producer PL Thenappan resigned his post from Producer Council

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விக்ரம் படக்குழுவினர் எடுத்த முடிவு

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விக்ரம் படக்குழுவினர் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram saamy 2ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் `சாமி ஸ்கொயர்’.

இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எனவே இன்று மே 26ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் சாமி ஸ்கொயர் பட டிரைலரின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Saamy square team postponed their Trailer release due to Tuticorin sterlite issue

More Articles
Follows