கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தில் இணையும் சரத்குமார்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தில் இணையும் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் 3” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ‘சலீம்’ வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இந்த கட்ட படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.

சரத்குமார் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டால், “வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான், அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். குறிப்பாக, சரத்குமார் – சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது” என்றார்.

கணேஷ் சந்திரா (ஒளிப்பதிவாளர்), ஆனந்த் மணி (கலை) மற்றும் சக்தி சரவணன் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதேயில்லை. இந்த கூட்டணியில் சமீபத்தில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை இரு நாட்களுக்கு முன்பு FMல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. மறுபுறம், திரை ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமைகளை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்ஸாண்டர் பெற்றிருப்பதால், படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்துவதும், பெரிய அளவில் வெளியிடுவதும் ஒரு நல்ல படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற ஒரு வழக்கமான அனுமானங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஒரு நல்ல படம் தான் தயாரிப்பாளரையோ அல்லது வினியோகஸ்தரையோ உயர்த்தும். இயக்குனர் சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை. அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம் தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது. புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்குறார். அந்த வகையில் “ஏஞ்சலினா” படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, நான் தனிப்பட்ட முறையில் அதன் ஒவ்வொரு செய்தியையும் கவனித்து வருகிறேன். வண்ண மயமான, இளமையான விஷயங்களை காட்டும் அதே நேரத்தில், திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையையும் கொண்டுள்ளது” என்றார்.

ஏஞ்சலினாவின் இசை வெற்றியை பற்றி அலெக்ஸாண்டர் கூறும்போது, “சுசீந்திரன் – டி இமானின் அசத்தல் கூட்டணி, அவர்கள் பயணத்தின் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை பெறறு வருகிறது. ஏஞ்சலினா இசைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இசை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் எனக்கு பிடித்தமான பாடல். விரைவில் எங்கள் விளம்பர பணிகளை துவங்க இருக்கிறோம், சரியான ஒரு ரிலீஸ் தேதியை முடிவு செய்த பிறகு அதை அறிவிப்போம்” என்றார்.

க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ஏஞ்சலினா, காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.சூர்யா (ஒளிப்பதிவு), தியாகு (படத்தொகுப்பு), ஜிசி ஆனந்தன் (கலை), டி இமான் (இசை), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி) மற்றும் ஷோபி (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

நடிகர் சங்க தேர்தல்: நாசர் Vs பாக்யராஜ்; விஷால் Vs ஐசரி கணேஷ்

நடிகர் சங்க தேர்தல்: நாசர் Vs பாக்யராஜ்; விஷால் Vs ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganesh To Contest Opposite Vishal In Nadigar Sangam electionவரும் ஜீன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இது சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

இந்த அணிக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து போட்டியிடவுள்ளார் பாக்யராஜ்.

உதயாவுடன் இணைந்து குட்டி பத்மினியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கிறார்.

இந்த அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நபர் பெயர் வெளியாகவில்லை.

இதற்கு ஜெயம் ரவி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் நடிகர் கார்த்தியை எதிர்த்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

Ishari Ganesh To Contest Opposite Vishal In Nadigar Sangam election

வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப்படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் “IGLOO” அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது.

அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் “நேர்மறை” சிந்தனைகள் தான். எமோஷனல் காதல் கதையான இந்த படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம். இதை கேட்டு விட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். நல்ல ஒரு கருத்தை இந்த தருணங்கள் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டுமொத்த குழுவும் நம்புகிறோம்” என்றார்.

மேலும், பரத் மோகன் கூறும்போது, “நாங்கள் இந்த படத்தை மிக யதார்த்தமாக காட்ட விரும்பினோம். சினிமா மிகைப்படுத்தல்களை தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவை தான். அனைத்து கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், இது ஒரு சிறப்பான அனுபவம். முன்னணி கதாப்பாத்திரங்களில் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று” என்றார்.

அரோல் கொரேலி தனது இனிமையான இசைப்பதிவுக்காக புகழ்பெற்றவர், இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ். பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குனராகவும், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

யாருய்யா கிளப்பிவிட்டது..? பிக்பாஸ் 3 சீசனில் சாந்தினி இருக்காரா..?

யாருய்யா கிளப்பிவிட்டது..? பிக்பாஸ் 3 சீசனில் சாந்தினி இருக்காரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Chandini Tamilarasan is not a part of Bigg Boss Season 3கமல்ஹாசன் படங்களை விட அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது மவுசு அதிகம்.

விரைவில் அதாவது வருகிற ஜீன் 23 முதல் பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது. இதற்கான புரோமோ தற்போது அந்த டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

15 பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை) ஆனால் இதை சாந்தினி மறுத்துள்ளார்.

“பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்க யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அழைத்தாலும், அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப்போவதும் இல்லை.

சிலர் தவறாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்” என சாடியுள்ளார் சாந்தினி.

Actress Chandini Tamilarasan is not a part of Bigg Boss Season 3

2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா

2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 63 actor Soundararaja cleaned Beachதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சவுந்தரராஜா ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார்.

மக்களுக்கான போராட்டமான ஜல்லிக்கட்டில் இவர் பெரிதும் பங்காற்றினார்.

தற்போது பீச்சை சுத்தம் செய்யும் சவாலை ஏற்று, நம்ம சென்னை டாக்டர் ராஜலட்சுமி குழுவினரும், நடிகர் சவுந்தரராஜாவின் மண்ணை நேசிப்போம், மக்களை நேசிப்போம் என்ற அறக்கட்டளை குழுவினரும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் பீச்சை சுத்தம் செய்திருக்கிறார்கள்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர்.

100 கிலோவிற்கு மேலான குப்பைகளை இவர்கள் அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து சுத்தம் செய்திருக்கிறார்கள்.

நாம் இருக்கும் இடத்தை வேறொருவரை எதிர்பார்க்காமல், நாமாகவே சுத்தம் செய்தால் வீடும், நாடும் வளம் பெறும் என்று நடிகர் சவுந்தரராஜா இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Thalapathy 63 actor Soundararaja cleaned Beach

More Articles
Follows