‘சலீம் 2’ படத்திற்கு வேற டைட்டில் வைத்த விஜய் ஆண்டனி்.; ஹீரோயின் & டைரக்டர் யார் தெரியுமா.?

‘சலீம் 2’ படத்திற்கு வேற டைட்டில் வைத்த விஜய் ஆண்டனி்.; ஹீரோயின் & டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான படமாகும்.

விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி சலீம் படத்தின் 2வது பாகமான “மழை பிடிக்காத மனிதன் “ படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளோடு ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது படக்குழு.

கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் (சலீம்-2) படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார்.

படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.

“மழை பிடிக்காத மனிதன்” கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் , S. விக்ரம் குமார் of INFINITI FILM VENTURES ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Vijay Antony’s Salim film sequel gets this title

சர்ச்சைக்குரிய காலண்டரை மாற்றியது ‘ஜெய்பீம்’ படக்குழு

சர்ச்சைக்குரிய காலண்டரை மாற்றியது ‘ஜெய்பீம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடித்து நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசானது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் பிரபலமாகி வரும் வேளையில் சில சமூகத்தினர் சில காட்சிகளுக்கு தெரிவிப்பு தெரிவித்தனர்.

அசுரன் பட புகழ் தமிழ் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக (கொடுமைக்காரன்) நடித்து இருந்தார்.

அவரின் கேரக்டரை வன்னியர் போன்று சித்தரித்ததற்கு அந்த பிரிவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும் ஒரு காட்சி பின்னணியில் இருந்த காலண்டரில் (1995 வருட காலண்டர்) தீச்சட்டி படம் இடம் பெற்றது. அந்தக் குறியீடுதான் வன்னியர்களின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவரும் இந்த தவறான சித்தரிப்பிற்கு தனது கண்டனப் பதிவை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் அந்த காலண்டரில் இருந்த சர்ச்சைக்குரிய படம் நீக்கப்பட்டு தற்போது சரஸ்வதி படம் வைக்கப்பட்டுள்ளது.

Controversy calendar removed from Suriyas Jaibhim movie

சென்னையில் வெளுத்து கட்டும் மழை..; அதிமுக அரசை வெளுத்து வாங்கும் சேரன்..!

சென்னையில் வெளுத்து கட்டும் மழை..; அதிமுக அரசை வெளுத்து வாங்கும் சேரன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நாள் இரவு தான்.. விடியல் காலையில் அனைத்து சேனல்களில் தலைப்பு செய்தியானது… மழை வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை.

விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 8 மற்றும் 9) தேதிகளில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

மேலும் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் யாரும் தற்போது சென்னை திரும்ப வேண்டாம். இன்னும் 2 நாட்கள் கழித்து வாருங்கள் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டர் பதிவில்…

மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க (முதல்வர் ஸ்டாலின்) @CMOTamilnadu அய்யா. என்று தனியும் இந்த….
என பதிவிட்டுள்ளார் சேரன்.

Director Actor Cheran talks about Chennai rain

மக்களையும் தேவரய்யாவையும் தவறாக பேசினார்.; விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மகாகாந்தி ஓபன்டாக்

மக்களையும் தேவரய்யாவையும் தவறாக பேசினார்.; விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மகாகாந்தி ஓபன்டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட்டை தாண்டி அனைத்து மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் மகாகாந்தி என்ற ஒரு நபர் ஓடிவந்து விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்தினார். அதாவது அவரை பின்னில் இருந்து எட்டி உதைக்கிறார்.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் என்ன காரணம் என வெளியே தெரியாமல் மூடப்பட்டது.

ஆனால் இது தொடர்பான எந்த புகாரும் காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.

‘இந்த விவகாரத்தை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதாக விஜய்சேதுபதியின் உதவியாளர் தெரிவித்தார்.

இது நடந்து சில தினங்கள் ஆன நிலையில் மகாகாந்தி என்ற அந்த நபர் பிரபல யூடியூப் தளத்தில்…”நான்தான் அடித்தேன். அது உண்மைதான். என தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 6.5 அடி உயரம் இருக்கும் இவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம்.

அவரின் பேட்டியில்.. என் தமிழ் மக்களையும் என் குலதெய்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரய்யா அவர்களையும் விஜய்சேதுபதி தவறாக பேசினார். எனவே மனஉளைச்சல் ஆனது. எனவே அவரை தாக்கினேன்,

அவர் மக்கள் செல்வன் என்ற போர்வையில் உள்ளார். ஆனால் மக்களுடன் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Reason behind Vijay Sethupathi attack at Bengaluru airport

கிராம வழிபாடுகளில் ‘வா சாமீ…’ நிச்சயம் ஒலிக்கும்..; ‘அண்ணாத்த’ பாடலாசிரியர் ஆனந்தம்

கிராம வழிபாடுகளில் ‘வா சாமீ…’ நிச்சயம் ஒலிக்கும்..; ‘அண்ணாத்த’ பாடலாசிரியர் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வா சாமி” பாடல் மூலம் திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி.

இவர் ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் நம்பர் கொடுத்துள்ளார்.

இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி நம்மிடம் கூறும் போது…

“வா சாமி” பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சிறு தெய்வங்களுக்கு தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவு கூறும் வகையிலும், வேட்டைக்கு செல்லும் குலசாமியின் பெருமை சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.

நொச்சிபட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் போன்ற மாற்றுத் திறனாளிகளை இந்தப் பாடல் மூலம் அறிமுகம் செய்து இசையமைப்பாளர் இமான் மக்கள் மனதில் பெரும் உயரத்திற்கு சென்றுவிட்டார்.

இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த வாசாமி பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.

மண்வாசத்தோடு கூடிய இந்தப் பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று கூறினார்.

மேலும் அருண்பாரதி தற்போது பிச்சைக்காரன்- 2, காக்கி, கடமையை செய், கார்பன், நா நா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருவதோடு, விரைவில் உரைநடையில் எழுதி வரும் தன் புத்தகங்கள் வெளிவர இருப்பதாகவும் கூறினார்.

Vaa Saamy lyric writer talks about his experience in Annaatthe

2 பேர் செய்யும் காதலை 50 பேர் செய்றாங்க.. சினிமாவில் நான் நடிக்க தேவையில்ல – கமல் ஓபன் டாக்

2 பேர் செய்யும் காதலை 50 பேர் செய்றாங்க.. சினிமாவில் நான் நடிக்க தேவையில்ல – கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது. நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,…

“நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் KB சார் தான்.அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. KB சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். அவருக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறேன் ஆனால் எழுதியதில்லை.

ஒரு நூல் கொடுத்தால் போதும் அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் KB சார். இன்னொரு காரணம் நானும் TKS நாடகக் குழுவிலிருந்து வந்தவன். ஒரு முறை பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து விட்டேன். அதை அப்போது, பையன் பிழைத்து கொண்டானா என TKS குழுவில் விசாரிக்க, களத்தூர் கண்ணம்மாவில் நடித்த பையன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்னை நாடகத்தில் நடிப்பியா எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் நாடக குழுவில் இணைந்தேன். எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன்,

அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளி விட்டது நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச்சிறப்பானது ஶ்ரீவத்சன் எடுத்துக்கொண்ட முயற்சி மிகச்சிறப்பானது.

சினிமாவில் பாட்டு பாடுவார்கள், பாம் போடுவார்கள், இரண்டு பேர் செய்ய வேண்டிய காதலை 50 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கு தனியாக ரசிகனுக்கும் சிந்தனைக்குமான தொடர்பு இருக்கும். நான் நாடகத்தின் ரசிகன் என்பது தான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை தான்.

சினிமாவில் நான் நடிக்க கூட தேவையில்லை, ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால் இங்கு மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை.

ஒரே ஒரு தடவை பார்த்த சோ அவர்களின் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது.

எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை.

மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும்.

எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம்.

வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும், அதை இந்த நாடகம் செய்துள்ளது. என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. இதில் கலந்து கொண்டவர் ஒத்திகைக்கு போகவில்லை என்றால் நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சொன்னார், ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை.

ஒத்திகையை நம்பும் வாத்தியார் எனக்கு கிடைத்தார். அதனால் அதன் அருமை எனக்கு தெரியும். நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டார்கள். ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன், நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன். டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன்.

நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

சமீபத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் ZEE5 ஒடிடி தளத்தில் வெளியான “விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Kamal Haasan praises Vinodhaya Sitham drama

More Articles
Follows