இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ல் தொடங்கியது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் கமலுடன் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

வில்லன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் நெடுமுடி வேணுவின் உதவியாளராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது அந்நியன் படத்தில் கம்பீரமான போலீஸ் பிரகாஷ் ராஜ் உடன் காமெடி போலீஸ் விவேக் இருப்பது போல இந்த கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காதலர் தின வாழ்த்து சொல்லி தன் திருமணத்தை அறிவித்த ஆர்யா

காதலர் தின வாழ்த்து சொல்லி தன் திருமணத்தை அறிவித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and sayeshaகோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையில் ஒரு டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனக்கான மணப்பெண்ணை தேடினார்.

ஆனால் அதில் எந்த பெண்ணையும் இவர் தேர்வு செய்யவில்லை.

அதன்பின்னர் இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷாவுடன நெருக்கமாகி அவருடன் காதல் கொண்டார்.

அதன்பின்னர் சாயிஷாவும் காதலிக்க, தற்போது அது திருமணம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், காதலர் தினத்தில் சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

அத்துடன் திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்.

இவர்களின் திருமணம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில் இருவீட்டார் முன்னிலையில் நடக்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா-சசிகலா வேடங்களில் நடிப்பவர்கள் இவர்கள்தான்

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா-சசிகலா வேடங்களில் நடிப்பவர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha and gautham menonமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அதன்படி தி அயர்ன் லேடி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

இவையில்லாமல் இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோரும் படங்களை இயக்குவதாக அறிவித்துள்ளனர்.

இவையில்லாமல் ராணி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிசாகவும் உருவாக்கவுள்ளார் கவுதம் மேனன்.

இதை 30 எபிசோட்களாக தயாராக்கிறாராம். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் கொண்டதாக இருக்கும்.

முதலில் ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் பின்னர் இணையதளங்களிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சசிகலா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கியபோது தைரியமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

இவர் நடிகை சரிதாவின் சகோதரி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

முதல்கட்டமாக விஜி சந்திரசேகர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கவுதம் மேனன். அப்படி என்றால் இது ஜெயலலிதா மறைந்த பின் நடக்கும் காட்சிகளாக இருக்கலாம் என நம்பலாம்.

“வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு

“வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RV udhayaDK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார், அபினவ், தீப்பெட்டி கணேசன், கே.கே.சேஷூ, கிரேன்மனோகர் மற்றும் ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ந.கிருஷ்ணகுமார் இந்தப்படத்தை இயகியுள்ளார். வல்லவன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அய்யனார் வீதி பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி, சர்வதேச மனித உரிமை கழக செயலாளரும் மற்றும் சட்ட ஆலோசகருமான தின உரிமை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் டாக்டர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் பேசியபோது, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு முறை பேசியபோது யார் யார் மனது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதைத்தான் இந்த படமும் சொல்ல வருகிறது என நினைக்கிறேன். தற்போது சிறிய படங்கள் வெளிவருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன அதை ஒழுங்குபடுத்தி 70% பெரிய படங்கள் 30% சின்ன படங்கள் என ரிலீஸ் முறையை மாற்றியமைக்க வேண்டும். பிரசாத் லேபில் 430படங்கள் ரிலீஸ் பண்ண முடியாமல் முடங்கி கிடக்கின்றன இப்படிப்பட்ட படங்கள் வெளிவந்தால் தான் சினிமா வாழும்.. இயக்குனர் பாலாவின் முதல் படம் ரிலீஸ் ஆனபோது அதை சின்ன படம் என ஒதுக்கி இருந்தால் என்னவாயிருக்கும்..? அதற்கு சில நாட்கள் வாய்ப்புக் கொடுத்தால் அது மிகப்பெரியதாக ஹிட்டானது.. தயாரிப்பளர்களை பொறுத்தவரையில் யாருக்கும் யாரும் பயப்படத் தேவை. இல்லை. யாரும் யாரை நம்பியும் இல்லை. உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இதுதான் உண்மை” என கூறினார்

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “சிறிய படங்களை நசுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் அரசிடம் பேசி இதற்கு ஒரு வழிமுறை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அவருக்கு அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.. ஆண்டவனே வந்தாலும் சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை வருவது கஷ்டம் தான்.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதை விட்டுவிட்டு, அவற்றை சிறிய படங்களுக்காக ஒதுக்க வேண்டும். பெரிய படங்கள் எப்போது வந்தாலும் ஓடிவிடும்” என கூறினார்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் பேசும்போது, “தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை விட பாப்கார்ன் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். இன்று தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டு சினிமா எடுக்கிறார்கள் ஆனால் சினிமா சம்பந்தமில்லாதவர்கள் தான் அதன் லாபத்தை அனுபவிக்கிறார்கள். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு தியேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்ற உத்தரவை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தினால்தான் தயாரிப்பாளர்கள் பிழைக்க முடியும்.. மக்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள்:” என வேண்டுகோள் வைத்தார்

இயக்குனர் பேரரசு பேசும்போது, “காதல் குடும்ப விஷயங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்களே தீர்மானம் எடுத்துக் கொள்ளவேண்டும். எல்லா விஷயங்களிலும் கோர்ட்டு தலையிட்டால் அது உருப்படாது. இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து படம் எடுக்க வேண்டும்.. ஒரு தயாரிப்பாளரின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குனரை நிம்மதியாக வாழ விடாது. இந்த வெற்றி புகழ் எல்லாம் தற்காலிகம்தான்.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் திகைப்படைந்தேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என பி.ஆர்.ஓவிடம் விசாரித்தபோது இந்தப்படத்தின் அழகான கதையை என்னிடம் சொன்னார். அதன் பின்னரே இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன். இன்று பி.ஆர்.ஓ விற்கு கூட ஒரு படத்தின் கதை தெரிந்திருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் முன்பெல்லாம் இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என ஒவ்வொருவருக்கும் பயந்த காலம் போய் இன்று யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. கோடிகளில் முதலீடு செய்து படம் எடுப்பவர்களை யாரோ ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.. அதேசமயம் தனிநபர் விமர்சனம், ஒருமையில் விமர்சிப்பதற்கு உங்களுக்கு யாருக்கு உரிமை இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்..

அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. உங்களை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை தேடி ஓடாமல், உங்கள் நிலையறிந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களை தேடிச்சென்று ஊக்குவியுங்கள் அப்போதுதான் சினிமா செழிக்கும். தயாரிப்பாளரும் லாபம் அடைவார்கள்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் 75வது விழா நடத்தி சிறப்பித்தார்கள்.. மிக நல்ல விஷயம். ஆனால் இந்த விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது நலிந்து கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை கைதூக்கி விடுவதில் காட்டினால் நன்றாக இருக்கும்” என பேசினார். அவரது பேச்சை கவனித்தபோது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா போன்றவர்கள் குறித்துதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நான் சினிமாவில் நுழைய வேண்டும் என சென்னையில் அடியெடுத்த வைத்த அந்த முதல்நாளே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது சிபாரிசுடன் திரைப்படத் துறைக்குள் நுழையும் பாக்கியம் பெற்றவன். ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்களை இயக்கியவன். தயாரிப்பாளர் சங்கத்தில் நான் மூன்றுமுறை பொறுப்பில் இருந்தபோது, திரைப்பட துறைக்கு ஏதாவது நல்லது செய்து விடலாம் என முயற்சிப்பேன்.. ஆனால் அங்கு இருக்கும் சிஸ்டம் என்னை எதுவும் செய்யவிடாமல் ஒவ்வொரு முறையும் தடுத்துவிடும்.

இருந்தாலும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமாகவே சென்று அவர்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அரசாங்கமும் நல்லது செய்ய தயாராகத்தான் இருக்கிறது.. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா முன்பு சிறிய படங்களை வாழ வைப்பதற்காக ஆயிரம் சிறிய திரையரங்குகள் கட்டலாம் என முடிவெடுத்தார். அந்த விஷயத்தை செயல்படுத்த இப்போதும்கூட அரசு தயாராகத்தான் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டு வெளியே வந்ததுமே, அவர்களைப் பற்றி குறை சொல்லி பேட்டி கொடுத்தால் அவர்களுக்கு எப்படி நமக்கு நல்லது செய்ய மனம் வரும்..? திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன்வைக்கும் பணியில் நானாகவே முன்வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன்பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள்..

அதனால் இனிமேல் இது தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில் இருந்து விலகி விட நினைக்கிறேன். மேலும் இனிவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகம் மட்டும் போதாது விவேகமும் தேவை” என தற்போதுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

இந்தப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசும்போது, “சினிமாவைப் பொறுத்தவரை நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கெல்லாம் படிப்புகள் இருக்கின்றன.. ஆனால் திரைப்பட மார்க்கெட்டிங்கிற்கு என எந்த படிப்பும் இல்லை இன்று சின்ன பட்ஜெட் படங்களை வியாபாரம் செய்ய, தியேட்டர்கள் மட்டுமே இல்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல வழிகள் உண்டு.. அதைப்பற்றி யாரேனும் விவாதிக்க முன்வந்தால் அவர்களோடு சேர்ந்து திரைப்பட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல தயாராக இருக்கிறேன். எந்த சிறிய தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடையாமல் போட்ட முதலீடு கைக்கு கிடைக்கும் வகையில் பல திட்டங்கள் இருக்கின்றன.” என ஒரு யோசனையையும் முன்வைத்தார்.

காதலர் தினத்தில் வைரமுத்துவின் காதல் பாடல்

காதலர் தினத்தில் வைரமுத்துவின் காதல் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthuகாதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.

இதோ அந்தக் காதல் பாட்டு :

மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே

ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்

காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்

*

பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே

என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?

தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி

*

பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே

திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே

மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே

சாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. ராஜேஷ் கண்ணா பேச்சு

சாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. ராஜேஷ் கண்ணா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maayanசாமி கண்ண குத்துமுன்னா பிரதமர்-முதல்வரல்லாம் குருடனாக இருப்பாங்க.. : ராஜேஷ் கண்ணா பேச்சு சாமி கண்ண குத்தும் மாயன், மாயன் ராஜேஷ் கண்ணா, மாயன் படம், மாயன் சிவன் படம், கடவுள் படம் மாயன், மாயன் கிராபிக்ஸ் ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப் , யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில்…, “எங்கள்நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI)என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின்இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது.

அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார். மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில்,“இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள்.
மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார். தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில்,“நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர்.
படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை.” என்றார். இந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன்.

நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.” என்றார். நடிகர் சௌந்தர் பேசுகையில்…. “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை.படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார். படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது.

தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன். இந்த படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும் எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும். நம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும்.
அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். சின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா?பொய்யா? என்பதை சுவராசியமாகச் சொல்லியிருக்கிறோம். அது உண்மையென்றால் பிரதமர், முதல்வர் வரை எல்லாரும் குருடனாகத்தான் இருப்பாங்க. கர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம்.நாம் நல்லசெயல்களை செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது.

மனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம். முதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்னசெய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும்.

அதை போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு. இவனையெல்லாம் ஏன் படைத்தோம்?என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாக இருந்திருக்கும்? எப்படியிருந்திருக்கும்? அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்? அது தான் இந்த மாயன். மாயன் ஒரு ஃபேண்டசி . மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன். சிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன்.
அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார். நிகழ்ச்சியின் முடிவில் மாயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

More Articles
Follows