தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
••• ஜெயிலர் •••
பார்த்து சில நாட்கள் ஆகிறது ஆனால் இந்த படம் தந்த அனுபவம் விட்டு வெளியே வர முடியவில்லை…
படம் என்ன ஆல் டைம் கிளாசிக்கா… இதுவரை தமிழ் சினிமா பார்க்காத களமா… அப்படி எதுவும் இல்லை… ஆனால் இது ஒரு திரை அனுபவம்
ஒரு டிபிக்கல் 100% ரஜினி படம் என்றால் என்ன? அது ஒரு உணர்வு…. பேருந்து நெரிசலில் சட்டென நம்மை பார்க்கும் குழந்தை ஒன்று சிரித்தால் நமக்கு ஏற்படும் உணர்வு போல…சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் ரெட்டை ஜடை காதலி சட்டென நம்மை திரும்பி பார்ப்பது போல… இதெல்லாம் யாரிடமும் விளக்க முடியாது…அது நம்முள் ஒட்டிக்கொள்ளும்… நம்மை தானாக சிரிக்க வைக்கும்… கொஞ்சம் கால் தரையில் படாமல் நடக்க வைக்கும்… புரிந்தவர்கள் க்கு அது மேஜிக்…. இந்த படம் அதை செய்கிறது…இது 100% ரஜினி படம்
இதெல்லாம் புரியாதவர்களை புரிய விரும்பாதவர்களை குறையா சொல்லவில்லை… புரிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவ்வளவே
ரஜினி இடத்தில் வேறு யார் இருந்தாலும் நெல்சனின் அந்த பயங்கர சறுக்கல் க்கு பிறகு இந்த படத்தை தொடர யோசித்து இருப்பார்கள்.. there were lot at stake… ஆனால் , படத்தை நிறுத்தினால் நெல்சன் வாழ்வில் அது மிகப்பெரிய அடியா இருக்கும் என சிந்தித்து (அதான் ரஜினி) , நெல்சன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்தார் … அந்த நம்பிக்கைக்கு அப்படியே அசரவைக்கும் கைமாறு செய்து இருக்கிறார் நெல்சன்
ரஜினி என்கிற எமோஷனை உள்வாங்கி அப்படியே திரையில் ஒரு கொண்டாட்டமாக கொண்டு வந்திருக்கிறார் நெல்சன்…
மகனின் பிரச்சனையில் உள்ளே நுழைய அது பூதாகரமாக வெடிக்க அதை ஒரு ரிடையர்டு ஜெயிலர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை…
சாதாரண கதை அதற்குள் ஆங்காங்கே திருப்பங்கள் ஆனால் அதை சொன்ன விதம், ரஜினி என்கிற காந்தத்தை சரியாக எப்படி உபயோகிப்பது என்பதை நன்கு அறிந்து காய் நகர்த்திய நேர்த்தி இதுக்கெல்லாம் நெல்சன் க்கு தனி பாராட்டு
படத்தில் ரஜினி இன்ட்ரோ பாடல் இல்லை… தலைவர் பத்து பேர் அடிப்பது இருபது பேர் அடிப்பது போன்ற அதீதமான காட்சிகள் இல்லை… ஆனால் ஏகப்பட்ட காட்சிகளில் தியேட்டர் அலறுகிறது மாஸ் அள்ளுகிறது … இன்டர்வெல் ப்ளாக் எல்லாம் almost the roof gets blown away …
இன்டர்வெல் ப்ளாக் தான் பீக் என்று நினைத்து இருந்தால் அதன் பின் வரும் காட்சியும் பிறகு blockbuster climax என படத்தை வேறு ஒரு தளத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்..
மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப் – மூவர் பெயரும் போட்டு Guest Role க்கு நன்றி என்று ஆரம்பத்திலேயே card போடுகிறார்கள்… ஆனால் இவர்களின் பங்கு முக்கியமானது… குறிப்பாக மோகன்லால் மற்றும் சிவாண்ணா… இரண்டு காட்சிகளே என்றாலும் வேற லெவல் ஸ்க்ரீன் பிரசன்ஸ்.. மோகன்லால் நாம் அறிவோம்.. ஆனால் சிவாண்ணா நடித்த முதல் காட்சி திரையில் நான் இப்போது தான் பார்க்கிறேன்… இந்த மனிதனின் திரை ஆளுமை வேற லெவல்…
விநாயகன்…. படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம்… மனுசன் வாழ்ந்து இருக்கிறார்… அந்த உடல்மொழி டயலாக் இதெல்லாம் உண்மையில் பீதி கிளப்புபவை…. தமிழுக்கு ஒரு மிக குரூர வில்லன் கிடைத்து விட்டார்… பெரிய வலம் வருவார்
படத்துக்கு மிகப்பெரிய பலம் இருவர்
இசை அனிருத்… ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்
அனி பிச்சு உதறி இருக்கிறார்…. மாஸ் காட்சிகள் வேறு தளத்தில் பயணிப்பது க்கு முக்கிய காரணம் இவர்…. ஹுக்கும் பாடலை ப்ளேஸ் செய்த இடங்களுக்கு தனி பாராட்டு…
ஒளிப்பதிவு அசத்தல்…. காட்சிகள் ஃப்ரேம் டோன் அதுக்கான மெனக்கெடல் அபாரம்
படத்தில் குறைகள் இல்லையா என்றால் இருக்கிறது…. இரண்டாம் பாதி சுனில் தமன்னா காட்சிகள் கதை வேகத்தை குறைத்ததாக கருதுவேன்… அந்த ஒரு இருபது நிமிடங்கள் வேறு எதாவது யோசித்து இருக்கலாமோ என எனக்கு பட்டது (ஆனால் இதையும் ரசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்)… கொஞ்சம் blood shed வன்முறை அதிகமாக இருந்தது இது தலைவர் படங்களுக்கு புதுசு… கொஞ்சம் குறைத்து இருக்கலாம்…. ஏனெனில் பெண்கள் குழந்தைகள் எப்போதும் ரஜினி படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் வழக்கம் இருப்பதால்…
Last but not least..about the 72 வயது இளைஞர்
யோகி பாபுவுடன் அடிக்கும் ரகளை காட்சிகளாகட்டும், குடும்பத்துக்காக பதுங்கி போகும் இடங்கள் பின்பு பாயும் இடங்கள் …. அந்த இன்டர்வெல் , ப்ரீ க்ளைமாக்ஸ் , க்ளைமாக்ஸ் என அத்தனை உணர்வுகளையும் கொட்டி இருக்கிறார்…. இந்த வயதில் இத்தனை மிடுக்காக நடிக்க முடியும் என்பதே ஒரு தனி case study….and to bring such an aura on screen… something this world probably has never seen… and will never see…
திரையில் கடைசியாக நான் ஒரு படத்தை இவ்வளவு கொண்டாடி பார்த்து சில வருடங்கள் ஆகிறது… கவலைகள் இல்லா அந்த காலகட்டத்துக்கு ஒரு டைம் ட்ராவல் செய்தது போல ஒரு உணர்வு…
படம் ரீலீஸ் ஆகி ஆறாவது நாள் இதை நான் எழுதுகிறேன் ஆனால் அதற்குள் படம் ஏகப்பட்ட ரெகார்ட்ஸ் உடைத்து விட்டதாக சொல்கிறார்கள்…. இத்தனைக்கும் ஒரேயொரு ஆடியோ லாஞ்ச்… வேறு எங்கும் ரஜினி பேசவில்லை… டிவி டிவியாக சேனல் சேனலாக promotion நடக்கவில்லை.. ஊர் ஊராக சென்று படம் புரோமோஷன் இல்லை.. வலிந்து திணிக்கப்பட்ட promo இல்லை…. ஆனால் படம் மக்கள் மத்தியில் வேறு லெவல் ரீச் … அதான் ரஜினி
வெகு சிலர் படத்தை பற்றி தரக்குறைவாக பேசி எழுதி வந்தாலும் அதை எல்லாம் left handல் டீல் செய்து வருகிறார்கள் மக்கள் …
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜெயிலர் கொண்டாடப்படுகிறது…
ஆந்திராவில் இதனுடன் ரிலீசான பெரிய படத்தை தூக்கிட்டு பல இடங்களில் ஜெயிலர் அதிக ஸ்க்ரீன் பெறுகிறது…கேரளா கர்நாடகா அதிரி புதிரி ஹிட்… இதுவரை வந்த தமிழ் படங்களில் பெஸ்ட் என்கிறார்கள்…அமெரிக்க நண்பர் ஒருவர் நேற்று தொடர்பு கொண்டு.. அமெரிக்கா வில் இப்படி ஒரு படம் கொண்டாடப்பட்டதில்லை..
குடும்பங்கள் ஆர்பரிக்கிறார்கள் என்றார்… கனடா நண்பர் ஒருவர் மைல் நீள க்யு வீடியோ அனுப்பினார்… ஜெயிலர் பார்க்க நின்ற கூட்டமாம்.. மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் என கொண்டாடப்படுகிறது… … உலகம் முழுவதும் சாரை சாரையாக மக்கள் குவிகிறார்கள்
இந்திய சினிமா வில்…இதெல்லாம் ஒருத்தருக்கு நடக்க வேண்டும் என்றால் மறுபடியும் ரஜினி தான் பிறந்து வர வேண்டும்…
This movie is a celebration.. ரஜினி முழுவதும் பழைய ரஜினியாக இறங்கி பட்டைய கிளப்பி இருக்கும் படம்..
வரும் சனி ஞாயிறு கூட்டிட்டு போறேன் மா என்றதும் ஓரளவு சமாதானம் அடைந்து இருக்கிறார்கள் என் மகள்கள்… சீக்கிரம் கூட்டிக்கொண்டு போ என கேட்டபடியே இருக்கிறாள் என் தாய்…
ரஜினி ஒரு பெர்சனல் ஃபீலிங்..
இரண்டு நாட்களுக்கு முன் ஒருவரை சந்தித்தேன்… சில முறை பேசி இருக்கிறோம்… ஆனால் ஒரு முறை கூட ரஜினி பற்றி பேசியதில்லை… சினிமா பற்றி அவ்வளவு ஈடுபாடு காட்டாதவர்…
” ராஜகோபாலன்… ஜெயிலர் பாரத்துட்டீங்களா…. பார்த்துருப்பீங்க…. ப்பா…என்னமா இருக்காரு ங்க… எழுபத்தி ரெண்டு வயசாகுது ன்னு சொன்னா எவன் நம்புவான்… எனக்கு வயசெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு .. family எல்லோரும் என்ஜாய் செய்தோம்.. என் பொண்ணு நானும் ரெண்டு பேரும் சேர்ந்து கத்திட்டோம் சில சீனுக்கு..wife கூட ஆச்சரியபட்டா. (வெட்க படுகிறார்).. உங்கள இப்படி பார்த்தது இல்லை ன்னு சொல்றா…….. இன்னொரு வாட்டி போகணும்…”.. என பட படவென பொறிந்து விட்டார் மனுசன்…
The Phenomenon Called RAJINI
ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவர்கிறார்.. அதான் #தலைவர்
வேறு பல பட்டங்கள் தமிழ் சினிமாவில் இருந்தும் #SuperStar என்கிற பட்டத்துக்கு மட்டும் போட்டி இருப்பது போன்ற ஒரு பிம்பம் ஏன் கட்டப்படுகிறது… ஏனெனில் எந்த பட்டம் என்பது இங்கே முக்கியமில்லை அதை யார் சுமக்கிறார் என்பதே முக்கியம்…
உண்மையில் சில பல நாட்களாக உடலாலும் மனதாலும் wasn’t feeling well.. still so.. ஆனால் தலைவர் படம் என்பது ஒரு therapy session…a physical and mental rejuvenation… எனக்கு அப்படியே இருந்தது…. பிணிகள் கவலைகள் மறக்க செய்த ஒரு திரை அனுபவம்
Thank you #Rajinikanth
#Jailer an Entertainer of the decade for most…
ஆடியில் வந்திருக்கும் தீபாவளி
நன்றி – இரா. இராஜகோபாலன்
Reasons behind success of Rajinikanth Jailer