அஜித் படத்திற்கு விசுவாசம் தலைப்பு வைக்க இதான் காரணமா?

அஜித் படத்திற்கு விசுவாசம் தலைப்பு வைக்க இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswaasam stillsகடந்த சில வருடங்களாகவே அஜித் படத்தின் சூட்டிங் முடிவடையும்போது தான் படத்தின் தலைப்பையே வைப்பார்கள்.

ஆனால் சிவா இயக்கவுள்ள அஜித்தின் அடுத்த படத்திற்கு சூட்டிங் தொடங்கும்முன்பே அறிவித்துவிட்டார்கள்.

இந்த தலைப்பும் அவர்களின் வி சென்டிமெண்ட் படியே அமைந்துள்ளது.
தற்போது தலைப்புக்கான காரணம் வந்துள்ளது.

அஜித் தன் நண்பர்கள் பேசும்போது.. “ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்” என அடிக்கடி கூறுவாராம்.

எனவேதான் இதையே தலைப்பாக வைக்கலாம் என ஆலோசனை வரவே தலைப்பை வைத்து அறிவித்துள்ளனர்.

நம்பியவர்களை கைவிட்டது ஆள்பவர்கள்தான்; ஆண்டவன் அல்ல.. : கமல்

நம்பியவர்களை கைவிட்டது ஆள்பவர்கள்தான்; ஆண்டவன் அல்ல.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanவிரைவில் முழுமையாக அரசியல் களம் காணப்போகிறார் கமல்ஹாசன்.

இதனிடையில் பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட விஸ்வரூபம்2 படத்தை சூட்டிங்கில் மீண்டும் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இதனால் சிறிது நாட்களுக்கு அரசியல் கருத்துக்கள் இருக்காது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென மீண்டும் ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த ட்விட்டர் பதிவு…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது.

நாச்சியார் டீசர் கெட்ட வார்த்தை குறித்து மனம்திறந்த ஜோதிகா

நாச்சியார் டீசர் கெட்ட வார்த்தை குறித்து மனம்திறந்த ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nachiyaar teaserபாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் நாச்சியார்.

இதில் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்க, ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் ஜோதிகா பேசிய தே… என்ற கெட்ட வார்த்தை வசனம் பல சர்ச்சைகளை உருவாக்கியது.

இதற்காக ஜோதிகா மற்றும் பாலா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த ஜோதிகாவிடம் இதுகுறித்து கேட்டதற்கு…

தற்சமயம் அது குறித்து ஒன்றும் பேச வேண்டாம். படம் ரிலீஸ் ஆனபின்னர் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

விஷாலின் சண்டக்கோழியில் இணைந்தார் தனுஷ்

விஷாலின் சண்டக்கோழியில் இணைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and dhanush2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.

இப்படத்தையும் லிங்குசாமி இயக்க, விஷால் தயாரித்து நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

மேலும் சூரி, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார்.

ராமனை வம்புக்கு இழுக்கும் விஜய்சேதுபதி; அடுத்த மெர்சல் பிரச்சினை உருவாகுமா?

ராமனை வம்புக்கு இழுக்கும் விஜய்சேதுபதி; அடுத்த மெர்சல் பிரச்சினை உருவாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi stillsஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம்கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

இவர்களுடன் காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், விஜி சந்திசேகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை சினிமாவாலா சார்பாக சதீஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் நேற்று மாலை இணையங்களில் வெளியானது.

அதில் விஜய்சேதுபதி பேசிய ராமாயண கதை சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வசனத்தில்… புருஷோத்தமா.. ராவணன் சீதையை கொண்டு போய் பத்திரமா வச்சிருந்தானா? ஆனா அவன நாம அரக்கன் சொல்றோமா?

அதே நேரம் ராமன் சீதையை சந்தேகப்பட்டு தீயில போட்டு கொன்னானா? அவனை நாம கடவுள்னு சொல்றோமா? இப்போ ராமனா கெட்டவனா? நல்லவனா? என்பதுபோல் வசனம் வருகிறது.

எனவே ராமனை கடவுளாக மதிக்கும் இந்துக்கள் மத்தியில் இது பிரச்சினையை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல் இதுவும் உருவாகும் எனவும் நம்பலாம்.

பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி குறும்படத்தையே தலைப்பாக்கிய விஜய்

பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி குறும்படத்தையே தலைப்பாக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijayவிக்ரம், தனுஷ் படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படங்களை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

இப்படத்துக்கு, சர்ச்சையில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்ட ‘லட்சுமி’ என்ற குறும்படத்தின் தலைப்பைச் சூட்டும் முடிவுடன் அதைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows