‘பைரவா’ உடன் இத்தனை படங்கள் மோத ‘அவர்’ காரணமா..?

Bairavaa stillsபெரும்பாலும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாது.

ஆனால் இம்முறை அதாவது 2017 பொங்கல் தினத்தில் பைரவா படத்துடன் மோத கிட்டதட்ட எட்டு படங்கள் வெளியாகவுள்ளன.

பெரும்பாலான திரையரங்குகளை பைரவா படம் ஆக்ரமிக்கும் எனத் தெரிகிறது.

இருந்தபோதிலும் மற்ற படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்.

எனவே பைரவா படம் கணிசமான தியேட்டர்கள் எண்ணிக்கையிலேயே ரிலீஸ் ஆகும்.

இதனால் வசூலும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதன் பின்னணியில் ஒரு முக்கிய பிரமுகர் செயல்படுவதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post