தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில் இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
முதல் பாடல் ‘ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அள்ளியது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார்.
இதன் பின்னர் சிம்பு பாடிய ‘தளபதி தீ தளபதி..’ என்ற பாடல் வெளியானது.
தற்போது சற்றுமுன் சின்ன குயில் சித்ரா பாடிய ‘அம்மா தாலாட்டு…’ பாடல் வெளியானது.
இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் இதுவரை யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.5 கோடி (25 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.
‘ரஞ்சிதமே…’ பாடல் 10 கோடி பார்வைகளை தாண்டியது குறித்து அதன் பாடலாசிரியர் விவேக் கூறியதாவது…
“ரஞ்சிதமே பாடல்… 100 மில்லியனை கடந்துள்ளது. விஜய் சார் என்னை நம்பியதற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.
என்னால் கூற முடிந்ததெல்லாம் லவ் யூ விஜய் சார். இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.
என தெரிவித்துள்ளார்.





