ஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா

பம்பாய் நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.

அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி வருகிறார்.

வருடத்துக்குக் குறைந்தது இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

கடுமையான மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அதையே தனக்கு சாதகமாக்கி வருகிறார்.

சமீபத்தில் ‘க்ளைமேக்ஸ்’, ‘நேக்கட்’, ‘த்ரில்லர்’ என தொடர்ந்து ஆபாசம் நிறைந்த படங்களை இயக்கினார்.

இதற்காக ஒரு ஓடிடி தளத்தையும் உருவாக்கினார்.

தற்போது ‘சசிகலா’ என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக அறிவித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

“சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது.

தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும். அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவை தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த உறவைப் பற்றியக் கதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ram Gopal Varma announces biopic on Sasikala

Overall Rating : Not available

Related News

Latest Post