ஜெயலலிதா 73.: சசிகலாவை சந்தித்த சீமான்-சரத்குமார்-ராதிகா.; அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து

ஜெயலலிதா 73.: சசிகலாவை சந்தித்த சீமான்-சரத்குமார்-ராதிகா.; அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் அவரின் தோழி சசிகலா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது….

“ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றார் அம்மா.

அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம். பொது எதிரி திமுகவை வீழ்த்துவோம்” என தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்து பேசினர்.

இவர்களுக்கு முன்னதாக சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சரத்குமார்.

அவர் பேசியதாவது…“‘நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. நான் 10 ஆண்டுகளாக சசிகலாவோடு பயணித்துள்ளேன்.

சசிகலாவுடன் அதிமுகவினரும் நல்ல உறவோடு இருந்திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என பேசினார்.

சசிகலா பேச்சு மற்றும் சரத்குமார் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

“சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அப்படி அழைத்துள்ளார்.

சரத்குமார் – ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கின்றனர்” என கூறினார்.

TN Politicians meet Sasikala at her residence

sasikala (2)

‘கலைமாமணி’ விருதை பறிச்சிடுவாங்களோ..? பயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

‘கலைமாமணி’ விருதை பறிச்சிடுவாங்களோ..? பயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan (2)தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் SO BABY’ என்ற பாடலை மட்டும் நாளை பிப்ரவரி 25ல் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ புரோமாவில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் & இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தார்.

இந்த ஜாலியான வீடியோவில் சிவகார்த்திகேயனை CLASSICAL & WESTERN கலந்த பாடலை எழுத சொல்கின்றனர்.

தமிழக அரசு கொடுத்த ‘கலைமாமணி’ விருதை பறிக்க வச்சிடுவாங்களோ? என சிவகார்த்திகேயன் சொல்வது போல காட்சிகள் உள்ளன.

இதற்கு முன் வெளியான ‘செல்லமே’ பாடலுக்கும் தடை செய்யப்பட்ட ‘டிக் டாக்’ செயலியை வைத்து சூப்பர் புரோமோ வெளியிட்டு இருந்தனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் ப்ரியங்கா அருள், வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

அடுத்த மாதம் மார்ச் 26ல் தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

Interesting promo on Doctor next single

சூர்யாவும் சென்னை ரசமும் என் பேவரைட்..; ஹேமமாலினி் மகள் ஈஷா தியோலின் ‘கலர்ஸ்’ இன்டர்வியூ

சூர்யாவும் சென்னை ரசமும் என் பேவரைட்..; ஹேமமாலினி் மகள் ஈஷா தியோலின் ‘கலர்ஸ்’ இன்டர்வியூ

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது.

குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.

குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில்நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

லேட்டஸ்டாக நடிகை ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார்.

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேசும்போது…

“அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.. எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில்நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோது தான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரியவந்தது.

அதன்பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன். அது மிகப்பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.

அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக்கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது.

அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரியவந்தது. அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.

மேலும் பத்திரியாக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஈஷா தியோல்…

“சென்னை எப்போதுமே என் சொந்த ஊர்.. நான் சிறுவயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா அப்பாடி வீட்டில் வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’. சாப்பிடுவதற்கு கிடைக்கிறது ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன்.

அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை..

குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை.

அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் ரசிகையின் கூட.. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.

இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை” என்றார் ஈஷா தியோல்.

ஈஷா தியோலின் தாயார் ஹேமமாலினி, தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக கோலோச்சியவர்.

அவரது சுயசரிதையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என ஈஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு…

“என்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்.. என் அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் வெளியாகி இருக்கிறது.. படித்தேன்.. அது நன்றாக இருக்கிறது..

அதேபோல யார் அதை படமாக எடுக்கப் போகிறார்கள், எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து தான், அதில் நடிக்க முடியுமா என தீர்மானிக்க வேண்டும்.. குறிப்பாக எனது அம்மாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன்” என கூறினார் இஷா தியோல்.

கலர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சிவாஜி பேசும்போது, “கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

இதை தொடங்கிய சமயத்தில் திருமணத்திற்காக, தாய்மை அடைவதில் உள்ள உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக, அரசாங்க பணிகளில் சேருவதற்காக கூட, தங்களது உடல் எடை பிரச்சனையாக இருக்கிறது என அதை குறைப்பதற்கு பல பேர் எங்களை அணுகினார்கள்..

அந்தவகையில் கிட்டதட்ட, 10 லட்சம் பேர்களுக்கு எடை குறைப்பு, சருமம் மற்றும் கூந்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயிற்சி மற்றும் மருத்துவ ரீதியாக தீர்வு அளித்து வருகிறோம்.

இந்த கிரையோமேடிக் தொழில்நுட்பம் மூலமாக, திரையுலகப் பிரபலங்களான ரம்பா, பிரியாமணி, மதுபாலா உள்ளிட்ட பலர் எடை குறைப்பு செய்து, மீண்டும் திரையுலகில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகை ஈஷா தியோல் அவர்களும், எங்களது இந்த தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டு எங்களை அணுகினார். தீவிர பயிற்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 17 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் அதுபோல சருமம் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்காக கைலாந என்கிற பெயரில் 16 விதமான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளோம்.

இதை வெறும் அழகை பாதுகாக்கும் முயற்சியாகவோ அல்லது வியாபாரமாகவோ மட்டும் கருதாமல், சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலாகவே மேற்கொண்டு வருகிறோம்.” என கூறினார்.

Actress Esha Deol talks about her favourites in chennai

உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

நடிகர் அஜித்துக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் ஒரு சில ரசிகர்களை வெறியர்கள் என்று கூட சொல்லலாம்.

இதில் பிரகாஷ் என்ற ரசிகரை ‘அஜித் பக்தன்’ என்றும் கூட சொல்லலாம்.

தன் உடல் முழுக்க அஜித் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதாவது டாட்டூஸ் போட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன்… அஜித்தின் அவதாரங்களை (Photographer Bike & Car Racer, Aero Modellor….. MJJ Professor என அனைத்தையும் தன் உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள்… தல பிரகாஷ்.. RIP Prakash என ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

என் #தாய் என்னை பத்து மாதம் #சுமந்தாள்
#தாயை_போல_தலஎன்பதால் #ஆயுள்_முழுக்க
என் #அண்ணனை_நான்_சுமக்கின்றேன்என்றும்
#விஸ்வாசமாக_தல_பிரகாஷ்❤️ https://t.co/EVlFUTHZbk

Ajith’s die hard fan commits suicide

Ajith fan prakash (2)

நெட்டிசன்களை கிக் ஏற்றி தள்ளாட வைத்த நடிகை தர்ஷா குப்தா

நெட்டிசன்களை கிக் ஏற்றி தள்ளாட வைத்த நடிகை தர்ஷா குப்தா

Darsha Gupta‘முள்ளும் மலரும்’ மற்றும் ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

சின்னத்திரையில் பிரபலமாகிவிட்டாலே அவர்களின் அடுத்த டார்கெட் வெள்ளித்திரை தான்.

எனவே இவரும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என எண்ணி் ரசிகர்களை சூடேற்றும் அளவுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்தும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் அந்த புகைப்பங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது செம செக்ஸியாக ஒரு லுக் விட்டு ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் செம போதை ஏறியதை போல தள்ளாடி வருகின்றனர்.

நீங்களே அந்த புகைப்படங்களை பாருங்களேன்..

Fans comment on Dharsha’s recent pic

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..; காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..; காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

Ajith (2)கடந்த வாரம் நடிகர் அஜித் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அந்த போட்டோக்களையும் அந்த வீடியோக்களையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக இன்று காலை பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு (வாடகை காரில்) வந்தார்.

அப்போது அங்கு எஸ்.ஐ. தேர்வுக்கான நேர்முக தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த நபர்கள் அஜித்தை பார்க்க திரண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அருகே இருந்த ரசிகர்கள் பலரும் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அஜித்துடன் செஃல்பி எடுக்க நீண்ட நேரமாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார் நடிகர் அஜித்.

அதன் பின்னர் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றுவிட்டார் அஜித்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் அஜித்துடன் செர்ஃபி எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Fans disappoints over ajith’s reaction

More Articles
Follows