வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்..; இதான் உண்மையான காரணமா.?

sasikala (2)மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில் வாழ்ந்தவர் சசிகலா.

இவர் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சமீபத்தில்தான் விடுதலையானார்.

இவரின் வருகைக்கு பின்னர் அதிமுக-வில் பெரிய பிரச்சினை ஏற்படும்.. கட்சி உடையும் என தமிழகமே எதிர்ப்பார்த்த நிலையில் “தான் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்தார்” சசிகலா.

ஜெயலலிதாவுடன் அவரது வீட்டிலேயே தங்கியதால் சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த முகவரியில் இருந்த அனைவரது பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் வசிக்கிறார் சசிகலா.

அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள சசிகலா விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுதான் உண்மையான காரணமா? இதில் வேறு ஏதேனும் அரசியல் உள்ளதா? என பல்வேறு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்.

Reason behind Sasikala’s name missing in voters list?

Overall Rating : Not available

Latest Post