போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு.

போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான விகே. சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதா உடன் இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக ரஜினி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆனார்.

எனவே தற்போது ரஜினியின் உடல் நலம் விசாரிக்க சசிகலா சென்றாராம்.

மேலும் சமீபத்தில் திரைப்படத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றிருந்தார். அதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.

VKSasikala meets Tamil superstar Rajinikanth at his Poes Garden residence

எனது முதல் படமே ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ தான்.; சேரன் & நந்தா முன்னிலையில் லிங்குசாமி உடைத்த ரகசியம்

எனது முதல் படமே ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ தான்.; சேரன் & நந்தா முன்னிலையில் லிங்குசாமி உடைத்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”

தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். 40 க்குமேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரகியுள்ளது. இன்று படகுழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்திம் இசை வெளியீட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரவர தமிழ் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தா பெரியசாமி அற்புதமான கதாசிரியன். நல்ல இயக்குநர். கார்த்திக்கை இயக்கும்போது அவனுக்கு இப்படி ஒரு பையன் வருவான் என நினைக்கவில்லை. அவனோடு அமர்ந்திருப்பது மகிழ்ச்சி. ராஜசேகரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன் அவர் மகள் இப்போது நடிக்கிறார். அவர்களின் பெற்றோரோடு இருந்து விட்டு, இன்று அவர்களுடன் இருக்கிறேன் மகிழ்ச்சி. ரங்கநாதன் நல்ல தயாரிப்பாளர். இப்படி ஒரு தலைப்பில், கூட்டு குடும்ப படம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழ் படம், அற்புதமான படம். இந்தப்படம் பார்க்கும் போது நம் கண் கலங்கும், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
பொதுவா குடும்ப உறவுகளின் கதையை சொல்லும் படம் தமிழில் தோல்வி அடையாது. அந்த வகையில் தயாரிப்பாளர் ரங்கநாதனுக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை தரும். இந்தப்படத்தில் இருப்பவர்கள் எல்லோருமே என் மனதிற்கு நெருக்கமானவர்கள். இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் என பிராத்திக்கிறேன் நன்றி.

நடிகை குட்டி பத்மினி பேசியதாவது…
அடுத்த வருடம் நந்தா பெரியசாமியுடன் இணைந்து ஒரு பெரிய படம் செய்யவுள்ளோம். கௌதம் கார்த்திக் இந்தபடத்தில் மிகவும் மெச்சூர்டாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். என் தோழி ஜீவிதாவின் மகள் ஷ்வாத்மிகா அழகாக நடித்துள்ளார். இந்தப்படம் நிறைய பேர் மனதை கலங்கவைக்கும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது…
கௌதம் கார்த்தி அப்புறம், என் நண்பன் சேரன் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்போது தமிழில் தொடர்ந்து காதல் ஆக்சன் படங்கள் வரும் நிலையில், ஒரு அழகான குடும்ப படம் வருவது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
பிரமாண்டமான விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்தே ஒரு மிகப்பெரிய படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, இப்போது படத்தின் வியாபாரத்தையும் முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ரங்கநாதன். அவருக்கு வாழ்த்துக்கள். ஹிந்தியில் வந்து வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்தை எழுதியிருக்கிறார் நந்தா பெரியசாமி. அவரது இயக்கத்தில் இந்தப்படம் வருவது பெரிய வரவேற்பை தரும். ராஜசேகரின் மகள் ஷ்வாத்மிகா மிக அழகாக இருக்கிறார். சேரன் மற்றும் கௌதம் கார்த்திக்கு இப்படம் பெரிய வெற்றியாக அமையவேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது…
ஆனந்தம் விளையாடும் வீடு படத்திற்கு டைட்டிலே அதுவே அழகு தான். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 25 வருடங்கள் முன் தர்மபத்தினி படம் வந்தது, அதில் கார்த்தி சாரும், ஜீவிதா மேடமும் நடித்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் இன்று இணைந்து நடிக்து, இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. அந்தப்படம் போல் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். சேரன் எப்போதும் நல்ல படங்கள் தான் நடிப்பார். இந்தப்படம் நன்றாக இருக்கும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சத்யஜோதி TG தியாகராஜன் பேசியதாவது…
இந்தப்படம் பாடல்கள் டிரெயலர் பார்க்க மிக அழகாக இருந்தது. இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். தயாரிப்பாளரை மிகவும் பாராட்ட வேண்டும் இவ்வளவு ஆர்டிஸ்ட், டெக்னீஷுயன் வைத்து அருமையாக எடுத்திருக்கிறார். நிச்சயம் குடும்ப படங்கள் ஓட வேண்டும் இந்தப்படமும் ஓடும் என வாழ்த்துகிறேன் நன்றி

இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது….

என்னுடைய ஆனந்தம் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு ஆனந்தம் விளையாடும் வீடு தான். அப்பொது இந்த டைட்டிலை சேரன் சார் வைத்திருந்தார். அவர் நடிப்பதற்காக வைத்திருப்பதாக சொன்னார். பின் ஆனந்தம் என வைத்தோம். அன்று அவர் நடிப்பதாக சொன்னது இன்று நடந்திருக்கிறது. ஆனந்தம் திரைக்கதை வளர நந்தா தான் காரணம். தோல்வியோ வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா. அவருக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. சினேகன் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அறிமுகமாகும் ஷ்வாத்மிகாவுக்கு வாழ்த்துக்கள். இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை ஜீவிதா ராஜசேகர் பேசியதாவது…
இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி. என் கணவரை அறிமுகப்படுத்தியது பாரதிராஜா சார் தான். என் இரண்டு மகள்களும் படத்தில் நடிக்கிறார்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். என் இளைய மகள் இப்படத்தில் அறிமுகமாகிறார் அவளுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். படப்பிடிப்பில் அனைவரும் அவளை நன்றாக பார்த்து கொண்டதாக சொன்னாள் இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.

இயக்குநர் KS ரவிக்குமார் பேசியதாவது…
இந்தப்படத்தை பார்க்கும் போது பெரிய குடும்பம் படம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நாள் ஓடினாலே, இந்தப்படம் 100 நாள் ஓடும். சேரனுக்கா தான் இன்று வந்தேன் அவனை என் மாணவன் என சொல்லிக்கொள்வது எனக்கு பெருமை. நாயகி ஷ்வாத்மிகா அப்பாவை வைத்து படம் எடுத்திருக்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள். சித்துவின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தது. சேரனுக்கு இந்தப்படம் மட்டுமல்லாமல், அவன் நடித்து இன்னும் நிறைய படங்கள் ஓடி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப்படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் விக்னேஷ் பேசியதாவது…
இந்த உலகத்தில் அடிச்சிக்கிட்டாலும் பிடிச்சுகிட்டாலும் அவங்க அண்ணன் தம்பி தான். உலகத்தில பிரிக்க முடியாத உணர்வு அண்ணன் தம்பி உறவு. இந்தப்படத்தில் அதை அழகாக சொல்லியிருக்காங்க. தம்பி கௌதம் கார்த்தி நல்லா நடிச்சிருக்கார். அண்ணனா சேரன் அற்புதமா செஞ்சிருக்கார். இந்தப்படம் பாரதிராஜா சார் படம் மாதிரி இருக்கும் நன்றி.

நடிகர் சினேகன் பேசியதாவது..
இந்தபடத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனருக்கு இங்கு கிடைக்காத அங்கீகாரம் வடக்கு தந்திருக்கிறது. ராஷ்மி ராக்கெட் அவர் கதையில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. அதே வெற்றியை இங்கும் அவர் பெறுவார். உறவுகளின் கதையை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார். உணர்வுகளையும் உறவுகளையும் சொல்ல களம் கிடைக்காதா என நான் ஏங்கியிருக்கிறேன். அது இந்தப்படத்தில் நந்தா பெரியசாமியால் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு நன்றி. ஒரு குடும்பத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை இந்தப்படம் தந்திருக்கிறது. சித்துக்குமார் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்குள் நிறைய திறமை இருக்கிறது. இந்தப்படம் அனைவரின் உணர்வை தொடும் நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது….

ஆனந்தம் விளையாடும் வீடு டைட்டிலில், நந்தா பெரியசாமி வந்து கதை சொன்னபோதே நான் கண்கலங்கி விட்டேன். நான் அஞ்சு அண்ணன் தம்பிங்களோட பிறந்தவன். அந்த உறவு எனக்கு தெரியும். நான் தான் நடித்தேன், ஆனால் படம் பார்க்கும் போதே அழுகை வந்தது. நந்தா பெரியசாமிக்கு என் நன்றி. குறைவானவர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம். ஆனால் இதில் பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார் ரங்கநாதன் அருமையாக எடுத்திருக்கிறார். ஒரு ஷோவில் கலந்து கொண்டதால், நானும் சேரனும் எதிரிகள் போன்று சித்தரித்து விட்டார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் சகோதரர்கள் போல தான் இருக்கிறோம் அவர் ஒரு தம்பியாக எனக்கு கிடைத்துள்ளார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சேரன் பேசியதாவது…
சித்துகுமார் இப்போது தான் வளர்கிறார். இந்தப்பாடலை நந்தா போட்டு காட்டிய பிறகு, சித்துவை பார்த்த போது இவரா இசையமைத்தார் என தோன்றியது நம்பவே முடியவில்லை. அவர் நன்றாக வர வேண்டும். சினேகன் நல்ல கவிஞர். தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள் வாழ்த்துக்கள். இந்த இருவருக்கு தான் இந்த விழா. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் இந்தப்படம் தான் எங்களுக்கு கொரோனா காலத்தில், மூன்று மாதம் சாப்பாடு போட்டது, அந்த தர்மமே இந்தப்படத்தை வெல்ல வைக்கும். எதையும் சரியாக திட்டமிட்டு செய்கிறார். நந்தா பெரியசாமி என்ற நண்பன் ஒருவனுக்காக மட்டுமே செய்த படம் தான் இது. அவரது வெற்றிக்கு ஒரு அனிலாக இருக்க வேண்டுமென்று தான் இந்தப்படத்தில் நடித்தேன். நல்ல சிந்தனையாளன் தோற்க கூடாது. இந்தப்படத்திற்கு பிறகு அவர் பெரிய வெற்றி பெறுவார். நிறைய கதைகள் வைத்துள்ளார். அவரை விட்டு விடாதீர்கள். அவர் பின்னால் நான் நிற்பேன். இந்தப்படத்தில் எங்கள் குடும்பம் மொத்தமாக இங்கு இருக்கிறது. எனக்கு அண்ணன் தம்பி இல்லை அதை இந்தபடத்தில் வாழ்ந்து அனுபவித்தேன். அவ்வளவு அழகாக எல்லோரும் கேர்க்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக் அத்தனை எளிமையாக இருக்கிறார் அவரது குரல் அப்படியே கார்த்திக் சார் போலவே இருக்கிறது. ஷ்வாத்மிகா நம்ம வீட்டு பிள்ளை ராஜசேகரின் மகள் அருமையாக நடித்திருக்கிறார். இந்தப்படம் அற்புதமாக வந்திருக்கிறது பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P. ரங்கநாதன் கூறியதாவது…
இந்தப்படத்தை விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை கஷ்டப்பட்டு தான் இதை உருவாக்கியிருக்கிறோம். அத்தனை ஆர்ட்டிஸ்டும் கடுமையான ஒத்துழைப்பு தந்தார்கள். சேரன் சார் எனக்கு ஒரு அண்ணன் தான். அவர் இந்தப்படத்தில் எல்லா வேலையும் செய்தார். சித்துகுமார் அருமையான பாடல்கள் தந்திருக்கிறார். இந்தப்படத்திற்கு சினேகனுக்கு தேசிய விருது கிடைக்கும். நந்தா உண்மை உழைப்பு உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பார். எப்போதும் உழைத்து கொண்டே இருப்பார். இப்படத்தில் அனைவருமே கடுமையான உழைப்பை தந்திருக்கிறார்கள். படத்தை கிறிஸ்துமஸ்க்கு கொண்டு வர வேலை செய்து வருகிறோம். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சித்துகுமார் கூறியதாவது…
ஆனந்தம் விளையாடும் விளையாடு பாடல்கள் இயக்குநருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் சினேகன் சாரை நிறைய டார்ச்சர் செய்தோம். நல்ல பாடல் வரிகள் தந்தார். நான் அனுபவிக்காத வாழ்க்கை இப்படத்தில் இருந்தது. அதையெல்லாம் குழுவாக இணைந்து தான் உருவாக்கினோம். ஒரு பாடலை ஜீவியும் சிவாங்கியும் பாடினார்கள். மதுரைக்காகவே ஒரு பாடல் செய்திருக்கிறோம். படம் நன்றாக வந்திருக்கிறது. ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் போரா பாலபரணி பேசியதாவது…

தினமும் நாம் பார்த்துட்டு இருக்குற உறவுகளோட கதையை நந்தா படமா எடுத்திருக்காரு. என்னையும் இந்த புராஜக்ட்ல சேர்த்துகிட்டதுக்கு நன்றி. நந்தாவோட கதையில் இந்தியில் ராஷ்மி ராக்கெட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கு, அதே போல இந்தப்படமும் வெற்றி பெறனும். நந்தாவிடம் நிறைய கதைகள் இருக்கிறது.

அவரோடு இன்னும் நிறைய படங்கள் இணைந்து பணியாற்றுவேன் என நம்புகிறேன். சித்துக்குமார் தாளமும் எனது ஒளியும் படத்தில் பேசியிருக்கிறது. சினேகன் அழகான வரிகள் தந்திருக்கார். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நாயகி ஷிவத்மிகா ராஜசேகர் பேசியதாவது…

இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த நந்தா சார், ரங்கநாதன் சாருக்கு நன்றி.

சேரன் சாருடன் முதல் படத்திலேயே நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள் படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி

நடிகர் கௌதம் கார்த்திக் பேசியதாவது…

இந்த மேடையில் ஜாம்பவான்கள் உடன் இருப்பது பெருமையாக இருக்கிறது. எல்லொரைப்பற்றி அனைவரும் பேசி விட்டார்கள். பைட்டர் தினேஷ் இதில் அழகாக வேலை பார்த்துள்ளார் அவருக்கு நன்றி. ராதிகா மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. நிறைய குட்டீஸ் இப்படத்தில் அழகாக நடித்துள்ளார்கள்.

ஷ்வாத்மிகா இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன். நிறைய விசயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நன்றி. சித்துக்குமார் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகான வரிகள் தந்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் அழகாக வந்துள்ளது. பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எல்லோருக்கும் நன்றி.

இந்நிகழ்வில் இயக்குநர் நந்தா பெரியசாமி கூறியதாவது…

தயாரிப்பாளர் ரங்கநாதன் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொன்னார். 50000 நஷ்டம் வந்தால் கூட தாங்க முடியாது, பார்த்து பண்ணி தாருங்கள் என்றார். நானும் மிடில் கிளாஸ் தான் சார் என்று அவருக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றி கொடுத்தேன்.

அதற்கு உதவிய கலைஞர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.

ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Director lingusamy speech at Anandham Vilayadum Veedu audio launch

அசர வைத்த ‘அகண்டா’ ஒளிப்பதிவு..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ ஒளிப்பதிவாளர்

அசர வைத்த ‘அகண்டா’ ஒளிப்பதிவு..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அகண்டா’.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிட்ட தேதி முதல் வசூலில் சாதனை படைத்து வருவதற்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும் காரணம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘அகண்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத், தமிழில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அவர் தமிழில் அறிமுகமாகும் ‘மாயோன்’ படத்திலும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

அவருடைய கடினமான உழைப்பை பாராட்டி ‘மாயோன்’ பட குழுவினர், ‘அகண்டா’ படத்திற்கும், ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்திற்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Maayon team wishes to cinematographer Ram Prasath

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் கதை நாயகர்களாக யோகிபாபு & ரமேஷ் திலக்

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் கதை நாயகர்களாக யோகிபாபு & ரமேஷ் திலக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்.

ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது.

பெயரிடப் படாத ‘புரொடக்‌ஷன்1’ ஆக உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள எளிய முறையில் நடைபெற்றது.

யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்

ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி

முதன்மை இணை இயக்குனர்: நிதிஷ் வாசுதேவன்
இணை இயக்குனர்: கார்த்தி
இணை இயக்குனர்: அகில் V மாதவ்
உதவி இயக்குனர்கள்: பிரஜின் MP,
தண்டேஷ் D நாயர், வந்தனா
விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார்
ஸ்டில்ஸ்: ஜோன்ஸ்
Pro: ஜான்சன் .

Yogi Babu and Ramesh Thilak plays protogonist in new film

‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் *ஆன்டி இண்டியன்*..

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாகவே உள்ளது.

வரும் டிச-1௦ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையிடலில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன்.. படத்தையும் எடுத்து விட்டான்.

நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்..

ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..

ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான் என்று கூறினார்

இயக்குநர் சேரன் படம் பற்றி கூறும்போது, “சமூக அவலங்களை ,சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை, மனிதனுக்குள் மதம் புகுந்து எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை அருமையான படைப்பாக கொடுத்துள்ளார். ஒரு விமர்சகராக இருந்து இயக்குநராக அவர் எடுத்திருக்கும் அற்புதமான, மிகச்சிறப்பான முயற்சி இது” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

இந்தப்படத்தை 18 நாட்களில் எடுத்துள்ளார்கள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. மதம் எந்த அளவுக்கு மனிதத்தைக் கொல்கிறது என அப்படியே தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் உணர்த்தியுள்ளார் மாறன்.

அதேசமயம் எந்த ஒரு சாராரைப் பற்றியும் குறிப்பிடும் படமாகவும் இது உருவாகவில்லை.

இசையமைப்பாளராகவும் மாறி இப்படத்திற்கு தேவையான பின்னணி இசையையும் சரியாகக் கொடுத்துள்ளார்..

இந்தப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. படம் எல்லாராலும் பெரிதும் ரசிக்கப்படும்” என்றார்.

ப்ளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்த படத்தைப் பார்த்துவிட்டு உங்களது குறை நிறைகளை சொல்லுங்கள் என்று பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் ஆகியோரிடம் கேட்டேன் ஆனால் படம் பார்த்துவிட்டு, சொல்வதற்கு குறை என ஒன்றுமே இல்லை என கூறிவிட்டார்கள்.

குறிப்பாக இயக்குர் இமயம் பாரதிராஜா என்னை பார்க்கும்போதெல்லாம் நீ ஒரு படம் எடுடா, உன் படத்தை நான் விமர்சிக்கிறேன் என்று கூறுவார்.. ஆனால் இப்போது விமர்சிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று படத்தை பாராட்டியுள்ளார் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது.

இயக்குநர் சங்கத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

ரசிகர்களிடமிருந்தும் இதேபோன்ற பாராட்டு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்

Celebrities reaction after watching Anti Indian

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் மகாமுனி.

தமன் இசையமைத்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. ரசிகர்களால் இந்த படத்திற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

இதுவரை 9 சர்வதேச விருதுகளையும் இந்த படம் வென்றுள்ளது.

இந்த நிலையில் 15வது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆர்யா கூறியிருப்பதாவது..”அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி.

இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விருதால் மகாமுனி படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Arya wins best actor award at Magamuni film festival

More Articles
Follows