ரஜினியின் *பேட்ட* ரிலீஸ் ப்ளான்.; அஜித்-சூர்யா படங்களுக்கு ஆபத்து.?

ajith suriyaரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது லக்னோவில் நடந்து வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தீக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை அடுத்த 2019ல் பொங்கலுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு வேளை இது உறுதியாகும் பட்சத்தில் மற்ற படங்களின் வெளியீடு தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகும்.

அதாவது அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே படங்களையும் 2019 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இவையில்லாமல் வருகிற நவம்பர் 29ஆம் தேதியின் ரஜினியின் 2.0 படம் வெளியாகிறது. எனவே வெறும் 45 நாட்கள் இடைவெளியில் ரஜினியின் இரு படங்கள் வெளியாகுமா? என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

Rajinikanths Petta release may affect Ajith and Suriya movies

Overall Rating : Not available

Latest Post